தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா

தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
News
தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா

நீங்களும் செய்யலாம்

வராத்திரியைத் தொடர்ந்து தீபாவளி, புத்தாண்டு என வரிசையாகக் காத்திருக்கின்றன பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். அத்தனையும் அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்கிற பண்டிகைகள்.

`இனிப்புகளையும் உடைகளையும் தவிர்த்து இந்த வருடம் புதிதாக என்ன அன்பளிப்பு கொடுத்து அசத்தலாம்?’ என்கிற தேடலில் இருப்போருக்கு சரியான சாய்ஸைக் காட்டுகிறார் சென்னை, அடையாற்றைச் சேர்ந்த அனுராதா. பி.காம் பட்டதாரியான இவர், திருமணத்துக்குப் பிறகு ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டு, தஞ்சாவூர் ஓவியங்களில் நிபுணத்துவம் பெற்று, இன்று அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் அளவுக்கு பிஸி.

‘`தஞ்சாவூர் ஓவியங்கள் ரொம்ப பாரம்பர்யமானவை. நிறைய பயிற்சி தேவை. நுணுக்கங்களைக் கத்துக்கிட்டா இதுல பெரிய அளவுல சம்பாதிக்கலாம்’’ என்கிற அனுராதா, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.

தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

கோல்டு ஃபாயில், கற்கள், சாக் பவுடர், அரபிக் கம் உள்ளிட்ட அடிப்படையான பொருள்கள் தேவை.

இவை தவிர எந்தப் பொருளில் தஞ்சை ஓவியம் செய்யப்போகிறோமோ, அதற்கான பொருள்கள் தேவை. உதாரணத்துக்கு போட்டோ ஃப்ரேம், டீகோஸ்டர், குங்குமச் சிமிழ், நகைப்பெட்டி, கல்யாணச் சீர் வரிசைத் தட்டில் வைக்கிற பொருள்கள், மனைக்கோலம், டிஷ்யூ ஹோல்டர், ஹேர் கிளிப், முகம் பார்க்கும் கண்ணாடி, டேபிள் கடிகாரம், மரப்பாச்சி பொம்மை, குடை, விசிறி போன்றவை. சீஸனல் அன்பளிப்புப் பொருள்கள் செய்வதற்குக் குறைந்தபட்ச முதலீடு 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை தேவை.

எதில் கவனம் தேவை?

தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதாதஞ்சாவூர் ஓவியத்தை முறைப்படிக் கற்றுக்கொண்டு, பிறகு அந்த நுணுக்கங்களை வைத்து அன்பளிப்புப் பொருள்கள் செய்கிறவர்களுக்கு இரண்டு வகையில் இது லாபகரமானது. தஞ்சாவூர் ஓவியங்களுக்கென எல்லாக் காலத்திலும் மவுசு உண்டு. பெரிய ஓவிய கேலரிகளில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கான தேவையிருக்கிறது. அங்கே ஆர்டர் பிடிக்கலாம். அதோடு, சில இடங்களில் பயிற்சியாளர்களுக்கான தேவையும் இருக்கிறது. விற்பனை செய்வதில் சிரமம் இருப்பவர்கள் பயிற்சியாளர்களாகவும் சம்பாதிக்கலாம்.

தஞ்சாவூர் ஓவியத்தை முறைப்படி கற்றுக்கொள்ள குறைந்தது 15 நாள்கள் தேவை. அத்தனை நாள்களை ஒதுக்க முடியாது என்பவர்கள், நேரடியாகத் தஞ்சாவூர் ஓவிய அன்பளிப்புப் பொருள்களை மட்டும் செய்யவும் கற்றுக் கொள்ளலாம்.

ஒருநாளைக்கு எத்தனை பொருள்கள் செய்யலாம்?

நுணுக்கமான வேலைப் பாடுகள்தாம் இதில் பிரதானம். ஏற்கெனவே தஞ்சாவூர் ஓவியம் தெரிந்தவர்களுக்கு வேகம் அதிகமாக இருக்கும். புதிதாகக் கற்றுக்கொண்டு செய்பவர்களுக்கு அவர்களின் வேகத்தைப் பொறுத்து நேரம் வேறுபடும்.

ஒருநாள் முழுவதும் இதையே வேலையாகச் செய்கிறவர் என்றால் 100 எண்ணிக்கையிலான அன்பளிப்புப் பொருள்களில் தஞ்சை ஓவிய வேலைப்பாடு செய்யலாம்.

தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா

விற்பனை வாய்ப்பு? லாபம்?

எந்த நிகழ்வுக்கான அன்பளிப்பு என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நவராத்திரிக்கு என்றால் குங்குமச்சிமிழ், தாம்பூலத்தில் வைத்துக்கொடுக்கும் அன்பளிப்புகள், முகம்பார்க்கும் கண்ணாடி போன்றவை அதிகம் விற்பனையாகும். திருமணச் சீர்வரிசைத் தட்டில் வைக்கும் பொருள்களுக்குக் கல்யாண கான்ட்ராக்டர்களிடம் பேசி ஆர்டர் வாங்கலாம்.

குங்குமச் சிமிழ் போன்ற சின்ன அயிட்டங்களையே குறைந்தபட்சம் 150 ரூபாயிலிருந்து விற்கலாம்.

50 சதவிகித லாபம் பார்க்கலாம்.

கடன் வசதி?

ஒருவர் மட்டுமே மொத்த முதலீடும் போட்டுச் செய்வது சிரமம் என்பவர்கள், நான்கைந்து பேராகச் சேர்ந்து ஆரம்பிக்கலாம். மகளிர் குழுக்களில் உள்கடன் வசதி பெற்றும் தொழில் தொடங்கலாம்.

பயிற்சி?

ஒருநாள் பயிற்சியில் மூன்று வகையான அன்பளிப்புப் பொருள்கள் செய்யக் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 1,500 ரூபாய்.

தஞ்சாவூர் ஓவியத்தை நுணுக்கமாக, நுட்பங்களுடன் கற்றுக்கொள்ள 5,500 ரூபாய் கட்டணம். 15 நாள்கள் பயிற்சி அது.

- சாஹா 

படங்கள் : வீ.நாகமணி