Published:Updated:

நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்

நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்

வயது ஒரு தடையல்ல வெ.வித்யா காயத்ரி

நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்

வயது ஒரு தடையல்ல வெ.வித்யா காயத்ரி

Published:Updated:
நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்

‘`அங்க பார்த்தீங்களா... அந்த தாத்தா பாட்டி எத்தனை வெரைட்டி ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணி சந்தோஷமா சாப்பிடுறாங்க! எங்க கஃபே உணவுகள் அவங்க உடலுக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கை, இத்தனை உணவுகளை அவர்களை ஆர்டர் செய்யத் தூண்டும் சுவை... நாங்க வெற்றி பெற்றுட்டோம்தானே?” - கண்கள் மின்னக் கேட்கிறார், 22 வயதில் தொழில்முனைவோராகக் கலக்கிக்கொண்டிருக்கும் அஷ்வினி ஸ்ரீநிவாசன். சென்னை, நங்கநல்லூரில் உள்ள ‘80 Degrees East’ என்கிற டிராவல் தீம்டு கஃபேவின் உரிமையாளர்களில் ஒருவர். வித்தியாசமான வடிவமைப்பு, வெரைட்டி உணவுகள் என வெஜ் பிரியர்களுக்காக மணக்கும் இந்த உணவகம் தொடங்கிய கதைக்கு விதை... நட்பு என்கிறார் அஷ்வினி.

‘`நான் பிறந்து, வளர்ந்தது சென்னை. அப்பா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அம்மா இப்போ வேலையைவிட்டுட்டு, ஹோம்மேக்கரா இருக்காங்க. அண்ணன் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறான். இப்படி பிசினஸுக்குச் சம்பந்தமில்லாத குடும்பம். சின்ன வயசுலயிருந்தே எனக்கு க்ரியேட்டிவா யோசிக்கறது பிடிக்கும். அதைவிட, ஹார்டுவொர்க் பண்ண ரொம்பப் பிடிக்கும். பி.டெக் இன்ஜினீயரிங் படிப்பை நான் முடிக்கிற நேரம், ரெண்டு கம்பெனிகளில் ப்ளேஸ் ஆகியிருந்தேன். ஆனா, என் நீண்டகால நண்பரான ப்ரனேஷ், அவரோட ‘ஸ்டுடியோ 31’ என்ற வெடிங் போட்டோகிராபி ஸ்டுடியோவில் என்னை ஜாயின் பண்ணச் சொன்னார். பொதுவா எங்க ரெண்டு பேருடைய எண்ண ஓட்டமும் ஒன்றாக இருக்கும் என்பதால், நானும் சம்மதிச்சேன்.

நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும்! - அஷ்வினி ஸ்ரீநிவாசன்

ஒரு எட்டு மாசம் கழிச்சு ப்ரனேஷ், ‘நாம ஏன் ஒரு புது ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கக்கூடாது?’ன்னு கேட்டார். முதல்ல எனக்கு யோசனையா இருந்தது. என் வீட்டிலும், மற்றவங்களும் எனக்கு 21 வயசுதான் என்பதை ஒரு குறையாகப் பார்த்தாங்க. ப்ரனேஷ் மட்டும் ‘உன்னால முடியும்’னு நம்பிக்கையோடு சொன்னார். என் பெற்றோர், ‘சரி, உனக்கு தைரியம் இருந்தா பண்ணு’ன்னு சுதந்திரம் கொடுத்தாங்க. ஆரம்பத்தில் பிசினஸுக்குத் தேவையான முதலீட்டை ப்ரனேஷ் கொடுத்து, பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சார். நான் நிர்வாகத்தைப் பார்த்துக்கிட்டேன். டிராவல் தீம்டு கஃபேவாக இதை உருவாக்கினோம். அதாவது, மக்களுக்கு எப்பவுமே வெவ்வேறு நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளை, ஒரே இடத்தில் சாப்பிடுறது பிடிக்கும் இல்லையா? அந்த எதிர்பார்ப்பை அடிப்படையாகக்கொண்டுதான் எங்க கஃபேவின் ரெசிப்பிகளைத் தயார் செஞ்சோம். உலகின் பல நாடுகளின் பயணங்களின்போது ஈர்க்கிற கான்டினென்டல் வெஜ் உணவு வகைகள்தான் எங்கள் மெனு. அதற்கு ஈடுகொடுக்கும் இன்டீரியர், வாடிக்கையாளர்கள் இங்கே கழிக்கிற பொழுதை அழகாக்கும்’’ என்ற அஷ்வினி,

‘`எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனா, உணவில் நிறை குறைகளைத் துல்லியமாகச் சொல்லத் தெரியும். அதனால எங்க ரெசிப்பிகளில் சின்னக் குறை இருந்தாக்கூட சரி செஞ்சுடுவேன். பொதுவா, நான்-வெஜ் சாப்பிடுறவங்களுக்குத்தான் விதவிதமான ரெசிப்பிகள் இருக்கும். அதனால், வெஜ் பிரியர்களை மகிழ்விக்கும் விதமான ஸ்பைஸி உணவு வகைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கினோம். சைவப் பிரியர்கள் அதிகமிருக்கிற நங்கநல்லூரில் எங்கள் கஃபேவை தொடங்கினோம். ஆரம்பித்து ஒரு வருடம் ஆகுது’’ என்பவர், இப்போது தொழிலில் 30% லாபம் எடுப்பதாகக் கூறுகிறார்.

‘`கிடைக்கிற லாபத்தை அடுத்தடுத்து பிசினஸை டெவலப் பண்றதுக்காக முதலீடு பண்றோம். இப்போ எங்ககிட்ட 10 பேர் வேலை பார்க்கறாங்க. ‘இந்த வயசுல பிசினஸா?’னு என்னை நம்பிக்கை இல்லாம பார்த்தவங்க எல்லாம், ‘இந்த வயசுலேயே எப்படி சாதிச்சுட்டா பாரு’னு என் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்படுறாங்க; பாராட்டுறாங்க.  இது என் தனிப்பட்ட வெற்றின்னு சொல்ல முடியாது; எங்க டீமின் ஒற்றுமைக்குக் கிடைச்ச பரிசு. உதாரணமா, ‘80 டிகிரீஸ் ஈஸ்ட்’ என்கிற பெயரை ப்ரனேஷின் மனைவிதான் தேர்ந்தெடுத்தார். நல்ல நண்பர்கள் கைகோத்து முயன்றால், நீள் வானமும் வசப்படும்’’ எனப் புன்னகைக் கிறார்  இளம்புயல் அஷ்வினி!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism