Published:Updated:

ஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்! - கிருபா

ஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்! - கிருபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்! - கிருபா

தாய்மை தந்த பரிசுசு.சூர்யா கோமதி, படங்கள் : சி.ரவிக்குமார்

“நம் சின்னத் தயக்கம்தாங்க வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்புக்குக் காரணமா இருக்கும். அந்தத் தயக்கத்தை உடைத்து யோசிச்சா, அதுவே நம் வாழ்வின் வெற்றித்தடமா மாறும்’’ என எனர்ஜி பொங்கப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த கிருபா. ‘லஞ்ச் பாக்ஸ்’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளர். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் தந்துகொண்டிருக்கும் தன் பிசினஸ் பற்றி ஆர்வத்துடன் பேசுகிறார்.

‘`நான் இன்ஜினீயர். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைபார்த்துட்டு இருந்தேன். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவளைப் பார்த்துக்கிறதுக்காக வேலையை விட்டுட்டேன். என் குழந்தையே என் உலகமாகிப் போனாலும், அம்மா என்ற அடையாளத்தைத் தாண்டி நான் யாருன்னு யோசிச்சேன். அந்தச் சில நொடிகள் யோசனைகூட, குழந்தையின் அழுகைச் சத்தத்தில் கரைந்துபோயிடும். குழந்தைக்குச் சாப்பாடு ஊட்ட ஆரம்பிச்ச காலத்தில்தான், ‘என் குழந்தை ஒழுங்கா சாப்பிடமாட்டேங்குது’ என்பதுதான் அம்மாக்கள் உலகின் மிகப்பெரிய சவாலாக இருப்பதைப் புரிந்துகொண்டால் என்பது புரிஞ்சது. குழந்தைக்கு வயிறு நிறைஞ்சா போதும்னு சிப்ஸ், பீட்ஸா, பர்கர்னு எதையோ ஒண்ணை வாங்கிக் கொடுக்கிற அம்மாக்களையும் கவனிச்சேன்.

ஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்! - கிருபா

‘குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட்ஸ்தான் பிடிக்குதுனா, அதுல ஆரோக்கியத்தைச் சேர்க்கலாம்’னு முடிவுசெய்து, சிறுதானிய பீட்சா செஞ்சேன். நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ‘எங்களுக்கும் செய்து கொடுங்க’னு கேட்கக் கேட்க, அது ஒரு பிசினஸாக உருமாறியது. செம வரவேற்பு. என் கணவர், ‘இதை ஆன்லைன் பிசினஸா மாற்றலாம்’னு ஐடியா கொடுத்தார். ஆரம்பத்தில் எனக்கு நிறைய தயக்கம். மற்றவர்களிடமிருந்து நெகடிவ்வான விமர்சனங்கள்.அதுக்கெல்லாம் பயந்தா வீட்லதான் இருக்கணும்னு தோணிச்சு. துணிஞ்சு களத்தில் இறங்கி, ‘லஞ்ச் பாக்ஸ்’ என்ற ஆன்லைன் நிறுவனத்தை ஸ்டார்ட்அப் செய்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்! - கிருபா

காலை, மதிய, இரவு உணவுகளை ஆர்டர்களின் அடிப்படையில் செய்து கொடுத்தோம். சிறுதானிய உணவுகள்தாம் எங்களின் ஸ்பெஷல். ஆரம்பத்தில் இருபது ஆர்டர்கள் என்பதே பெரிய விஷயமா இருந்தது. இப்போ அஞ்சாவது வருஷத்துல, தினமும் இரண்டாயிரம் ஆர்டர்கள் வருது. நார்த் இண்டியன், சவுத் இண்டியன், கான்டினென்டல்னு எல்லா வகை உணவுகளையும் தயார் செய்து கொடுக்குறோம். பள்ளிகளுக்குச் சிறுதானிய ஸ்நாக்ஸ் செய்து கொடுக்குறோம். ஆர்டர்கள்  வந்த பிறகு உணவுகளைத் தயாரிப்பதால, நஷ்டம் என்பது இதுவரை வந்ததில்லை. ஐ.டி கம்பெனிகளில் ஃபுட் கோர்ட் எடுத்தும் நடத்துறோம். நான் தனி ஒருத்தியா இருந்து தொடங்கிய என் நிறுவனத்தில், இன்று முப்பது பேர் வேலை செய்றாங்க’’ என்று தன் வளர்ச்சியைப் பகிர்ந்துகொண்டவர், தன் ஸ்டார்ட்அப் நிறுவனம் சந்திக்கும் சிக்கல்களையும் கூறுகிறார்.

ஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்! - கிருபா

‘`லாபம் குறைவா இருந்தாலும் உணவு தரமா இருக்கணும் என்பதில் உறுதியா இருந்தேன். ஆரம்பத்தில் நல்ல செஃப் கிடைக்கலை. அப்படியே கிடைத்தாலும் அவங்களுக்குத் தரவேண்டிய சம்பளம் நம்ம வருவாயைவிட அதிகமா இருக்கும். நேரத்துக்கு டெலிவரி செய்யலைன்னா ஆர்டர்கள் கேன்சல் ஆகிடும். டெலிவரிக்கு ஆட்கள் இல்லாம திணற வேண்டிய நாள்களை நிறைய சந்திக்க வேண்டிவரும். அதிக தொலைவில் இருந்து ஆர்டர் வரும்போது, போக்குவரத்துச் செலவு அதிகரித்து லாபம் இல்லாமலும் போகும். அந்தச் சூழலில் லாபத்தை யோசிக்காம செயல்பட்டுதான் ஆகணும். என்றாலும், எல்லாச் சூழல்களிலும் கப்பலைக் கரைசேர்க்கும் லாகவத்தைக் கத்துக்கொடுத்திருக்கு வாழ்க்கை.

இப்போ எனக்கு மாசம் ரெண்டு லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்குது. சமையல்தானேன்னு பலரும் என்னை சாதாரணமா பார்த்தாங்க. இன்னிக்கு அந்தச் சமையல்தான் என் சாதனைக்குக் காரணமாகி யிருக்கு. யோசிச்சுப் பார்த்தா, தாய்மையில் நான் என்னைத் தொலைக்கலை... செதுக்கிக்கிட்டேன். ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தா எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும்!” - கிருபா பேசி முடித்தபோது, அவர் மனதில் இருந்த தன்னம்பிக்கை விதை நம் மனதிலும் ஆழமாக விழுந்தது.