Published:Updated:

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

ஹேமலதாநீங்களும் செய்யலாம்சாஹா - படம் : ஜெ.வேங்கடராஜ்

க்னி நட்சத்திரத்துக்கு முன்பே அனலாகத் தகிக்கிறது வெயில். காலையில் எழுந்ததும் ஆவி பறக்கக் குடிக்கிற காபிக்குப் பதில் கோல்டு காபி தேவலை என்கிற அளவுக்கு வெயிலின்மீது வெறுப்பு பலருக்கும். குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். சாதாரணமாகவே சாப்பிட அடம்பிடிக்கிற பிள்ளைகள், கோடை நாள்களில் உணவின் பக்கமே திரும்ப மாட்டார்கள். ஐஸ்க்ரீமிலும் கூல் டிரிங்க்ஸிலுமே அவர்களின் வயிறு நிறையும். ‘ஐஸ்க்ரீம் உடம்புக்கு ஆகாதே’ எனக் கவலைப்படுகிற அம்மாக்களுக்கு ஆரோக்கியமான ஐஸ்க்ரீம்களை அறிமுகம் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா.  

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

‘`எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஆரோக்கியமான சமையல் பத்தின ஆர்வம் எனக்கு அதிகம். அந்த மாதிரியான விஷயங்களைத் தேடித் தேடிப் போய் கத்துப்பேன். ஓர் அம்மாவா என் குழந்தைக்கு நான் கொடுக்கிற ஒவ்வொரு வேளை உணவும் ஆரோக்கியமானதா இருக்கணும் என்பதில் கவனமா இருப்பேன். குழந்தைகள் அதிகம் விரும்பும் உணவுகள் பெரும்பாலும் ஆரோக்கியமில்லாதவையா இருக்கும். கொஞ்சம் முயற்சி செய்தால், அவற்றையே ஆரோக்கியமானவையாகவும் குழந்தைகளுக்குப் பிடிச்ச சுவையிலேயும் கொடுக்க முடியும்’’ என்கிறவர், ஐஸ்க்ரீம் தயாரிப்பிலும் அதே முயற்சிகளை மேற்கொள்கிறார். இவர் தயாரிக்கிற ஹோம்மேடு ஐஸ்க்ரீம்களில் பழங்களும் சிறுதானியங்களுமே பிரதானமாக இருக்கும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

‘`குழந்தைகளைப் பழங்கள் சாப்பிட வைக்கிறது பெரிய போராட்டம். அவங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீம்லயே பழங்களைச் சேர்த்துக் கொடுக்கிறது மூலமா அதைச் சமாளிக்கலாம்’’ என்பவர் வாழை, சப்போட்டா, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி என எல்லா வகையான பழங்களிலும் ஐஸ்க்ரீம் தயாரிக்கிறார். கூடவே விதவிதமான குல்ஃபியும். கடைகளில் விற்பது போன்ற ஐஸ்க்ரீம் கேட்பவர்களுக்குச் செயற்கை எசென்ஸ் சேர்த்தும் தயாரிக்கக் கற்றுத்தருகிறார். 

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

*பழங்கள், பால், நட்ஸ், சிறுதானியங்கள், இனிப்பு, ஐஸ்க்ரீம் தயாரிப்புக்கான அடிப்படைக் கலவைகள், மோல்டுகள் மற்றும் பிளெண்டர். இவற்றில் பிளெண்டர் மற்றும் மோல்டுகளுக்கான முதலீடு ஒருமுறை செய்யப்படுவதுதான். மொத்த முதலீடாக 2 ஆயிரம் ரூபாய் போதும். 

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

விற்பனை வாய்ப்பு? லாபம்?

*ஆர்டருக்கேற்ப அவ்வப்போது ஃப்ரெஷ் ஷாகத் தயாரித்துக் கொடுப்பது உங்கள் பிசினஸுக்கு நற்பெயர் வாங்கித் தரும். 

*சின்னச் சின்ன பிறந்த நாள் பார்ட்டிகள், கெட் டுகெதர், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றுக்கு ஆர்டர் எடுக்கலாம்.

*குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களின் சுவையைக் கேட்டுச் செய்து கொடுக்க முடியும் என்பது இதில் ப்ளஸ்.

*பிசினஸ் ஓரளவுக்கு வளர்ந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யலாம். அடுத்தகட்டமாகக் கல்யாணம், ரிசப்ஷன், அலுவலக பார்ட்டி எனப் பெரிய அளவிலான ஆர்டர்களுக்குப் போகலாம்.

*குல்ஃபி ஸ்டிக் ஒன்றை 20 ரூபாய்க்கும், மற்ற ஐஸ்க்ரீம்களை அவற்றின் ஃப்ளேவரைப் பொறுத்து 500 மில்லியை 50 ரூபாயிலிருந்து விற்கலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்.

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

கடன் வசதி?

*பல வீடுகளிலும் பிளெண்டர் இருக்கும். ஆரம்பத்தில் மோல்டு இல்லாமல் சின்னச் சின்ன கப்புகள், டம்ளர்களிலும் செய்து பழகலாம். பழங்களும் பாலும் இருக்கும். ஐஸ்க்ரீம்களுக்கான அடிப்படை பவுடர்கள் மட்டுமே வாங்க வேண்டியிருக்கும். குறைந்த அளவிலோ, நான்கைந்து பேர் இணைந்து ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டோ அந்தச் செலவையும் பிரித்துக்கொள்ளலாம்.

*மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்போர் உள் கடன் வசதி மூலமும் பிசினஸைப் பெருக்கலாம்.

ஜில்லுன்னு தயாரிக்கலாம் ஜம்முன்னு சம்பாதிக்கலாம்!

பயிற்சி?

*ஒருநாள் பயிற்சியில் ஐந்து வகை ஐஸ்க்ரீம் மற்றும் குல்ஃபி தயாரிப்பு கற்றுக்கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism