Published:Updated:

ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்

ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்

வாய்ப்புகள் ஆயிரம்

ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்

வாய்ப்புகள் ஆயிரம்

Published:Updated:
ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்

ங்கிலாந்தில் படிப்பு... அதைத் தொடர்ந்து அங்கேயே பெரிய நிறுவனத்தில் வேலை... நினைத்துப் பார்க்காத சம்பளம்...

துரத்திய கனவுக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்திருக்கிறார் பூஜா சுந்தரேஷ். பொருளாதார நிபுண ராகப் பெயர் வாங்கியிருக்க வேண்டியவர், கிரியேட்டராக திருப்தியடைந்திருக்கிறார்.

‘அயனா’ என்கிற பெயரில் தன் ஃபேஷன் லேபிளை அறிமுகப்படுத்தி, சென்னையின் முன்னணி டிசைனர்களில் ஒருவராக கவனம்ஈர்க்கிற பூஜா, ஆன்லைன் பிசினஸ், அதிலுள்ள சாதக பாதகங்கள், அவசியம் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என பிசினஸ் ஆர்வமுள்ள பெண்களுக்குச் சொல்ல, ஏராளமான தகவல்கள் வைத்திருக்கிறார்.

ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்

``எகனாமிக்ஸ் படிச்சிட்டு யுகேவில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். மனசு முழுக்க டிசைனிங் ஆர்வம்தான் நிறைஞ்சிருந்தது. கிடைக்கிற நேரத்துல டிரஸ் டிசைனிங் பண்ணி, ஃபேஸ்புக் பேஜ் ஆரம்பிச்சு, போட்டோஸ் போட்டுக்கிட்டிருந்தேன். 2,000 ஃபாலோயர்ஸ் மட்டுமே இருந்த அந்த பேஜ்ல என் கலெக்‌ஷன்ஸுக்கு வரவேற்பு அதிகமானது.  அப்படித்தான் இது ஒரு பிசினஸா வளர்ந்தது. முதல்ல புடவைகளை டிசைன் பண்ணி விற்க ஆரம்பிச்சேன். அடுத்து க்ராப் டாப்ஸ் உட்பட ஸ்டிச்டு கார்மென்ட்ஸை விற்க ஆரம்பிச்சேன். என் டிசைன்ஸும் மெட்டீரியலும் மக்களுக்குப் பிடிக்குதுனு தெரியவந்ததும், பிசினஸ்ல அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் தைரியம் வந்தது. லெஹங்கா, பிரைடல் லெஹங்கா, கேஷுவல் டிரஸ், குழந்தைங்களுக்கான டிரஸ்னு மற்ற உடைகளையும் அறிமுகப்படுத்தினேன். 

வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடும்போது நாம ஆன்லைனில் இருக்கணும். அதுக்காக 2017-ல் ‘அயனா’ என்ற இந்தக் கடையையும் தொடங்கினேன். ஆன்லைன் பிசினஸுக்காக 200 சதுரஅடியில் குடோனா பயன்படுத்திக்கிட்டிருந்த இடத்தையே, கடையா மாற்றினேன். இன்னிக்கு நேரிலும் ஆன்லைனிலும் சம அளவு வாடிக்கையாளர்களை சம்பாதிச்சிருக்கேன். மனசு சொன்னதைக் கேட்டு, டிசைனரானது வாழ்க்கையில் நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு’’ - சிலிர்க்கிற பூஜாவுக்கு, அமெரிக்கா, இங்கி லாந்து, ஜப்பான், ஆப்பிரிக்கா உட்பட 30 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

‘`பிசினஸ் தொடங்க பணத்தைவிடவும் பெரிய மூலதனம், பொறுமை. இன்னிக்கு பிசினஸ் தொடங்கிட்டு, நாளைக்கே லாபம் எதிர்பார்க்கக் கூடாது. முதல் லாபத்தைப் பார்க்கவே பல நாள்கள் ஆகலாம். தடைகள் வரலாம். பிசினஸ் ஆரம்பிச்சதே தவறான முடிவோங்கிற அளவுக்குப் பிரச்னைகள் வரலாம். பந்தயத்தில் நீங்க மட்டும் இருக்க மாட்டீங்க. உங்களைவிடப் பல வருஷங்களுக்கு முன்பே பிசினஸ் தொடங்கின எத்தனையோ பேரும் அந்தப் பந்தயத்துல உங்களுடன் இருப்பாங்க. அவங்களை முந்திக்கிட்டு, ஒரே ராத்திரியில பிசினஸ்ல வெற்றிக்கொடியைப் பறக்க விடணும்னு நினைச்சா நடக்காது. ஆரம்ப காலத்துல நிறைய சொதப்புவீங்க. தவறுகளே உங்களுக்குப் பாடம் கத்துக்கொடுக்கும். எது சரின்னு சொல்லித்தரும். அந்தப் பாடத்தைக் கத்துக்க ஒரு விலை கொடுத்துதான் ஆகணும். பொறுமையும் கமிட்மென்ட்டும் இருக்கிறவங்களுக்கானது பிசினஸ். இந்த ரெண்டும் இல்லாதவங்க பிசினஸ் ஆசையை ஒதுக்கிவைக்கிறது நல்லது’’ - அனுபவங்களிலிருந்து பாடம் கற்றவராகச் சொல்கிறார் பூஜா.

‘`டிசைனராக ஆசைப்படற அளவுக்கு அந்தத் துறையில ஜெயிக்கிறது சுலபமில்லை. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஒரு டிசைனர் உருவாகிட்டே இருப்பாங்க.  ஆன்லைனில் பிசினஸைத் தொடங்கியதால், அவங்களுடைய நம்பகத்தன்மையை எப்படியெல்லாம் பெறலாம்னு ஓர் அனுபவம் இருந்தது. ஆன்லைன் கஸ்டமர்களைப் பொறுத்தவரை நேரம் ரொம்ப முக்கியம்.  அவங்களுடைய கேள்விக்கு ரெண்டு நொடிகளுக்குள்ளே பதில் கிடைக்கலைன்னா, நம்ம வெப்சைட்டை விட்டு வெளியேறி  வேறு ஆன்லைன் ஸ்டோரைத் தேடிப் போயிடுவாங்க. அதனால ஒரு வாடிக்கையாளரைக்கூட மிஸ் பண்ணிடக் கூடாது. அதில் தெளிவாகவும் கவனமாகவும் இருந்ததால்தான் இன்னிக்கு என்னால இந்த பிசினஸில் வெற்றிகரமா இயங்க முடியுது’’ என்கிறவர், அப்படி வெற்றிபெற நினைக்கிற மற்றவர்களுக்கும் அட்வைஸ் கொடுக்கிறார்.

‘`பொட்டீக் பிசினஸில் வேறு சில ரிஸ்க்குகளும் இருக்கும். உங்களுடைய டிசைன்களை வேற யாராவது காப்பியடிக்கலாம். அப்படி நடக்கும்போது உடைஞ்சுபோயிடாம, உங்க டிசைன்கள் அந்தளவுக்கு ரீச் ஆகியிருக்கிறதாகவும் நீங்க சரியானதையே செய்யறதாகவும் பாசிட்டிவா பார்க்கப் பழகணும். அடுத்த லெவலுக்கு உங்களை வளர்த்துக்கிறதுக்கான முயற்சிகளைச் செய்யணும்.

ஆன்லைனில் எல்லா உடைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியும். பிங்க் லெஹங்கான்னு தேடினா, கூகுளில் ஆயிரம் டிசைனர்ஸ் அவங்களுடைய பிங்க் லெஹங்கா டிசைன்ஸைக் காட்டுவாங்க. ஆன்லைனில் பட்டுப்புடவைகள் விற்கும் பலரும், அதை  விதவிதமான மடிப்புகளோடு போட்டோ எடுத்துப் போட்டிருப்பாங்க. ஆனா,  நான் அதை ஒரு மாடலுக்கு உடுத்திவிட்டு, வேறு வேறு கோணங்களில் போட்டோஸ் எடுத்துப் போடறதை வழக்கமாக்கிட்டேன். நான் விற்கும் ஒவ்வோர் உடைக்கும் இதை ஒரு பாலிசியா வெச்சிருக்கேன். இந்த மாதிரி உங்களுக்கான தனித்துவம் எதுன்னு யோசிச்சு அதில் கவனம் செலுத்துங்க.

ஆன்லைன்ல ஷாப்பிங் பண்றவங்க, மற்றவர்களை விடவும் டிரெண்டில் கவனமா இருப்பாங்க.  அவங்களுடைய தேவைகளைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறதும், உடனுக்குடன் மாறிட்டே இருக்குற டிரெண்டுக்கேற்ப உங்களை அப்டேட் பண்ணிக்கிறதும் அவசியம்.

அளவு, மெட்டீரியல், தரம் - இந்த மூன்றும் ரொம்ப முக்கியம். என்னதான் உடை பிடிச்சிருந்தாலும், அதை அணிந்துபார்த்து திருப்தியானால் மட்டுமே வாங்கும் ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. அப்படிப்பட்டவங்களை உங்க வாடிக்கையாளர்களாக்கணும்னா, ஃபிட்டிங் கச்சிதமா இருக்கணும். பிசினஸ் தொடங்கின புதிதில், உங்க வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்  சலுகைகளைக் கொடுக்கலாம். தொடர்ந்து உங்ககிட்ட ஆன்லைன் ஷாப்பிங் பண்ண அது அவங்களை ஊக்கப்படுத்தும். ஒன்றிரண்டு முறை இப்படி எக்ஸ்சேஞ் செய்து, அவங்களுக்கான ஃபிட்டிங் எதுன்னு தெரிஞ்சுக்கிட்டாங்கன்னா மறுபடியும் உங்களைத் தேடி வருவாங்க.

உலகம் முழுவதிலுமிருந்து வாடிக்கையாளர்களை சம்பாதிக்க ஆன்லைன் பிசினஸ் பெஸ்ட் சாய்ஸ். ஆனா, அவங்களைத் தக்கவைக்கணும்னா டிசைன்ஸை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். ஒரே நபர் திரும்பத்திரும்ப உங்க இணையதளத்துக்கு வந்தாலும் ஒவ்வொரு முறையும் அவங்களுக்குப் புதுசு புதுசான கலெக்‌ஷன்ஸ் கண்களில் படணும்’’ - விற்பனையாளருக்கு மட்டுமன்றி, வாடிக்கையாளருக் கும் சேதி வைத்திருக்கிறார் பூஜா.

‘`ஆன்லைனில் துணிகள் வாங்கும்போது புது பிராண்டுகளை ட்ரை பண்ணத் தயங்காதீங்க.  பிரபலமான பிராண்டுகளின் படங்களைக் காப்பியடிச்சு, தங்களுடைய டிசைன்களா காட்டிக்கிற போலிகள் இணையத்தில் ஏராளம். அதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்களிடம் ஜாக்கிரதையா இருங்க. சுத்தமான காஞ்சிபுரம் பட்டுதான் வேணும்னு ஆசைப்படறவங்க, அதை மலிவான விலையில் வாங்க நினைக்கிறது நியாயமில்லை. தரம் வேணும்னா விலையைப் பற்றி யோசிக்கக்கூடாது!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-சாஹா

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

இன்னும் கொஞ்ச நாளைக்கு இவைதான் டிரெண்டிங்!

ன் பீஸ் டிரஸ்தான் இன்னிக்கு நம்பர் ஒன் டிரெண்ட். அந்தக் காலத்துல மேக்சினு அழைக்கப்பட்ட அதே டிரஸ்ஸின் நவீன வடிவம்தான் இது. அணியவும் வசதியானது. சிம்பிளாகவோ, கிராண்டாகவோ எப்படி வேண்டுமானாலும் வாங்கலாம். டின்னருக்குப் போறதுலேருந்து, கல்யாணம், ரிசப்ஷன் வரைக்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான டிரஸ் இது.

ஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி? - பூஜா சுந்தரேஷ்

இதன் தொடர்ச்சியா காஞ்சிபுரம் பட்டில் ஒன் பீஸ் டிரஸ் டிசைன் பிரபலமாயிட்டு வருது. பட்டு உடுத்தணும், ஆனா சேலை அணியும்போது இருக்கிற அசௌகர்யங்கள் கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இது.

இன்றைய இளம் பெண்களுக்கு பட்டுப் புடவை மோகம் கொஞ்சமும் குறையலை. ஆனா, அது எடை அதிகமில்லாததா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. அதனால லைட் வெயிட் சில்க் சாரீஸ்தான் இப்போ டிரெண்ட். இளம் பெண்களின் சாய்ஸில் தகதக தங்க ஜரிகை இல்லை. அதுக்கு பதிலா உடல் பாகம் கலர்ஃபுல்லாகவும் ஜரிகை சில்வர் கலரிலும் இருப்பதையே விரும்பறாங்க.  மாம்பழக் கலர் உடல், பச்சை கலர் பார்டர் மாதிரியான அந்தக் காலத்து பாரம்பர்ய காம்பினேஷன்களுக்கு இப்பவும் வரவேற்பு இருக்கு. கலம்காரி பேட்ச்வொர்க் செய்யப்பட்ட புடவைகள் பெண்களின் முதல் சாய்ஸா இருக்கு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism