Published:Updated:

``மியூரல் ஆர்ட் மூலமா நிறைவாச் சம்பாதிக்கிறேன்!" - கிராஃப்ட் பிசினஸ் சுதா

``மியூரல் ஆர்ட் மூலமா நிறைவாச் சம்பாதிக்கிறேன்!" - கிராஃப்ட் பிசினஸ் சுதா
News
``மியூரல் ஆர்ட் மூலமா நிறைவாச் சம்பாதிக்கிறேன்!" - கிராஃப்ட் பிசினஸ் சுதா

"மினியேச்சர், டால் மேக்கிங், ஜூவல்லரி மேக்கிங்தான் இப்போதைய டிரெண்ட். கிராஃப்ட் உங்கள் பிசினஸ்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா... அதுபத்தின ஏ டு இசட் தகவல்களில் நீங்க அப்டேட்டா இருக்கணும்."

ன்லைன் பிசினஸ், கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள், ரிட்டன் கிஃப்ட் பிசினஸ் மியூரல் ஆர்ட்னு நான் இப்போ பிஸி'' எனப் புன்னகைக்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா சந்திர நாராயணன். ``எனக்குச் சொந்த ஊரு திருச்சி. படிச்சது பி.எஸ்.சி சயின்ஸ். ஆர்வமோ கிராஃப்ட்ல இருந்தது. நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ எங்க பகுதியில் பலரின் வீடுகளில் கூடை பின்னும் வேலை செய்வாங்க. எனக்கும் அது மேலே ஆர்வம். `ஏதாவது சாப்பிட வாங்கிக்கோ'னு அம்மா கொடுக்கும் காசைச் சேர்த்து வெச்சு, கூடை பின்னும் வயர் வாங்குவேன். அதைவைத்து விதவிதமான கூடைகள் செஞ்சேன். ஒருகட்டத்துல எங்க வீடு முழுக்கச் சின்னதும் பெருசுமா கலர் கலர் கூடைகள் இருக்கும். அப்புறம் ரசனை மாற ஆரம்பிச்சது. டி.வியில வர்ற கிராஃப்ட் புரோகிராம் பார்த்து கிராஃப்ட் செய்ய ஆரம்பிச்சேன். ஆனால், அதில் காண்பிக்கும் சில பொருள்கள் எங்க ஊரில் கிடைக்காது. கிடைக்கிறதை வெச்சே செய்திருவேன். வீட்டுக்கு வரும் எல்லார்கிட்டேயும், `இது என் மகள் பண்ணினது'னு அம்மா பெருமையாக் காண்பிப்பாங்க. அந்த சந்தோஷம் ஆயிரம் ரூபாய் கொடுத்து கடைகளில் வாங்கும் அலங்காரப் பொருளில்கூட கிடைக்காது" என நெகிழ்கிறர் சுதா.

திருமணம் முடிந்ததும் கணவர் வேலை காரணமாக வட இந்தியாவுக்குக் குடியேறியிருக்கிறார். ``அங்கே கைவேலைப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதுக்கான எல்லாப் பொருள்களும் வட இந்தியாவில் ரொம்பக் குறைவான விலையில் கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பெயின்ட்டிங், மியூரல் வேலைப்பாடுகள், வால் மியூரல், மினியேச்சர்னு நிறைய கத்துக்கிட்டேன். வட இந்தியாவில் நிறைய பேர் இத்தகைய வேலைப்பாடுகள் செய்வாங்க. அதனால், ஒரு கடை போட்டு பிசினஸ் பண்ண முடியாதுங்கிறதை உணர்ந்தேன். ஸோ, என் கவனம் ஆன்லைன் பிசினஸ் பக்கம் திரும்புச்சு. நம்ம மாடல் பிடிச்சாப் போதும் ஆர்டர் தானா வந்து குவிய ஆரம்பிக்கும். அதுதான் ஆன்லைன் பிசினஸோட சீக்ரெட். எனக்கு அந்த சீக்ரெட் ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே நான் செய்ற கைவினைப் பொருள்களை எனக்கான ஃபேஸ்புக் பக்கத்துல ஃபோட்டோ எடுத்துப் போட ஆரம்பிச்சேன். நிறைய ஆர்டர் வர ஆரம்பிச்சது. பிசினஸ் நல்லா போயிட்டு இருந்தது.

கணவரோட வேலை காரணமா மறுபடியும் மாற்றல் ஆச்சு. சென்னைக்கு வரவேண்டிய சூழ்நிலை. சென்னையில பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். கிராஃப்டை பொறுத்தவரை, ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும்போதே கத்துகிடணும். நாம கத்துக்கிடுறதை மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தி பல ஆயிரங்கள் சம்பாதிக்கலாம். மினியேச்சர், டால் மேக்கிங், ஜூவல்லரி மேக்கிங்தான் இப்போதைய டிரெண்ட். கிராஃப்ட் உங்கள் பிசினஸ்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா... அதுபத்தின ஏ டு இசட் தகவல்களில் நீங்க அப்டேட்டா இருக்கணும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு விஷயம் டிரெண்ட் ஆகுதுனா அதை எல்லாரும் செய்ய நினைப்பாங்க. ஆனா அதுல நாம என்ன வெரைட்டி காட்டுறோம்ங்கிறதுதான் முக்கியம். சில பொருள்கள் வந்த வேகத்துலேயே அவுட் ஆஃப் பேஷன் ஆகிடும். அப்ப நாம கத்துக்கிட்டதை ரிட்டர்ன் கிஃப்டா குறைஞ்ச விலையில கொடுத்து பிசினஸ் பார்க்கலாம். ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகளுக்கு மவுசு குறைந்ததும், நான் அதை ரிட்டன் கிஃப்ட்களாக விற்க ஆரம்பிச்சேன். அவுட் ஆஃப் டிரெண்டிலும் எனக்கு ஆர்டர்கள் குவிஞ்சது. என்னைப் பார்த்து என் மகளும் கிராஃப்டில் ரொம்ப ஆர்வம் ஆகிட்டா. என்கிட்டயே அவளும் கிராஃப்ட் கத்துக்கிட்டா. இப்ப நாங்க ரெண்டு பேரும் இணைஞ்சு பிசினஸ் பண்றோம். சிலர் கிராஃப்ட் செய்கிறதுக்குத் தேவையான பொருளை மொத்தமாக வாங்குவாங்க. அப்படியில்லாமல், தேவைக்கேற்ப வாங்கிப் பயன்படுத்தி, எப்பவும் டிரெண்டில் இருந்தால் சக்சஸ் ஆகலாம்" என்கிறார் சுதா சந்திர நாராயணன்.