Published:Updated:

பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா

பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா
பிரீமியம் ஸ்டோரி
பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா

நீங்களும் செய்யலாம்

பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா

நீங்களும் செய்யலாம்

Published:Updated:
பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா
பிரீமியம் ஸ்டோரி
பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா

கதகவென மின்னும் உங்கள் வைர மூக்குத்தியும் தோடும் கரியிலிருந்துதான் வந்தவை என்றால் நம்ப முடிகிறதா? அதே போலத்தான் நம் வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களும். முகம் பார்க்கும் அளவுக்குப் பளபளவெனப் பார்த்து நீங்கள் வாங்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் அதற்கு முன் பொலிவு இல்லாத அலுமினியப் பாத்திரங்கள் போன்றே இருக்கும் என்பதையும் நம்புவீர்களா? அலுமினியம் மாதிரி காட்சியளிக்கும் அவற்றை பாலிஷ் செய்த பிறகே பளபளப்பு பெற்று முழுமையான உருவம் பெறுகின்றன.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடப் பயன்படுத்துகிற மாப் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார் சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சௌந்தர்யா.

‘`பத்தாவது வரை படிச்சிருக்கேன். எங்க ஏரியாவில் இப்படி பாத்திரங்களுக்கு பாலிஷ் போடப் பயன்படுத்தற மாப் தயாரிக்கிறவங்க இருந்தாங்க. பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததும் பகுதிநேர வேலையா பாலிஷ் மாப் செய்யக் கத்துக்கிட்டு செய்திட்டிருந்தேன். ஒருகட்டத்துல அதையே முழுநேர பிசினஸா செய்யற அளவுக்கு வளர்ந்ததோடு, நிறைய பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன். படிப்பு, அனுபவம்னு எதுவும் தேவையில்லாம, கணிசமான வருமானம் பார்க்கிற இந்த பிசினஸ், வேலைக்குப் போக முடியாத பெண்களுக்குச் சரியான சாய்ஸ்’’ என்கிற சௌந்தர்யா, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.

பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா

என்னென்ன தேவை? எவ்வளவு முதலீடு?

எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் தைத்தது போக வேஸ்ட்டாக விழும் காட்டன் துணித் துண்டுகள் மட்டும்தான் இதற்குப் பயன்படும். இவை எக்ஸ்போர்ட் கம்பெனிகளிலும் அல்லது சென்னை, பாரிஸ் கார்னர் குடோன்களிலும் கிடைக்கும். அதை கிலோ கணக்கில் வாங்கிவந்து, அளவுக்கேற்ப அடுக்கி மெஷினில் வைத்துத் தைக்க வேண்டும்.

துணியின் தரத்துக்கேற்ப கிலோ 5 ரூபாய் முதல் கிடைக்கும். ஒரு மாப் தயாரிக்க 2 கிலோ துணி தேவைப்படும். ஆரம்பத்தில்  குறைந்தது 100 கிலோ வரை தேவைப்படும். அடுத்து பவர் மெஷின் வேண்டும். அதற்கான முதலீடு தனி. தைத்ததை ஆணியும் வாஷரும் வைத்து அடிக்க வேண்டும்.

பவர் மெஷினோடு சேர்த்து மொத்த மூலதனம் 25,000 ரூபாய் ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலிஷ் மாப் பண்ணலாம் வாங்க! - சௌந்தர்யா


ஒருநாளைக்கு எத்தனை மாப்?

வேகமும் நுணுக்கமும் பிடிபட்டு விட்டால் ஒருநாளைக்கு  100 மாப் வரை தைக்கலாம்.  ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 30 மாப் வரை செய்யலாம். அடுக்குவதற்கு, தைப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் உதவிக்கு ஆள் வைத்திருந்தால் இன்னும் எண்ணிக்கையைக் கூட்டலாம்.

லாபம்? விற்பனை வாய்ப்பு?

ஒரு மாப் செய்ய அடக்க விலை 40 ரூபாய் ஆகும். அதை 60 ரூபாய்க்கு விற்கலாம். வண்ணாரப்பேட்டையில் பாத்திரங்களுக்கு பாலிஷ் செய்கிற கடைகள் நிறைய உள்ளன. அவர்களிடம் பேசி ஆர்டர் வாங்கலாம். 5 இன்ச் முதல் 13 இன்ச் வரை அளவுகள் வேறுபடும் என்பதால் விலையும் வேறுபடும்.

ஆணியும் வாஷரும் அடிக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாப்புக்கு 8 ரூபாய் கொடுக்கலாம். 10,000 ரூபாய் முதலீடு செய்தால் 20,000 வரை லாபம் பார்க்கலாம்.

பத்துக்குப் பத்து அறை எடுத்து பெரிய பவர் மெஷின் போட்டுத் தைத்தால் பிசினஸை இன்னும் விரிவுபடுத்தலாம்.

கடன் உதவி?

தனியாகத் தொடங்குவதை விட, இரண்டு, மூன்று பேர் சேர்ந்து இந்தத் தொழிலைத் தொடங்குவது லாபகரமாக இருக்கும். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருந்தால் உள்கடன் வசதி பெறலாம்.

பயிற்சி?

300 ரூபாய் கட்டணத்தில் ஒரே நாள் பயிற்சியில் பாலிஷ் மாப் செய்யக் கற்றுக்கொள்ளலாம்.

- சாஹா 

படங்கள் : வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism