Published:Updated:

பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!
பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!

சோ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!

ஷாப்பிங் என்றாலே முகம் மலரும் பலருக்கு! தேவையோ, தேவையில்லையோ... பார்ப்பதை எல்லாம் வாங்குகிற பழக்கமும் சிலருக்கு உண்டு. `பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்கிற அறிவிப்புக்குப் பிறகு மோகம் குறைந்திருக்குமோ? `இல்லை இல்லை... கிரெடிட் கார்டு மூலமாகப் பரிவர்த்தனை பலமடங்கு அதிகரித்துள்ளது. அண்மைக்காலமாக பெண்களும் அதிக அளவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்...' என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!

கார்டு... கட்டணம்

`கிரெடிட் கார்டு வைத்திருந்தால் பணத்துக்குப் பிரச்னையே இல்லை... சலுகைகளும் கிடைக்கும்' என்றே பலரும் நினைக்கிறார்கள். கார்டு வாங்கிய பிறகு எக்கச்சக்கமாக செலவு செய்ய ஆரம்பித்து,  ஒருகட்டத்தில் கடனாளியாகவே மாறிவிடுகின்றனர். அதன் பிறகுதான் `இது நமக்குச் சரிப்பட்டு வராது' என்று ஒதுங்குகிறார்கள். ஆனால், கார்டை பயன்படுத்தாவிட்டாலும், ஆண்டுதோறும் பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு, அந்தத் தொகைக்கு சேவை வரி, கல்வி வரி என இப்படிச் சேரும் தொகைக்கு வட்டியும் விதிக்கப்படும். இந்தப் பணத்தை கட்டவில்லை என்றால் உங்கள் பெயர் சிபில் டேட்டாவில் சேர்ந்து விடும்.

அதென்ன சிபில்?

சிபில் என்பது Credit Information Bureau (India) Ltd. இந்த அமைப்பானது இந்தியாவில் பல்வேறு வகை கடன் (லோன்) வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல் களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. எந்த வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் கடன் அல்லது கிரெடிட் கார்டு வாங்கியிருந்தாலும், உங்களைப் பற்றிய விவரம் சிபில் அமைப்பில் இருக்கும்.

ஏன் சிபில்?

இன்றைய வாழ்க்கைச்சூழலில் வீடு, கார், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள் என அத்தனைக்கும் கடன்தான். இது தவிர கல்விக் கடன், பெர்சனல்லோன் என பல வகைகள்.   இந்தக் கடன்களுக்காக விண்ணப் பிக்கும்போது முதலில் பார்க்கப்படுவதுதான் சிபில் ஸ்கோர். இந்த ஸ்கோர் அதிகமாக இருந்தால்தான் ஒருவருக்கு உடனடியாகக் கடன் கிடைக்கும்.

பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!உதாரணத்துக்கு... சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர் கடன் வாங்குகிறார். இவர் கடனை எப்படித் திரும்பச் செலுத்துகிறார் என்பதன் அடிப்படையிலேயே, அவருக்கு வேறொரு கடன் கிடைக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனை அவர் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், கன்னியாகுமரியோ, காஷ்மீரோ - வேறு எங்குமே கடன் கிடைக்காது. இப்படி, கடனை முறையாகத் திரும்பச் செலுத்துகிறவர்களுக்கு மட்டுமே கடன் தர வங்கிகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறையே சிபில் ரிப்போர்ட் மற்றும் ஸ்கோர்.

இப்போது அனைத்துவகை கடன்களும் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. உதாரணமாக...பெற்றோரின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், பிள்ளைகளுக்குக் கல்விக்கடன் கிடைக்காமல் போகலாம்.

சிபில்: கவனிக்க வேண்டியவை!

சிபில் ஸ்கோரில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து தனியார் வங்கி மேலாளர் விஜயகுமாரிடம் கேட்டோம்.

பெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்?!

``வங்கிக் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் சிபில் ரிப்போர்ட். இதிலுள்ள ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். இதில் அதிக ஸ்கோர் என்றால், குறைவான ரிஸ்க் உடையவர்கள், குறைந்த ஸ்கோர் என்றால் அதிக ரிஸ்க் உடையவர்கள் என்பதைக் குறிக்கும்.

தவணையை சரியாகச் செலுத்தி வந்தால், சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். கடன் கட்டி முடித்த 6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, ரிப்போர்ட் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்வது அவசியம். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், உடனடியாக வங்கியுடன் பேசி திருத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார் விஜயகுமார்.

இனி இலவசம்!

`தேவையில்லாத பொருட்களை வாங்கினால், உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்' என்பார்கள். ஆகையால், அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே கடன் வாங்குங்கள். இப்போது உங்கள் சிபில் ஸ்கோரை இணையம் (www.cibil.com) மூலம் விண்ணப்பித்து, எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். 550 ரூபாய் கட்டணம். இனி ஆண்டுக்கு ஒரு முறை சிபில் அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தர ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு