சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கிற மதுமிதா செய்கிற கேட்டரிங் பிசினஸ், இவர்களின் பிரச்னைக்கான தீர்வு மட்டுமல்ல, நன்றாகச் சமைக்கத்தெரிந்தவர்களுக்கான பிசினஸ் வழிகாட்டியும்கூட!

‘`பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். பூர்வீகம் திருநெல்வேலி. அந்த ஊர் பாரம்பர்ய சமையல் நல்லா செய்வேன். கல்யாணத்துக்குப் பிறகு வீட்டுல தினம் சமைக்கிறதைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு, அக்கம்பக்கத்துல உள்ளவங்க பாராட்டினாங்க. அவங்கள்ல ஒரு வயசான தம்பதி, தங்களுக்கு தினமும் மதியச் சாப்பாடு தர முடியுமானு கேட்டபோதுதான் இதை ஒரு பிசினஸாகூட பண்ண முடியும்னு எனக்குத் தெரிஞ்சது. முதல் ஆர்டரா அவங்களுக்கு தினமும் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே ஆர்டர் எண்ணிக்கை அதிகமாச்சு. மதிய உணவு மட்டும்தான் பண்றேன். சிலர் சாதம் வேண்டாம், சாம்பார், குழம்பு, பொரியல் மட்டும் போதும்னு கேட்பாங்க. சிலர் சாதத்தோடு சேர்த்துக் கேட்பாங்க. அதுக்கேத்தபடி பண்ணிட்டிருக் கேன். சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரே ஒரு டிபன் கேரியரோடு ஆரம்பிச்ச பிசினஸ் இது. இன்னிக்கு இதுதான் எனக்கு வாழ்வாதாரமா மாறியிருக்கு....’’ என்கிற மதுமிதா, ஆர்வமுள்ளோருக்கு வழி காட்டுகிறார்.

கவனமாக இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்

உங்களுடைய வாடிக்கையாளர்கள் யார் என்பதை முதலில் பட்டியலிடுங்கள். வயதானவர்களா, வேலைக்குச் செல்லும், தனியே வசிக்கும் ஆண்கள், பெண்களா, குடும்பங்களா என்று பாருங்கள். வயதானவர்கள் என்றால் அவர்களுக்கேற்றபடி உப்பு, காரம், புளிப்பு என எல்லாம் குறைவாகச் சமைத்துக் கொடுக்க வேண்டும். தனியே வசிக்கிறவர்கள் என்றால் வீட்டுச் சாப்பாட்டை மிஸ் பண்ணுவார்கள். அந்தச் சுவையில் சமைத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என்றால் அவர்களைத் திருப்திபடுத்தும் வெரைட்டி இருக்க வேண்டும்.

வழக்கமான சாம்பார், ரசம், கூட்டு, பொரியலையே தினமும் செய்து கொடுப்பதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. ஹோட்டல்களில் கிடைக்காத பாரம்பர்ய உணவுகளாகத் தேர்ந்தெடுத்துச் செய்வது உங்கள் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டும். உதாரணத்துக்கு பிட்லை, பொரித்த குழம்பு, பருப்பு உருண்டை ரசம், சொதி போன்றவை...

ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடு என்று சொல்லிக் கொண்டு பேக்கிங்கில் கோட்டை விட வேண்டாம். எவர்சில்வர் டப்பாக்களில் கொடுத்துவிட்டு, திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வீட்டுக்கே வந்து பெற்றுக் கொள்கிறவர்களை அவர்களையே பாத்திரம் எடுத்து வரச் சொல்லலாம்.

ஹோட்டல்களில் விற்பதைவிட குறைந்த கட்டணத்தில் கொடுப்பதும், வயதானவர்களுக்கு சப்ளை செய்கிறபோது இருவர் சாப்பிடும் அளவுக்குப் போதுமான அளவில் கொடுப்பதும் முக்கியம்.

என்னென்ன தேவை? முதலீடு? லாபம்?

வழக்கமாக உங்கள் வீட்டுக்குச் சமைப்பதிலேயே கொஞ்சம் கூடுதலாகச் செய்து ஒன்றிரண்டு ஆர்டர்களுடன் ஆரம்பிக்கலாம். முதலிலேயே ஆர்டர் பிடித்துவிட்டுப் பிறகு பிசினஸைத் தொடர்கிறீர்கள் என்றால் கொஞ்சம் திட்டமிடல் வேண்டும். சப்ளை செய்ய தனி கேரியர்கள், மெனு பட்டியல் அச்சடித்த நோட்டீஸ், விசிட்டிங் கார்டு என எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச முதலீடாக 500 முதல் 1,000 ரூபாய் போதுமானது. மாதாந்திர ஆர்டர் பிடிக்கும்போது வருமானத்துக்கு உத்தவரவாதம் கிடைக்கும். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

பொரித்த குழம்பு, சொதி, பிட்லை, பலகாய் குழம்பு, வத்தக்குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, பருப்பு உருண்டை ரசம் என 10 அயிட்டங்களை ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய்.

- சாஹா, படங்கள் : க. பாலாஜி