Published:Updated:

உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்

உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்

வெற்றிக்கதை

உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்

வெற்றிக்கதை

Published:Updated:
உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்

ளம் தலைமுறையினருக்கு பணிச் சுமை காரணமாகப் பொடி வகைகளை வீட்டில் தயாரிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. இந்த வெற்றிடத்தைத் தன் இலக்காக வைத்து, பலதரப்பட்ட பொடி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறார் கோவையைச் சேர்ந்த சுகன்யா செல்வராஜ். முருங்கைப் பொடி முதல் மட்டன் மசாலா பொடி வரை ஒவ்வொன்றும் தரத்தில் சமரசமில்லாத ‘ஹோம்மேட்’ சிறப்புடன் ஈர்க்கின்றன.

‘`என் உறவினரின் பெண் படித்த பள்ளியில் நடந்த விழா ஸ்டாலில் வைப்பதற்காக என் மாமியார் வீட்டில் தயாரித்த பொடி வகைகளை பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி எடுத்துச் சென்றாள். மாலை வந்தவள், ‘ஒரு சில மணி நேரத்தில் எல்லா பாக்கெட்களும் விற்றுத் தீர்ந்துடுச்சு. சுவை, வாசனை, நிறமெல்லாம் சூப்பர்னு எல்லோரும் பாராட்டினாங்க’ என்று உற்சாகத்துடன் சொல்ல, அது எனக்கு ஆச்சர்யத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. பல்வேறு வகைப் பொடிகளையும் வீட்டில் தயாரித்து விற்பதைத் தொழிலாகச் செய்ய நான் முடிவெடுத்த தருணம் அதுதான்.

உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்

எந்தெந்தப் பொடி வகைகளைத் தயாரிக்கலாம் என்பதை மாமியாரிடம் ஆலோசித்து முடிவு செய்தேன். பருப்பு, பூண்டு, கடலை, முருங்கை, கறிவேப்பிலை, தேங்காய் மற்றும் எள் என்று பல வகைப் பொடிகளையும் சாம்பார் பொடி, ரசப் பொடி, வத்தக்குழம்பு மசாலா, சிக்கன்-மட்டன் மசாலா என சைவ, அசைவ உணவுப் பொடிகளையும் தயாரித்தேன். என் மகன் ‘Grandma’s Goodies’ என எங்கள் பிராண்டுக்கு பொருத்தமான பெயர் சூட்டி மெருகேற்றினான். சென்னை மற்றும் கோவையில் உணவுத் திருவிழாக்களில் ஸ்டால் அமைத்தும், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலமும் விற்பனையை ஆரம்பித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? - சுகன்யா செல்வராஜ்


சுவையைத் தக்கவைப்பது ஒரு பெரிய கலை. ஆரம்பத்தில் அது எனக்குப் பிடிபடவில்லை. மாமியாரிடம் ஆலோசனை கேட்டு ஒரு சில மாதங்களில் சரியான விகிதத்தில் பொருள்களைச் சேர்க்கும் வித்தை கைவரப்பெற்றேன். உணவுத் திருவிழாக்களில் ஸ்டால்கள் அமைப்பதன் மூலம், வாடிக்கையாளர் களின் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்துகொள்ள முடிகிறது. அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து வெரைட்டிகளை அறிமுகம் செய்கிறேன். பிரிசர்வேட்டிவ் மற்றும் செயற்கை நிறங்களைச் சேர்க்காததால், மார்க்கெட் போட்டியில் எங்கள் பொடிகளை மக்கள் முந்தவைக்கிறார்கள். எந்த வகைப் பொடி என்பதைப் பொறுத்து, குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் முதல் அதிகபட்சமாக எட்டு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். சீக்கிரமே ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகளையும் தயாரிக்கவிருக்கிறோம்.

உங்கள் கைகளில் ருசி இருக்கிறதா? வீட்டில் நேரம் இருக்கிறதா? பொடி, ஸ்நாக்ஸ், உணவு வகைகள் என்று ஆர்வமுள்ள களத்தைத் தேர்ந்தெடுங்கள், தைரியமாக முதல் அடியெடுத்து வையுங்கள்!’’

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism