`ஸ்வீட் எடு... கொண்டாடு’ காலம் மாறி, இன்று பிரியாணி சீஸன். எங்கும் பிரியாணி... எல்லாவற்றுக்கும் பிரியாணி. பிளேட் அளவு, பக்கெட் வடிவத்துக்கு மாறவும் இந்த பிரியாணிப் பாசமே காரணம். மனிதர்களுக்குக் கொண்டாட்டங்களுக்கா பஞ்சம்? ஏதாவது நடந்தால் மட்டுமன்றி, எதுவுமே நடக்காவிட்டாலும் ட்ரீட் கேட்கும் மக்களே... தினம் தினம் பிரியாணி சாப்பிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?அதற்காக பிரியாணியை விட்டுக்கொடுக்க முடியுமா என்று கேட்கிறீர்களா?

பிரியாணியையும் விட்டுக்கொடுக்காமல், ஆரோக்கியத்தையும் கட்டிக்காப்பது சாத்தியமா?

`சாத்தியம்தான்’ என்கிறார் சரஸ்வதி. சென்னையைச் சேர்ந்த இவர் கேட்டரிங் பிசினஸில் கலக்குபவர். சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என வழக்கமான வகையறாக்களுடன், ஸ்பெஷல் கொண்டாட்டங்களுக்கென பிரியாணி வகையறாக்களும் செய்து கொடுத்து அசத்துபவர். வழக்கமான கொழுப்பு நிறைந்த பிரியாணியாக அல்லாமல், ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும் பிரியாணி வகைகள் இவரது ஸ்பெஷல்.

‘`இயல்பிலேயே சமையல் ஆர்வம் அதிகம். எட்டு வருஷங்களா கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். விசேஷங்களுக்கும், பார்ட்டிகளுக்கும் பிரியாணி ஆர்டர் வரும். ஆர்டர் கொடுக்கும்போதே ‘ரொம்ப நெய் வேண்டாம்... ஆனா, டேஸ்ட் மாறாம பார்த்துக் கோங்க’ என்கிற ரேஞ்சுல கேட்பாங்க. பிரியாணின்னாலே நிறைய நெய்யும், மட்டன், சிக்கனுமாதான் இருக்கும்னு தெரியும். அதையே ஏன் ஆரோக்கிய உணவா மாத்தக்கூடாதுனு யோசிச்சேன். தவிர, தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒண்ணும் செய்யாதபடியான அயிட்டங்களைத் தேடிப்பிடிச்சு, ஒவ்வொரு நாள் ஒவ்வொண்ணா ட்ரை பண்ணினேன். கேட்டரிங் ஆர்டர் எடுக்கும்போது இதையும் டேஸ்ட்டுக்குக் கொஞ்சம் கொடுத்து அவங்க என்ன சொல்றாங்கனு பார்த்தேன். எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சது. அப்படியே வாய்வழியா பரவி, நான் பண்ற ஹெல்த்தி பிரியாணி வகைகளுக்கு ஆர்டர் அதிகமாக ஆரம்பிச்சிருச்சு...’’ என்கிற சரஸ்வதி, வாழைத்தண்டு, வாழைப்பூ, மூலிகைகள், பலாக்காய், முளைகட்டிய நவதானியங்கள், கீரை வகைகள், காளான், பீட்ரூட், நெல்லிக்காய், மரவள்ளிக்கிழங்கு எனப் பதினைந்து வகை பிரியாணிகள் செய்கிறார்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு... லாபம் எப்படி?

காய்கறிகள், கீரைகள் என பிரியாணிக்கான பிரதான பொருள்கள், மளிகை, எண்ணெய், மசாலா என ஒவ்வொரு வகை பிரியாணிக்கும் கிலோ ஒன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் முதலீடு தேவை. பேக்கிங் மெட்டீரியல்களுக்கான செலவு தனி. அது நாம் எப்படி பார்சல் செய்து கொடுக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்தது. பிளாஸ்டிக்கைத் தவிர்க்க நினைப்போர், பாத்திரங்கள் கொண்டுவரச் சொல்லியும் பார்சல் செய்து கொடுக்கலாம். இதில் 50 சதவிகித லாபம் நிச்சயம்.

விற்பனை வாய்ப்பு?

வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித ருசி பிடிக்கும். ஒரே வீட்டில் நான்கைந்து வகைகளுக்கு ஆர்டர் எடுக்க முடியும். பார்ட்டி, விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் பிடிக்கலாம். உடல்நலம் குறைந்தவர்களும் சாப்பிடலாம் என்பதால் மூலிகை பிரியாணி, வாழைத்தண்டு பிரியாணி போன்றவற்றுக்கு ஸ்பெஷல் ஆர்டர் பிடிக்கலாம். பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளுக்கு நவதானிய பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி போன்றவை மதிய உணவுக்கு ஏற்றவை என்பதால் தினம் ஒரு வெரைட்டி கொடுப்பதாக ஆர்டர் எடுக்கலாம்.

கடன் வசதி?

மகளிர் சுயஉதவிக் குழுவில் உள்கடன் பெறலாம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் 10 வகையான பிரியாணி செய்யக் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்குமான செய்முறை வேறுபடும். 500 ரூபாய் கட்டணம்.