Published:Updated:

பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?

பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?

இனி வரும் காலத்தில்... எல்லாமே எலெக்ட்ரானிக்! - பா.விஜயலட்சுமி

பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?

இனி வரும் காலத்தில்... எல்லாமே எலெக்ட்ரானிக்! - பா.விஜயலட்சுமி

Published:Updated:
பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?

பணம் தேடி அலையும் பாரதம் உருவாகி 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஏடிஎம்-களில் 4,500 ரூபாய்க்கு அதிகமாகவும் 100 ரூபாய் நோட்டுகளாகவும் எடுக்க முடியாத சூழலில் பணிபுரியும் பெண்கள் தொடங்கி காய்கறி, மளிகை வாங்க கடைகளில் நிற்கும் பெண்கள் வரை எல்லா தரப்பு பெண்களுக்கும்  கணக்கில்லா பிரச்னைகள்.

பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?

எனினும், கேஷ்லெஸ் ட்ரான்ஸாக்‌ஷன் என்னும் பணமில்லா பரிமாற்ற முறையை அறிந்தவர்களால் இந்த டீமானிடை சேஷன் காலத்திலும் ஓரளவு சமாளிக்க முடிகிறது. அதென்ன கேஷ்லெஸ் ட்ரான்ஸாக்‌ஷன்? இணையதளப் பணப் பரிமாற்ற முறைகளைக் கையாள்வது எப்படி? விளக்குகிறார் ஐ.பி.எம் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திக்.

``முதலில் இணையதளப் பணப்பரிமாற்றம் என்றால் என்ன என்பதை உழைக்கும் மகளிர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கையில் பணமில் லாத நேரத்தில் கார்டுகள் மூல மாகவோ, மொபைல் ஆப், நெட் பேங்கிங் மூல மாகவோ பணம் செலுத்தும் முறை தான் இணையவழிப் பணப்பரிமாற்றம். முன் பெல்லாம் அதிக அளவில் பிரபலமாகாத இம்முறைகள், இப்போது 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மீதான தடையால் சிறிய கடைகளில்கூட அமலுக்கு வந்துள்ளன. அவற்றில் எளிதான நடைமுறைகளைக் கொண்டுள்ள சில ஆன்லைன் ட்ரான்ஸாக்‌ஷன் முறைகளை அறிந்திருக்க வேண்டும். கூடவே, சிறந்த இ-வேலட் முறைகளைத் தேர்ந் தெடுப்பதற்கான வழிமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும்.
 
ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும் போது தெரிந்திருக்க வேண்டிய நடைமுறைகள்...

 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஆன்லைன் பணப் பரி மாற்றத்துக்கும் ஆகும் காலம்

 

• ஆன்லைன் மூல மாக அனுப்ப முடிகின்ற அதிகபட்ச பணத்தின் அளவு

 

• அக்கவுன்ட் நம்பர், வங்கிப் பெயர்,  ஐ.எஃப்.எஸ்.சி கோடு போன்றவை

• ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் உண்மைத்தன்மை

 

• கஸ்டமர் கேர் மற்றும் டெக்னிக்கல் சப்போர்ட் சிஸ்டம்

• இந்த பாயின்ட்டுகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

 

• ஆர்டிஜிஎஸ் (RTGS), நெஃப்ட் (NEFT) போன்ற பணப்பரிமாற்ற முறைகளுக்கு கால அளவு உண்டு. `ஆர்டிஜிஎஸ்' மூலமாக காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுப்ப முடியும்.  நெஃப்ட் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும். 

ஐ.எம்.பி.எஸ் (IMPS), யூ.பி.ஐ (UPI), யூ.எஸ்.எஸ்.டி (USSD), டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், இ-வேலட்  ஆகியவை எந்த நேரமும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பணப்பரிமாற்ற முறைகள். இவை உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளும்கூட. இதில் இ-வேலட் முறைகள் மூலமாக மாதத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

பெண்Money - ஏடிஎம் தெரியும்... பேடிஎம் தெரியுமா?

எடுத்துக்காட்டாக, ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனமான பேடிஎம் டிஜிட்டல் வர்த்தகத்திலும் முன்னேறி வருகிறது. செல்போன் மற்றும் கணினி இரண்டிலும் செயல்படும் இந்தச் செயலியை உபயோகிக்க முதலில் தேவை இதில் ஒரு அக்கவுன்ட். உங்கள் பெயர், செல்போன் எண், இமெயில் ஐ.டி போன்றவற்றைக் கொண்டு இதை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேஷனாகவும் விளங்கும் பேடிஎம், உங்கள் மொபைல் எண்ணுடன் இணைந்திருக்கும். உதாரணமாக, காய்கறி வாங்கிவிட்டு கடைக்காரருக்கு நீங்கள் 100 ரூபாய் ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்றால், அவருடைய மொபைல் எண்ணை உங்களுடைய பேடிஎம் அக்கவுன்ட்டில் குறிப்பிட வேண்டும். அல்லது, அவருடைய பேடிஎம் பார்கோடினை உங்கள் மொபைல் மூலமாக ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

அவரும் பேடிஎம் உறுப்பினர் என்றால் அனுப்ப வேண்டிய தொகையை டைப் செய்து எளிதாகப் பணப்பரிமாற்றம் செய்துவிடலாம். இதேபோன்று கேஸ், எலெக்ட்ரிசிட்டி பில் போன்றவற்றையும் அனுப்பலாம். குறிப்பிட்ட தொகை உங்களுடைய வங்கியிலிருந்து, அவரது கணக்குக்குச் சென்று சேரும். அதே போல, உங்கள் பேடிஎம் கணக்குக்கு பிறர் அனுப்புகிற தொகையையும் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும்.

இதேபோன்ற நடைமுறையைத்தான் ஃப்ரீசார்ஜ், பி.ஹெச்.ஐ.எம் போன்ற செயலிகளும் மேற்கொள்கின்றன. சிறுசிறு மாற்றங்களைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான இ-வேலட் செயலிகளின் நடைமுறை ஒன்றுதான். வங்கிகளில் உங்களுடைய சேமிப்புக்கு ஏற்ப வட்டி, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உப யோகத்துக்காக விதிக்கப்படும் சேவை வரிகள் இந்த இ-வேலட்டுகளில் கிடையாது.

இ-வேலட் முறைகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் செயல்படும் நிலையிலான இன்டெர்நெட் கனெக்‌ஷன் அவசியம். அதில் இ-வேலட் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். எலெக்ட்ரானிக்  பணப்பரிமாற்றத்திலும் உங்கள் ராஜ்ஜியம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism