Published:Updated:

நீங்களும் செய்யலாம்

நீங்களும் செய்யலாம்
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்

சாஹா, படங்கள் : வீ.நாகமணி

நீங்களும் செய்யலாம்

சாஹா, படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
நீங்களும் செய்யலாம்
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்

இலை வடாம் பிசினஸ் - சுலபம் ப்ளஸ் லாபம்! - ரமா

மைப்பதற்குக் கைவசம் காய்கறிகள் இல்லாதபோதும், காய்கறிகளின் விலை கன்னாபின்னாவென எகிறும்போதும் எல்லோருக்குமான சாய்ஸ் அப்பளமும் வற்றல், வடாம் வகையறாக்களும்தான். ‘ஆர்வம் இருக்கு. ஆனா, நேரமும் வீட்டுல இடமும்தான் இல்லை’ என்கிறவர்களுக்கு வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த ரமா.

‘`பத்தாவது வரைதான் படிச்சிருக்கேன். காலங்காலமா எங்கம்மா வற்றல், வடாம் போடறதைப் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். அப்படியே நானும் கத்துக்கிட்டேன். அக்கம்பக்கத்துல இருந்த வேலைக்குப் போற பெண்களுக்கு முதல்ல ஆர்டருக்கேற்ப செய்து கொடுத்திட்டிருந்தேன். ஒருகட்டத்துல மாசாமாசம் மளிகைச் சாமான்கள் வாங்கற மாதிரி, இதையெல்லாமும் மொத்தமா வாங்கற அளவுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே வாய்வழி விளம்பரம் மூலமா இன்னிக்கு இது எனக்கு முழுநேர பிசினஸாகவே மாறியிருக்கு...’’ என்கிற ரமா, பத்து வருடங்களாக இந்த பிசினஸில் பிஸி.

ரமாவின் தயாரிப்புகளில் வருடம் முழுவதும் ஹாட் சேல்ஸ் ஆகும் பட்டியலில் இலை வடாமுக்கு முதலிடம். ‘`குழந்தை பெற்ற பெண்களுக்குக் கொடுக்கிற பத்திய உணவுகளில் இலை வடாமும் இருக்கும். மற்ற வடாம், வற்றலை எல்லாம் வெயில் காலத்துலதான் செய்ய முடியும். ஆனா, வருஷம் முழுக்கச் செய்யக்கூடியது இலை வடாம்...’’ என்கிறார்.

நீங்களும் செய்யலாம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

வடாம் செய்வதற்கான பச்சரிசி, ஜவ்வரிசி, உப்பு, பச்சை மிளகாய், ஓமம், சீரகம், தக்காளி, புதினா, இலை வடாம் செய்வதற்கான தட்டு, வைக்கோல், ஸ்டாண்டு, வாழையிலை அல்லது பாதாம் இலை. ஒரு கிலோ அரிசி, ஜவ்வரிசி கலவை, மற்ற பொருள்கள் என எல்லாவற்றுக்குமான முதலீடு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் தேவை. எடை மெஷின் வாங்க வேண்டும் என்றால் கூடுதலாக 500 ரூபாய் தேவை.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

ஒரு கிலோ அரிசி, ஜவ்வரிசிக் கலவைக்கு மீடியம் சைஸ் வடாம் என்றால் 100 எண்ணிக்கை கிடைக்கும். அதை கால் கிலோ 80 ரூபாய்க்கு விற்கலாம். அளவைப் பொறுத்து விலை வேறுபடும். பெரிய தட்டு அளவுக்கும் செய்யலாம். அதை கால் கிலோ அளவு 100 ரூபாய்க்கு விற்கலாம்.

50 சதவிகிதம் லாபம் பார்க்கலாம்.

முதல் நிலையாக வீடுகளில் ஆர்டர் பிடிப்பதுதான் பிசினஸை வளர்ப்பதற்கான சிறந்த வழி. வாய்வழி விளம்பரம் எப்போதும் சக்தி வாய்ந்தது. அருகிலுள்ள கடைகள், கேட்டரிங் கான்ட்ராக்டர்கள், உணவு விடுதிகள் போன்றவற்றில் மொத்தமாக ஆர்டர் எடுக்கலாம்.

நீங்களும் செய்யலாம்

கடன் வசதி?

முதல் செட் வடாம்களை விற்று வரும் லாபத்தில் பிசினஸை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்போர் உள்கடன் வசதி பெற்றும் தொழிலை விரிவுபடுத்தலாம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் ஐந்து வகையான சுவைகளில் இலை வடாம் செய்யக் கற்றுக்கொள்ள 500 ரூபாய் கட்டணம்.

பிடித்ததைச் சமைப்பது பிரமாதமான பிசினஸ்! - லீலாவதி

ட்லி, தோசை, ஆப்பம், அடைக்கான மாவு வகைகள் ரெடிமேடாகக் கடை களில் கிடைக்கின்றன. ரெடிமேட் சப்பாத்தி, பூரி, பரோட்டாக்களுக்கும் பஞ்சமில்லை. அப்படியே சாப்பிடலாம் என்கிற மாதிரி இடியாப்பமும் கிடைக்கிறது. `எல்லாம் சரிதான். இவற்றை எல்லாம் வெறுமனே சாப்பிட முடியுமா? டிபன் செய்வதைவிடவும் சிரமமான வேலை அதற்கான சைடிஷ் செய்வதுதானே... அதற்குத் தீர்வே கிடையாதா?’ என்பதே வேலைக்குச் செல்கிற, வீட்டில் சமைக்க முடியாத பலரின் புலம்பல். சென்னையைச் சேர்ந்த லீலாவதியிடம் இருக்கிறது இதற்கான தீர்வு. இட்லி முதல் புட்டு வரை அனைத்துக்குமான சைடிஷ்களைச் செய்து தருவதுதான் இவரது முழுநேர வேலை.

‘`அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி படிச்சிருக்கேன். எந்த ஹோட்டலில் என்ன சாப்பிட்டாலும் அது பிடிச்சிருந்தா, உடனே அந்தச் சமையல்காரரைத் தேடிப்பிடிச்சு ரெசிப்பி கேட்டுக் கத்துப்பேன். வீட்டுல வந்து செய்து பார்ப்பேன். அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கு டேஸ்ட்டுக்குக் கொடுத்தபோது, அவங்க வீட்டுல நடக்கிற சின்னச் சின்ன விசேஷங்களுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. எனக்குப் பிடிச்ச விஷயத்தையே இப்படி பிசினஸாகவும் செய்ய முடியும் என்பதே சந்தோஷமா இருக்கு’’ என்கிற லீலாவதி... வடகறி, டிபன் சாம்பார், அவியல், கடலைக்கறி, குருமா, சொதி, கத்திரிக்காய் பச்சடி, சன்னா, தால், காலிஃப்ளவர் கிரேவி என விதவிதமான அயிட்டங்களில் அசத்துகிறார்.

நீங்களும் செய்யலாம்

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

பத்து வகையான சைடிஷ் (ஒவ்வொன்றும் ஒரு கிலோ அளவுக்கு) செய்ய... மசாலா, புளி, எண்ணெய், உப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றுக்கு 1,500  ரூபாய் முதலீடு தேவை. எடை மெஷினுக்கான முதலீடு தனி.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

அக்கம்பக்கத்து வீடுகளில் விற்பனை செய்யலாம். வேலைக்குச் செல்கிறவர்களிடம் முதல் நாளே விருப்பம் கேட்டு அடுத்த நாளைக்கான மெனுவைத் திட்டமிடலாம். இட்லி, தோசை மாவு வாங்குகிறவர்கள், அங்கேயே சைடிஷ் வகையறாக்களையும் வாங்கிச் செல்வார்கள் என்பதால் மாவுக் கடைகளில் பேசி ஆர்டர் பிடிக்கலாம். சின்னச் சின்ன விசேஷங்களுக்கு சைடிஷ்ஷுக்கு மட்டும் ஆர்டர் வாங்கலாம். 150 கிராம் அளவு சைடிஷ்ஷை (அயிட்டத்தைப் பொறுத்து) 15 முதல் 20 ரூபாய் வரை விற்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.

நீங்களும் செய்யலாம்

கடன் வசதி?

வீட்டுக்குச் செய்வதிலேயே ஆரம்பத்தில் கொஞ்சம் கூடுதல் அளவு செய்து சிறிய அளவில் விற்பனையைத் தொடங்கலாம். அதில் வரும் லாபத்தை வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருந்தால் உள்கடன் வசதி பெற்றும் பிசினஸை விரிவுபடுத்தலாம்.

பயிற்சி

10 வகையான சைடிஷ் செய்யக் கற்றுக்கொள்ள ஒரு நாள் பயிற்சிக்கு 750 ரூபாய் கட்டணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism