Published:Updated:

குடும்பப் பிரச்னையைத் தாண்டிப் போராடினால்தான் பெண்கள் தொழிலில் வெற்றி பெறமுடியும்!

குடும்பப் பிரச்னையைத் தாண்டிப் போராடினால்தான் பெண்கள் தொழிலில் வெற்றி பெறமுடியும்!

குடும்பப் பிரச்னையைத் தாண்டிப் போராடினால்தான் பெண்கள் தொழிலில் வெற்றி பெறமுடியும்!

குடும்பப் பிரச்னையைத் தாண்டிப் போராடினால்தான் பெண்கள் தொழிலில் வெற்றி பெறமுடியும்!

குடும்பப் பிரச்னையைத் தாண்டிப் போராடினால்தான் பெண்கள் தொழிலில் வெற்றி பெறமுடியும்!

Published:Updated:
குடும்பப் பிரச்னையைத் தாண்டிப் போராடினால்தான் பெண்கள் தொழிலில் வெற்றி பெறமுடியும்!

குடும்ப மற்றும் குறுந்தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் களியனூரில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, அவள் விகடன் மற்றும் CAMS  ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள், சுயதொழில் செய்வதற்காகவும், தொழில் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக உருவாகவும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றனர். ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 5-ம் தேதிவரை நடைபெறுகிறது.

உற்பத்தி செய்யும் பொருள்களை எப்படி மதிப்புக் கூட்டுவது, உற்பத்திப் பொருள்களை இணையதளத்தில் எப்படி ப்ரமோட் செய்வது, வரவு -செலவுக் கணக்குகளை எப்படி மேற்கொள்வது, தொழிலை அடுத்தகட்டத்துக்கு எப்படிக் கொண்டு செல்வது, மார்க்கெட்டிங் செய்யும் யுக்திகள் என்னென்ன, வாடிக்கையாளர்களை எப்படிக் கவர்வது, தொழிலில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட விஷயங்கள், நான்கு நாள்கள் நடைபெறும் பயிற்சியில் அளிக்கப்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி நிறுவனம் சார்பில் நடைபெற்ற தொடக்கவிழாவில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

வரவேற்புரையாற்றிய ஹேண்ட் இன் ஹேண்ட் அகாடமி இயக்குநர் ஜெயசீலன், ``நீங்கள் அனைவருமே அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் ஐ.ஐ.டி-யின் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதால் உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து பேசிய ஐ.ஐ.டி பேராசிரியர் தில்லைராஜன், `` `இன்ஜினீயரிங் படித்து முடித்தவர்களில் 20 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை செய்வதற்கான திறன் இருக்கிறது' எனச் சொல்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. ஆனால், இந்தத் தொழில் பயிற்சி பெறுபவர்களில் 96 சதவிகிதம் பேர் வேலைக்குச் செல்ல முடிகிறது. உங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

தொழில் முனைவோர் ஆலோசகர் பத்மா சந்திரசேகரன், ``நான் உங்களுக்குப் பாடம் எடுப்பதைவிட உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். பெண்களுக்கு எல்லாமே போராட்டம்தான். கணவன், குழந்தைகள் எனக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதோடு நின்றுவிடாமல் வருமானத்தையும் ஈட்ட வேண்டும். இவற்றோடு சுயமரியாதை என்பது பெண்களுக்கு அவசியம். தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஒரு குழுவாகச் செயல்படவேண்டும். அப்போதுதான் நமக்கு ஆலோசனைகள், மன நிம்மதி, தன்னம்பிக்கை என எல்லாமே அதிகம் கிடைக்கும். இந்தச் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே வருகிறார்கள். காலப்போக்கில் நமக்கான பிரச்னைகள் எல்லாமே சரியாகி விடும்.

பொதுவாகத் தொழிலில் இடைநிற்றல் என்பது பெண்களுக்கு உள்ள முக்கியப் பிரச்னை. இந்தப் பிரச்னைக்குக் காரணம் நாம்தான். குடும்பத்துக்கும் தொழிலுக்கும் நேரத்தை எப்படிச் செலவிடுவது எனச் சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். அப்போதுதான் தொழிலில் பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும் நாம் செய்யும் தொழிலில் கொஞ்ச நேரமாவது ஈடுபட வைக்க வேண்டும். அவர்களுக்கும் நாம் செய்யும் தொழிலின் மீது மதிப்பு வரும். நமக்கும் உதவியாக இருப்பார்கள். இவற்றைச் சரியாகச் செய்தால் தொழிலில் இடைநிற்றல் என்பதை பெண்கள் தவிர்க்க முடியும்” என்றார்.

சிறப்புரையாற்றிய விஜயராகவன், ``ஐ.ஐ.டி-யில் சான்று வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயம். அந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்பகட்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்காகத்தான் இந்த நான்கு நாள்கள் பயிற்சி அளிக்க இருக்கிறோம். தொழிலில் வரக்கூடிய வருமானத்தை வீட்டுக்காகச் செலவழித்து விடக்கூடாது. ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அப்போதுதான் தொழில் வளர்ச்சி அடையும். குடும்பச் சூழலை காரணம்காட்டி, எடுத்த முயற்சியைப் பாதியில் கைவிட்டுவிடாதீர்கள். நாம் தோற்றுவிட்டால் உறவினர்கள் ‘எனக்கு அப்பவே தெரியும். நான் அப்பவே சொன்னேன்ல’ எனக் குத்திக் காட்டுவார்கள்.

டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் பெண்கள் பயிலும் பள்ளிக்கு டிரைவர்களாக பெண்களே இருக்கிறார்கள். எலக்ரீஷியனாக பெண்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தத் துறைக்கு இப்போது பெண்கள் வந்துவிட்டார்கள். எல்லோர் வீட்டிலும் பிரச்னைகள் இருக்கிறது. பிரச்னைகள் இல்லாத வீடு ஒன்று இருக்குமானால் அங்கு உறவுகள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் சகஜம். அதையும் தாண்டி போராடினால்தான் வெற்றி பெறமுடியும்.” எனத் தன்னம்பிக்கை ஊட்டினார்.

ஹேண்ட் இன் ஹேண்ட் முதன்மைச் செயலாக்க அலுவலர் (சுய உதவிக்குழு) சீனுவாசன், ``புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கியில் 75 சதவிகிதம் தொழில் கடன் கொடுப்பார்கள். 25 சதவிகிதத்தை நீங்கள்தான் போட வேண்டும். சரியான தொழிலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் உங்களுக்கு நாங்களே அந்த 25 சதவிகிதத்தை கடனாகக் கொடுப்போம். தொழிலில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போதுதான் வெற்றி கிடைக்கும். பணத்தின் பின்னால் செல்லாமல் வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்தால் மட்டுமே தொழிலில் சாதிக்க முடியும்.” என்றார்.

ஆர்வத்தோடு ஐ.ஐ.டியின் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் பெண்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism