Published:Updated:

ரூ.1,000 சம்பளம் to ரூ.4 கோடி டர்ன் ஓவர்! - 'தாய் பயோடெக்' அருள் கண்ணாவின் அசாத்திய அனுபவம்

அருள் கண்ணா
அருள் கண்ணா

நிறைய அனுபவங்களும் நம்பிக்கையும் கிடைச்சுது. 2014-ம் ஆண்டு, ஐந்து ஊழியர்களுடன் திருச்சியை அடுத்த சிறுகனூர்ல மாவட்டத்திலேயே முதல் பயோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினேன்.

கிராமத்துச் சூழலில் பல்வேறு தடைகளைக் கடந்து பட்டதாரி ஆனார், அருள் கண்ணா. படித்த படிப்புக்கான சரியான வேலை கிடைக்காததால், தொழில்முனைவோராகி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க ஆயத்தமானார். அதிகம் பிரபலமாகாத பயோ டெக்னாலஜி துறையில், சவால்களைக் கடந்து தொழில்முனைவோராகப் பயணிக்கும் திருச்சி 'தாய் பயோடெக்' நிறுவன உரிமையாளர் அருள் கண்ணா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

''திருவாரூர் மாவட்டம் திருநெய்பேர் கிராமம் என் பூர்வீகம். நடுத்தரக் குடும்பம். நல்லா படிப்பேன். பத்தாவதுல கணக்குப் பாடத்தில் 100 மார்க் எடுத்ததால, மேற்கொண்டு படிக்க அனுமதிச்சாங்க. எங்க ஊர்ல இருந்து, திருவாரூருக்குத் தினமும் போக வர 18 கிலோமீட்டர் பயணம் செஞ்சு ப்ளஸ் டூ முடிச்சேன். கிராமத்துச் சூழல்லயே வாழ்க்கை முடிஞ்சுடக் கூடாது. வெளியுலகத்துக்கு வந்து முன்னேறணும்னு நிறைய கனவுகள் இருந்துச்சு. டாக்டர் படிப்பு ஆசை நிறைவேறலை. அதைச் சார்ந்த பயோ கெமிஸ்ட்ரி படிப்பைத் தேர்வு செஞ்சேன். வீட்டில் ரொம்பவே போராடி அனுமதி வாங்கித்தான், கல்லூரியில சேர்ந்தேன். தினமும் போக வர 80 கிலோ மீட்டர். ஆறு பஸ் மாறி சிரமப்பட்டுத்தான் பி.எஸ்ஸி முடிச்சு, குடும்பத்துல முதல் தலைமுறை பட்டதாரி ஆனேன். மீண்டும் பிடிவாதத்துடன் ஹாஸ்டல்ல தங்கி எம்.எஸ்ஸி முடிச்சேன்.

உலகில் பெரும்பாலான பணிகள், பயோ கெமிக்கல் சார்ந்துதான் நடக்கின்றன. அதனால சிறியதும் பெரியதுமாக பல்வேறு அறிவியல் பணிகளிலும் பயோ கெமிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கு.

அடுத்து ஒரு ஸ்கூல்ல தற்காலிக ஆசிரியராகச் சில மாதங்கள் வேலை செய்தேன். மாதச் சம்பளம் 1,000 ரூபாய். பிறகு, கும்பகோணத்துல கல்லூரிப் பேராசிரியரா சில காலம் வேலை. இந்த நிலையில கல்யாணமாகி, திருச்சியில குடியேறினோம். கணவரும் பேராசிரியர்தான். குழந்தையைப் பார்த்துக்கிட்டு வீட்டில் இருந்தே டியூஷன் எடுத்தேன். 'எவ்வளவு சிரமப்பட்டு படிச்சோம்? நமக்கான அடையாளம் இதுதானா? இப்படியே வாழ்க்கை முடிஞ்சுடக் கூடாது'ன்னு அப்போ ஒவ்வொரு நாளும் தோணும்.

நான் கல்லூரி முடிச்சபோதும், இப்போதும்கூட நம் நாட்டில் பயோ கெமிஸ்ட்ரி படிச்சவங்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. அந்தப் பிரச்னையை நானே எதிர்கொண்டேன். எனவே, இந்தத் துறையில பிசினஸ் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்போது தைரியமும் நம்பிக்கையும் மட்டும்தான் என் கைவசம் இருந்துச்சு. தொடர்ந்து அலைந்து, ஒரு வருட போராட்டத்துக்குப் பிறகு, மாவட்டத் தொழில் மையத்துல தொழில்கடன் கிடைச்சுது. இதுக்கிடையே இந்தத் தொழிலுக்கான வரவேற்புப் பத்தி தெரிஞ்சுக்க திருப்பூரிலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று அனுபவங்களைக் கத்துக்கிட்டேன். பிறகு, சோதனை முயற்சியாக திருப்பூர்ல இருந்து துணி வகைகளை வாங்கிட்டுவந்து, அவற்றைப் பல்வேறு பயோ கெமிக்கல் முறைகளுக்கு உட்படுத்தி, சின்ன அளவுல நானே நேரடியா விற்பனையிலும் ஈடுபட்டேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2NnrJKx

இதனால், நிறைய அனுபவங்களும் நம்பிக்கையும் கிடைச்சுது. 2014-ம் ஆண்டு, ஐந்து ஊழியர்களுடன் திருச்சியை அடுத்த சிறுகனூர்ல மாவட்டத்திலேயே முதல் பயோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினேன். உலகில் பெரும்பாலான பணிகள், பயோ கெமிக்கல் சார்ந்துதான் நடக்கின்றன. அதனால சிறியதும் பெரியதுமாக பல்வேறு அறிவியல் பணிகளிலும் பயோ கெமிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கு. ஆரம்பகாலத்துல, ஜவுளித்துறை உட்பட பல்வேறு நிறுவனங்களுக்குச் சிறிய அளவுலதான் பயோ கெமிக்கல் பொருள்களை சப்ளை செய்ய முடிஞ்சது. மொலாசஸ்ல இருந்து ஆல்கஹால் தயாரிக்கிற பணிகளுக்காக, சர்க்கரை நிறுவனங்கள்ல ஆர்டர் எடுக்க நிறையவே போராடினேன். எம்.என்.சி நிறுவனங்களின் ஆதிக்கத்தால ஆர்டர்கள் கிடைக்கவேயில்லை.

ரூ.1,000 சம்பளம் to ரூ.4 கோடி டர்ன் ஓவர்! - 'தாய் பயோடெக்' அருள் கண்ணாவின் அசாத்திய அனுபவம்

மதிப்புக்கூட்டப்பட்ட ஒரு கிலோ பயோ கெமிக்கலைக்கூட விற்க முடியாமல் பல நாள்கள் அழுததுண்டு. என் நிறுவனம் பிரபல மாகாததால, என்னுடைய பிராண்டுகளை விற்பனை செய்யவும் பிரபலப்படுத்தவும் ரொம்பவே போராடினேன். மார்க்கெட்டிங்கும் விநியோகஸ்தர்களைத் தக்கவைக்கிறதும் சவாலாக இருந்துச்சு. ஆனாலும் விரக்தியடை யாம, என் தொழிலுக்கான தேவை, அடிப்படை விஷயங்கள், தவறான அணுகுமுறைகள் எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சுகிட்டேன். பின்னர், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு நிறைய அலைஞ்சு, படிப்படியா ஆர்டர்கள் பிடிச்சேன். அந்த நிறுவனங்களை நல்ல நட்புறவுடன் நிரந்தர கஸ்டமர் நிறுவனங்களாக்கினேன்...

தொழிலை ஆரம்பிக்கிறதுதான் பெரிய சவால்னு நினைச்சேன். ஆனா, நிறுவனத்தை வெற்றிகரமா நடத்துறதுதான் பெரும் சவால்னு பிறகுதான் புரிஞ்சது. சவால்களை எதிர்நோக்கிக் காத்திருக்கப் பழகிகிட்டதால, தோல்விகளுக்குத் துவண்டுபோகிற அவசியம் ஏற்படுறதில்லை. பயோ டெக்னாலஜி படிப்பை முடிச்சவங்க பலரும் டெஸ்ட்டிங் லேப் வைப்பதில்தான் கவனம் செலுத்துறாங்க. அதைத் தாண்டி, பிசினஸ் ரீதியாகவும் இந்தத் துறையில் பெரிதாக சாதிக்க முடியும். பெரிய இலக்குகளுக்கு ஏற்பதான், வெற்றியும் அமையும்."

அரசு நிறுவன ஆர்டர் உட்பட இப்போது 90 நிறுவனங்கள், இவர் நிறுவன வாடிக்கையாளர்கள். 20 ஊழியர்களுக்கு முதலாளியான அருள் கண்ணா, ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். இது சாத்தியமானது எப்படி? - 'தாய் பயோடெக்' நிறுவன உரிமையாளர் அருள் கண்ணா பகிரும் நம்பிக்கையூட்டும் வெற்றி அனுபவங்களை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/business/women/successful-business-story-of-arul-kanna-7

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு