Published:Updated:

இயற்கையை நேசி: எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!

எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!

வாகை விக்டோரியா

இயற்கையை நேசி: எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!

வாகை விக்டோரியா

Published:Updated:
எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!

``விகடன்ல 2016-ம் ஆண்டு வெளிவந்த `ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி'ங்கற தொடர்தான் என் வாழ்க்கையையே தலைகீழா மாத்துச்சு. எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு இருந்த நான் பனை ஓலைத் தயாரிப்புக்கு மாறினது விகடனாலதான்'' என்று ஆச்சர்யமூட்டுகிறார் தஞ்சாவூர் திருக்கானூர்ப்பட்டியைச் சேர்ந்த வாகை விக்டோரியா சின்னப்பன். முகநூல் மூலமாகப் பனைப்பெட்டி, கடவம், பாய், தடுக்கு, சாவிக்கொத்து என பாரம்பர்ய பனைப்பொருள்களை விற்பனை செய்துவருகிற இவரைச் சந்தித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அந்தத் தொடரை எழுதின `செம்மை' அமைப்பின் நிறுவனர் செந்தமிழன், ராமநாதபுரத்துல உள்ள ஒரு பனங்காட்டுல, பனைப்பயணம் ஏற்பாடு செஞ்சிருந்தார். பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு, பனை ஏறுதல்னு பனை தொடர்பான நேரடியான அனுபவம் என் மனசுல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அதன்பிறகு, `பனை மரச் சாலை'ங்கற புத்தகம் எழுதிய காட்சன் சாமுவேலை நாகர்கோயில்ல சந்திச்சேன். அவர்தான் பனை சார்ந்த மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் மூலம் பனைப் பொருள்கள் உருவாக்கக் கற்றுக்கொண்டேன்.

இயற்கையை நேசி: எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு!

பாரம்பர்ய முறையில் கத்தி, பொத்தம்பு பயன்படுத்தி கைகளால மட்டும் செய்றேன். மெஷின்ல செய்ற பனைப்பொருள்கள் நேர்த்தியா இருக்காது. பனையோட இயல்பான நிறமே எல்லோரையும் கவரும். அதனால கூடுதல் கலர் ஏத்துறது கிடையாது.

பனைப்பொருள்களை அடிப்படைப் பின்னல் முறையில ஒரே ஓலையைப் மட்டும் பயன்படுத்திச் செய்யலாம். ஆனால், பல ஓலைகளை ஒண்ணா சேர்க்கிற பொத்தல் முறைதான் உறுதியா இருக்கும். கடுமையான உழைப்பும் முழுமையான கவனமும் இருந்தால்தான் பொத்தல் முறை பனைப் பொருள்களை நேர்த்தியா உருவாக்க முடியும்.

வாகை விக்டோரியா
வாகை விக்டோரியா

இதை நான் மனதார நேசிச்சு செய்றேன். தூக்கத்தைக் குறைச்சுக்கிட்டு கடுமையான வேலைபார்க்கிற பால் வியாபாரியான எங்கப்பாதான் எனக்கு ரோல்மாடல். ஸோ, உழைப்பு என் ரத்தத்துல கலந்தது'' என்கிற வாகை, இப்போது ஆர்வமுள்ளோருக்கு பனைப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி அளித்து வருகிறார்.