ம் நாட்டில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லைஃப்ஸ்டைல் மாற்றத்துக்கேற்ப குடும்பச் செலவுகள் உயர்கின்றன. இதை ஈடுகட்ட பெண்கள் வேலைக்குச் செல்வது அவசியமாகிறது. பல குடும்பங்களின் நிதித் தேவையில் சம பங்கை பெண்கள் அளித்து வருகிறார்கள்.    

பணிபுரியும் ஒவ்வொரு தனிநபருக்கும் நிதிப் பாதுகாப்பு (Financial protection) என்பது அவசியம். இந்த நிதிப் பாதுகாப்பை டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term insurance) அளிக்கும். பணிபுரியும் பெண்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சந்தீப் பத்ரா விளக்கமாகச் சொல்கிறார்.

“குடும்பத்தில் நிதித் திட்டமிடல் மேற்கொள்ளும் போது முக்கியமாகச் செய்ய வேண்டியது டேர்ம் இன்ஷூரன்ஸ்  எடுப்பது. ஆயுள் காப்பீடுகளில் மிக எளிமையானதும் பிரீமியம் செலவு குறைந்ததும் இதுவே. டேர்ம்  பிளான்  பாலிசி காலத்தில் பாலிசிதாரர் மரணம் அடைந்தால், அவரைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும்” என்றவரிடம், ‘ஒரு குடும்பத்தில் கணவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும்பட்சத்தில், மனைவிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் அவசியமா?’ என்று கேட்டோம்.

டேர்ம் பாலிசி... டேக் இட் ஈஸி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு குடும்பத்தின் மொத்த வருமானத்தைக் கருத்தில்கொண்டுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். கணவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்பட்சத்திலும், மனைவி பணிபுரிபவராக இருப்பின் மனைவி பெயரிலும் தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது மிகவும் அவசியம். அதேநேரத்தில் மனைவி, குடும்பத் தலைவியாக மட்டும் இருக்கிறபட்சத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தேவையில்லை. குடும்பத்துக்காக வருமானம் ஈட்டுபவராக இருந்தால், கணவர் போதுமான தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ்  எடுத்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், தனியாக எடுத்துக் கொள்வதும் அவசியம்.  

குடும்ப உறுப்பினரின் இழப்பை மனதளவில் ஈடு செய்ய முடியாது. அதேநேரத்தில், டேர்ம் இன்ஷூரன்ஸ் இழப்பீடு மூலம் வருமான இழப்பை ஈடுசெய்வதோடு, கடன்களையும் பொறுப்புகளை யும் சமாளிக்க முடியும். ஒருவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும்பட்சத்தில், அவர் இல்லாதபோது, குடும்பத்துக்கான கடன்களைக் கட்ட, பிள்ளைகளைப் படிக்க வைக்க யாரும் கஷ்டப்படத் தேவையில்லை.
‘எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்’ என்பது அடுத்த முக்கியமான கேள்வி. 

டேர்ம் பாலிசி... டேக் இட் ஈஸி!

பொதுவாக, எவ்வளவு தொகைக்கு டேர்ம் பிளான் எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதிமுறை இருக்கிறது. 40 வயதுக் குள் உள்ள ஒருவர், அவரின் ஆண்டுச் சம்பளத்தைபோல 20 முதல் 30 மடங்கு தொகைக்கு டேர்ம் பிளான் எடுக்க வேண்டும். நாற்பதுகளில் உள்ளவர்கள் ஆண்டு சம்பளத்தைப் போல 10 முதல் 20 மடங்கு தொகைக்கும், ஐம்பதுகளில் இருப்பவர்கள் ஆண்டுச் சம்பளத்தைப் போல 5 முதல் 10 மடங்கு தொகைக்கும் டேர்ம் பிளான் எடுப்பது அவசியம்.  இப்போதைய செலவுகள் மற்றும் எதிர்கால பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கவரேஜ் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவரின் இப்போதைய மாதச் செலவு ரூ.55 ஆயிரம் என வைத்துக்கொள்வோம். ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், குடும்பத் தலைவர் இல்லை என்றாலும், இழப்பீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு குடும்ப உறுப்பினர்களின் தேவையை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதாவது, இழப்பீடாகக் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 7% வட்டி அளிக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் சேமித்தால் மாதம் ஏறக்குறைய ரூ.58 ஆயிரம்  கிடைக்கும். இது குடும்பத்தினரின் அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்டுவதாக இருக்கும்.

டேர்ம் பாலிசி... டேக் இட் ஈஸி!

உதாரணத்துக்கு, ஒரு கோடி ரூபாய் கவரேஜ் அளிக்கும் (பாலிசிதாரர் வயது 30) டேர்ம் பிளான், டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆண்டு பிரீமியம் சுமார் பத்தாயிரம் ரூபாய்தான்” என்கிறார் சந்தீப்.

டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியத்தை இப்போது புரிந்து கொண்டீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism