Published:Updated:

நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

- முத்துலட்சுமி

நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

- முத்துலட்சுமி

Published:Updated:
நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

காலையில் ஆவி பறக்கக் குடிக்கிற காபி, டீயைக் கூடத் தவிர்த்துவிட்டு, குளிரக்குளிர ஏதேனும் குடித்தால் தேவலை என்கிற அளவுக்கு அனல் தகிக்கிறது. உணவுக்கு பதில் மூன்று வேளைகளுக்கும் ஜில்லென திரவ உணவுகளே போதும் என்கிறது உடல். நினைத்தபோதெல்லாம் குளிர்பானங்கள் குடிக்க நினைத்தால் எங்கே போவது? கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகுமா?

‘`கட்டுப்படியாகுமா என்பது அடுத்த கேள்வி. அவை ஆரோக்கியமானவையா என்பதில் கவனம் இருக்கட்டும்'’ என்கிறார் சென்னை, போரூரைச் சேர்ந்த முத்துலட்சுமி.

பத்தாவது வரை படித்துள்ள இவர் இன்று தொழில்முனைவோராக அடையாளம் பெற்றிருக்கக் காரணம், அவர் தயாரிக்கிற ஆரோக்கிய குளிர்பானங்கள்.

நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

‘’கல்யாணம், குழந்தைகள்னு ஆனதும் வீட்டுப் பொறுப்புகளில் பிசியா இருந்தேன். ஆனாலும், சின்ன அளவிலாவது ஏதாவது பிசினஸ் செய்யணும்கிற எண்ணம் இருந்துட்டே இருந்தது. பிள்ளைங்க ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் நேரம் கிடைச்சது. நிறைய விஷயங்களைத் தேடிக் கத்துக்கவும் முடிஞ்சது. அப்படித்தான் கெமிக்கல் இல்லாத சர்பத் தயாரிப்பைக் கத்துக்கிட்டேன். எல்லாக் குழந்தைகளுக்கும் குளிர் பானங்கள் பிடிக்கும். என் குழந்தைகளும் அப்படித்தான். ஆனா, அவங்களுக்கு நான் ஆரோக்கியமானதை மட்டும் கொடுக்க நினைச்சேன். அப்பப்போ ஃப்ரெஷ்ஷா வீட்டிலேயே ரோஸ் மில்க், கிரேப் ஜூஸ், மேங்கோ ஜூஸ்னு ஸ்குவாஷ் தயாரிக்க ஆரம்பிச்சேன். அது அப்படியே மெள்ள மெள்ள சின்ன பிசினஸா வளர்ந்திருக்கு...’’ என்கிறவர், பத்துக்கும் மேலான வெரைட்டிகளில் ஸ்குவாஷ் தயாரிக்கிறார். எதிலுமே கெமிக்கல் சேர்ப்பதில்லை என்பதுதான் ஹைலைட்.

‘`கடைகளில் வாங்கும் சர்பத் வகைகளில் கலரும் எசென்ஸும் சேர்ப்பாங்க. நான் கெமிக்கலோ, கலரோ சேர்க்கிறதில்லை. நன்னாரி சர்பத்துக்கு நன்னாரி வேரை வாங்கி, பதப்படுத்திச் செய்றேன். ரோஜா இதழ்களை வெச்சுதான் ரோஸ்மில்க் தயாரிக்கிறேன். இப்படி மாம்பழம், பைனாப்பிள், திராட்சை, ஆரஞ்சு, லெமன் என எல்லாவற்றிலும் பழச்சாறுகளைப் பயன்படுத்திதான் செய்றேன். கெமிக்கல் சேர்க்காததால் 20 நாள்கள்வரை வெளியில் வெச்சிருந்து பயன்படுத்தலாம்’’ என்கிற முத்துலட்சுமி, ஆர்வமுள்ளோருக்கு பிசினஸ் ஐடியாக்களை வழங்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

என்னென்ன தேவை? முதலீடு?

திராட்சை, மாம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு என சீஸனல் பழங்கள்,  ரோஜா இதழ்கள், செம்பருத்திப்பூ, நன்னாரி வேர், சர்க்கரை போன்றவை தேவை. பழங்களை மொத்தவிலைக் கடைகளில் மலிவாக வாங்கலாம். தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றிலும் செய்யலாம். கெமிக்கல் கலக்காமல் செய்தால் 20 முதல் 25 நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் சேர்ப்பதானால் ஆறு மாதங்கள்வரை கெடாமலிருக்கும். காலி பாட்டில்கள் தேவை. ஒரு பாட்டில் ஐந்து ரூபாய்.  மொத்த முதலீடு 2,000 ரூபாய் போதுமானது.

விற்பனை வாய்ப்பு... லாபம்?

வீடுகளில், பள்ளிக்கூடங்களில், மருத்துவ மனைகளில், சின்னக் கடைகளில்... இப்படி எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். முக்கால் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டில், 120 முதல் 150 ரூபாய் வரை விற்கலாம். பழத்தின் விலையைப் பொறுத்து இது மாறக் கூடும். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

எதில் கவனம் தேவை?

தரம்தான் இதில் முக்கியம். எனவே, கெமிக்கல் சேர்க்காமல் செய்வதென முடிவு செய்துவிட்டால் குறிப் பிட்ட நாள்களுக்குள் உபயோகித்துவிட வேண்டும் எனச் சொல்லி விற்க வேண் டும். பாட்டில்களை புதிதாக வாங்கி, வெந்நீரில் கழுவி, வெயிலில் உலரவைத்த பிறகே சிரப்பை நிரப்ப வேண்டும். பாட்டிலில் ஈரமிருந்தால் ஜூஸ் சீக்கிரமே கெட்டுப்போகும்.

நீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்

சிலர் சிந்தெடிக் சிரப் சேர்த்துச் செய்துவிட்டு, அதை இயற்கையானதாகக் காட்ட  செயற்கைப் பழக்கூழையும் வாங்கிக் கலந்துவிடுகிறார்கள். அதாவது செயற்கையாக திராட்சை சிரப்பைத் தயார் செய்துவிட்டு, திராட்சைப் பழ விழுது போன்றே கிடைக்கும் செயற்கையான சேர்க்கையையும் அதில் கலப்பார்கள். இது தவறு. தேர்ந்தெடுக்கும் பழங்கள் தரமாக, கெட்டுப்போகாமலிருக்க வேண்டியதும் அவசியம்.

பயிற்சி?

சிந்தெடிக் சிரப் பயன்படுத்திச் செய்வது, பழங்களில் செய்வது, பூக்களில் செய்வது என மூன்று வகையான பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒரே நாள் பயிற்சிக்கு 1,000 ரூபாய் கட்டணம்.

-சாஹா,  படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism