Published:Updated:

டாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்! - மகேஸ்வரி

டாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்! - மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
டாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்! - மகேஸ்வரி

நீங்களும் செய்யலாம் - டாப்ஸ்சாஹா, படம் : பா.காளிமுத்து

வீன உலகப் பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட் உடையாக மாறியிருக்கிறது டாப்ஸ். சல்வாருக்கும் பொருந்தும்; ஸ்கர்ட், ஜீன்ஸ் உடனும் அணியலாம்; கூடுதல் வேலைப்பாட்டோடு இருந்தால் அதையே பார்ட்டி உடையாகவும் மாற்றிக்கொள்ளலாம். எங்கேயும் எப்போதும் வசதியான உடையும்கூட. ஆனாலும், பிராண்டட் என்கிறபோது அதன் விலை, சேலை விலையை மிஞ்சிவிடும். ``தையல் கத்துக்கோங்க. டாப்ஸ் தைக்கிறதுல ஸ்பெஷலைஸ் பண்ணுங்க. விதவிதமா போட்டுக்கலாம். விரும்பினா நீங்களே டாப்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி.

‘`படிச்சது பி.ஏ தமிழ் இலக்கியம். அப்பாவும் தாத்தாவும் டெய்லர்ஸ். அதனால சின்ன வயசுலேருந்தே தையல் மெஷின் சத்தத்தோடும் நூல் வாசனையோடும் வளர்ந்திருக்கேன். 12 வருஷங்களா தைக்கிறேன். ஒவ்வொரு நிமிஷமும் நம்மை அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தால்தான் இந்த உலகத்துல தாக்குப்பிடிக்க முடியும். அதனால ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சேன். ஃபேஷன் துறையில புதுசு புதுசா என்னவெல்லாம் வந்துக்கிட்டிருக்குனு கவனிச்சிட்டே இருப்பேன்’’ என்கிற மகேஸ்வரி, டாப்ஸ் தைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.

எத்தனை மாடல்... என்ன ஸ்பெஷல்?

சுடிதாருக்கான டாப்ஸ், குர்தி, அம்ப்ரெல்லா டாப்ஸ், ஜீன் டாப்ஸ் என நிறைய வெரைட்டி உண்டு. சல்வாருக்கான டாப்ஸ் எல்லா வயதுப் பெண்களுக்குமானது. காலரும் முழங்கை வரை ஸ்லீவ்வும் வைத்த குர்தி, வேலைக்குப் போகிறவர்களின் சாய்ஸ்.  நீளம் குறைவான டாப்ஸ், ஜீன்ஸ் விரும்பிகளுக்கானது. இந்த மூன்றும்தான் அடிப்படை மாடல்கள். இவற்றைத் தைக்கத் தெரிந்துகொண்டாலே ஆயிரக்கணக்கான டிசைன்களை உருவாக்கலாம்.

டாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்! - மகேஸ்வரி

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

தையல் மெஷின் அவசியம். அது சாதாரண மெஷினாகவோ, பவர் மெஷினாகவோ இருக்கலாம். ஒரு மெஷின் போதும். பவர் மெஷின் 25 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்.  பெரிய அளவில் பிசினஸாகச் செய்ய விரும்புவோருக்கானது அது. மற்றவர்கள் சாதாரண மெஷினை (சிறியது) 6,500 ரூபாய்க்கும், பெரியதை 10 ஆயிரம் ரூபாய்க்கும் வாங்கலாம். ஓரளவுக்கு முதலீடு செய்ய வசதியிருப்போர், பெரிய மெஷினை வாங்கி, அதில் மோட்டார் (ரூ.1,500) ஒன்றைப் பொருத்திக்கொள்ளலாம். அதுவும் பவர் மெஷின் போலவே செயல்படும். ஏற்கெனவே மெஷின் வைத்திருப்பவர்கள், தனியே மோட்டார் மட்டும் வாங்கி, மெக்கானிக்கிடம் சொல்லிப் பொருத்திக்கொள்ளலாம்.

ஊசி, நூல்கண்டுகள், கத்தரிக்கோல், டேப் உள்ளிட்ட பொருள்களுக்கு 300 ரூபாய் தேவை. மெட்டீரியல் வாங்கித் தைத்தும் விற்கலாம். தரமான மெட்டீரியல் மீட்டர் 80 ரூபாயிலிருந்து கிடைக்கும்.  இரண்டு முதல் இரண்டரை மீட்டரில் டிசைனுக்கேற்ப ஒரு டாப் தைத்துவிடலாம். ஒரு நாளைக்கு ஐந்து செட் தைக்கலாம்.

லாபம்? விற்பனை வாய்ப்பு?

மெட்டீரியலுடன் சேர்த்து ஒரு டாப் தைக்க 200 ரூபாய் செலவாகிறது என்றால், அதை 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கலாம். கடைகளில் அதையே 500 ரூபாய்க்கு விற்பார்கள். மொத்தவிலைக் கடைகளில் மெட்டீரியல் எங்கு மலிவாகக் கிடைக்கும் எனத் தெரிந்து வாங்கினால் நமக்கான செலவு இன்னும் குறையும்.

கடன் வசதி?

முதலில் மற்றவர்கள் கொடுக்கும் துணியில் தைத்துக்கொடுக்கலாம். அடுத்தகட்டமாக நாமே மெட்டீரியல் வாங்கித் தைத்து பிசினஸ் செய்யலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்போருக்கு உள்கடன் வசதியும் கிடைக்கும்.

பயிற்சி?

மூன்று மாடல் டாப்ஸ் தைக்கக் கற்றுக்கொள்ள ஒருநாள் போதும். கட்டணம் ஆயிரம் ரூபாய்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சல்வாருக்கான டாப்ஸ் எல்லா வயதுப் பெண்களுக்குமானது. காலரும் முழங்கை வரை ஸ்லீவ்வும் வைத்த குர்தி, வேலைக்குப் போகிறவர்களின் சாய்ஸ். நீளம் குறைவான டாப்ஸ், ஜீன்ஸ் விரும்பிகளுக்கானது.