##~##

காலம் காலமாக தொடரும் கடமைப் போராட்டம்
தீர்ப்பு எழுத வருகிறார்கள் சாதனைப் பெண்கள்...

''குழந்தைகளைப் பார்ப்பேனா... வேலையைப் பார்ப்பேனா?'' என்று புலம்பும் பெண்கள், பல சமயங்களில்... '' ஏதாவது ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிடைக்கும்'' என்கிற சுயதத்துவம் சொல்லி, குழந்தைக்காக வேலையை விடுகிறார்கள்! வேறு சிலர், கணவருக்காக உத்யோகத்தை உதறுகிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடும்பம் - வேலை என்கிற இரட்டைக் குதிரை சவாரி... சவாலான விஷயம்தான். ஆனால், இரண்டாக  பிரிந்திருக்கும் தண்டவாளத்தில் ஒரு ரயில் பயணிப்பதைப் போல... சில பெண்கள் மட்டும் எப்படி சுலபமாக்கிக் கொள்கிறார்கள்?

'சூப்பர் மேன்' என்பது கற்பனை கதாபாத்திரம். ஆனால், 'சூப்பர் உமன்' என்பது வீட்டுக்கு வீடு... நூற்றுக்கு நூறு நிஜம்! வீடு, குடும்பம், குழந்தைகள், சொந்தம், வேலை, சமூகம், சுற்றம், சுயமுன்னேற்றம் என்று அத்தனை விஷயங்களையும் சமாளிப்பதுடன்... கிடுகிடு என்று தான் இயங்கும் தளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் 'சாதனைச் செல்வி'கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.

குடும்பமா... வேலையா? - 1

'அடுத்தவர்களிடம் இருந்து திரட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எங்கே முதலீடு செய்தால் நஷ்டம் தவிர்த்து லாபத்தைப் பெருக்க முடியும்' என்று ஆராய்ந்து முடிவெடுக்கும் 'மல்டிபிள் ஆல்டர்னேட் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ ரேணுகா ராம்நாத்...

'பிஎம்டபிள்யூ' மோட்டார் கார் நிறுவனம் தொடங்கி... 'இன்ஃபோசிஸ்' சாஃப்ட்வேர் நிறுவனம் வரை பல கம்பெனிகள் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையின் பிரமாண்ட 'மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி'யின் தலைமை செயல் அலுவலர் சங்கீதா பிரசாத்...

நாட்டின் பெரிய பெரிய கம்பெனிகளில் வைஸ் பிரசிடென்ட் எனும் உயரிய பதவி வகிப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற பிரச்னைகள் வந்தால், அதைத் தீர்த்து வைக்கும் 'செரிப்ரஸ் கன்சல்டன்ட்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் அனிதா ராமச்சந் திரன்...

இப்படி வெவ்வேறு தளங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் பலர், எப்போதுமே பிரமிக்க வைக்கிறார்கள்.

குடும்பமா... வேலையா? - 1

இவர்கள் எல்லோருக்குமே குடும்பம், கணவன், குழந்தைகள் என்று எல்லாருமே உண்டு. இவர்கள் எல்லோருமே பிறக்கும்போது தங்கத் தொட்டில்களில் தாலாட்டப்பட்டவர்கள் இல்லை. பற்றாக்குறை பட்ஜெட் போட்டு செலவு செய்யும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வர்கள்தான் அதிகம். இன்று பெருமையோடு பலரும் பார்க்கும் இடத்துக்கு வந்திருக்கும் இத்தகைய பெண்கள்... சந்தித்த கஷ்டநஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல! ஆனால், அவைதான் இவர்களை புடம் போட்ட தங்கமாக ஜொலிக்க வைக்கிறது. அதேசமயம், குடும்பச் சூழலால் வேலைக்கு 'குட்பை' சொல்லிவிட்டு ஒதுங்கிய பெண்களும் இங்கே இல்லாமலில்லை! இவர்கள் அத்தனை பேரும் சொல்லும் எதார்த்த உண்மைகளும், அனுபவப் பகிர்வுகளும்... நம்மை கட்டிப் போட்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத கட்டுக்களை நிச்சயம் அவிழ்த்துவிடும்!

உலக உருண்டைக்கே அதிகார மையமாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பூர்ண நம்பிக்கையைப் பெற்று, அவருடைய நிழலாக இருந்து வேலை பார்த்த ஆன் மேரியின் வாழ்க்கையிலும் 'குடும்பமா... வேலையா?’ என்கிற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு, பிராக்டிகலாக அவர் தந்த பதில்... புருவத்தை உயர்த்த வைக்கும். அவருடைய கதையிலிருந்தே இந்த 'பிராக்டிகல்' தொடரின் பயணம் தொடங்குவோமா?!

குடும்பமா... வேலையா?

- யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism