தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

லக அளவில் கைவினைக் கலைகளில் இன்றைய ட்ரெண்ட் என்ன தெரியுமா? ‘மிக்ஸ்டு மீடியா ஆர்ட்’ என்கிற கலவைக் கலை. எதை வைத்து வேண்டுமானாலும் கலைப்பொருளை உருவாக்கும் இந்தக் கலையில் பிசியாக இருக்கிறார் சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பவானி.

‘`பி.எஸ்ஸி பிசிக்ஸ் முடிச்சிருக்கேன். 25 வருடங்களா கைவினைக் கலைகள் செய்றேன். கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப்போக வேண்டாம்னு முடிவு பண்ணினதும் இதையே முழுநேர பிசினஸா பண்ணிட்டிருக்கேன்’’ என்கிறவர், மிக்ஸ்டு மீடியா ஆர்ட்ஸில் அன்பளிப்பு மற்றும் அலங்காரப் பொருள்கள் உருவாக்குகிறார்.

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

‘`மரம், அட்டை, மெட்டல், சணல், நூல், வேஸ்ட் பிரஷ், கார்ட் போர்டு... இப்படி எதை வைத்தும் கலைப்பொருள்கள் உருவாக்கலாம். இங்கே நான் செய்து காட்டியிருப்பதற்குப் பெயர் ‘லே அவுட்ஸ்’. புரியும்படி சொல்லணும்னா போட்டோ ஃப்ரேம். ஆனால், இவற்றை வெறும் போட்டோ ஃப்ரேமா மட்டும் பார்க்க முடியாதுங்கிறதால வேற பெயர் சொல்வோம்.

சாதாரணமா போட்டோ ஃப்ரேம் செய்வதானால் ரெடிமேடாகக் கிடைக்கும் சட்டத்துக்குள்ளே படங்களைப் பொருத்தி வெச்சு அழகு பார்ப்போம். லே அவுட் எனப்படுகிற இதுல நாம் விரும்பும் தீம்களை வடிவமைக்க முடியும் என்பதுதான் ஸ்பெஷல். பார்ப்பதற்கு 3டி எஃபெக்ட்டில் தெரியும் என்பது கூடுதல் ஹைலைட்’’ - மிக்ஸ்டு மீடியா ஆர்ட்ஸின் சிறப்புகள் சொல்பவர், அதை முழுநேரத் தொழிலாகச் செய்ய நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

என்னென்ன தேவை? முதலீடு?

சிப் போர்டு, மரம் மற்றும் மெட்டல் அலங்காரப் பொருள்கள், நூல், பெயின்ட், ஸ்பிரே பெயின்ட் போன்றவை அடிப்படையாகத் தேவைப்படும் பொருள்கள். இவற்றைக்கொண்டு லே அவுட்ஸ் மட்டுமின்றி, மினியேச்சர் ஷோ பீஸ், அலங்கார பாட்டில்கள் போன்றவற்றையும் டிசைன் செய்யலாம். சாதாரண பாட்டிலில் இப்படி லே அவுட் செய்தபிறகு அதன் தோற்றமே மாறிப்போகும். அதனுள் பூங்கொத்து வைக்கலாம் அல்லது அந்த பாட்டிலை வெறுமனே அலங்காரப் பொருளாகவும் வைக்கலாம்.

முதன்முறை வெளிநாடு போய் வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த ட்ரிப்பின் ஞாபகமாக டிக்கெட்ஸ், அங்கே எடுத்துக்கொண்ட படங்கள் போன்றவற்றை ஒரு தீமாக வைத்து லே அவுட் செய்து நினைவுச்சின்னமாக்கலாம்.

குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு போதுமானது. இதில் மூன்று லே அவுட்ஸ் செய்யலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் இதற்கான மூலப்பொருள்களை வாங்கலாம். ஆர்ட்ஸ் மெட்டீரியல்கள் விற்கும் ஸ்டேஷனரி கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம்.

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

விற்பனை வாய்ப்பு? லாபம்?

500 ரூபாய் முதலீட்டில் தயாரிக்கிற இரண்டு முதல் மூன்று லே அவுட்ஸை, குறைந்தது 1,500 ரூபாய்க்கு விற்கலாம். இந்தக் கலையைப் பொறுத்தவரை கற்பனைத்திறன்தான் முக்கியம். எந்த அன்பளிப்புக்

நீங்களும் செய்யலாம் - இது மிக்ஸ்டு மீடியா ஆர்ட்! - பவானி

கடையில் தேடினாலும் இவற்றை வாங்க முடியாது. வளைகாப்பு, சீமந்தம், திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டும் விழா என எந்த நிகழ்ச்சிக்கு ஆர்டர் எடுக்கிறோம் எனப் பார்த்து அதற்கேற்ற தீமை வடிவமைக்கிறபோது விற்பனைக்கான வாய்ப்பு கூடும். மொத்தமாகச் செய்து கடைகளில் விற்பனைக்கு வைப்பதைவிடவும், தனிப்பட்ட முறையில் ஆர்டர் எடுப்பது சிறந்தது. கார்ப்பரேட் அலுவலகங்கள், பெரிய ஹோட்டல்கள் போன்ற இடங்களிலும் ஆர்டர் பிடிக்கலாம்.

பயிற்சி?

அதிகபட்சம் இரண்டு நாள்களில் கற்றுக்கொள்ளலாம். அடிப்படையான ஓவியப் பயிற்சியோ, கைவினைப் பொருள்கள் செய்யவோ தெரிந்திருக்க வேண்டியதில்லை.

6-க்கு 6 அளவுள்ள ஒரு லே அவுட் செய்யக் கற்றுக்கொள்ளத் தேவையான பொருள்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,000 ரூபாய்.

- சாஹா, படங்கள் : க. பாலாஜி