Published:Updated:

அன்று சில லட்சங்களில் முதலீடு... இன்று டர்ன் ஓவர் ரூ.7 கோடி! - சத்யபிரியாவின் `கன'ரக பயணம்!

ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும், `நம்மாள மீள முடியாது'ன்னு தப்பா நினைச்சு வருத்தப்படத் தேவையில்லை. நம்ம ஆரம்ப காலத்தை நினைச்சுப் பார்க்கணும்

சத்யப்ரியா
சத்யப்ரியா

சென்னை `பவானிஸ் இன்ஜினீயரிங்' நிறுவனத்தின் உரிமையாளர், சத்யப்ரியா. வறுமையால் கல்வி கற்க முடியாமல் வருந்தியவர்... பணிச்சூழல் கற்றுத்தந்தப் பாடங்களால் முதலாளியாக வேண்டும் என்று தைரியமாக நடைபோடத் தொடங்கினார். பல தடைகளைக் கடந்தவருக்கு, புதிய தொழில் பாதைகளும் வசமாகியுள்ளன. இரண்டு தொழில்களைச் சிறப்பாக நடத்திவருகிறவர், மற்றுமொரு தொழிலிலும் தடம் பதிக்கவுள்ளார். தன்னம்பிக்கை தொழில்முனைவோரான சத்யப்ரியா, தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2NYhRHT

``பூர்வீகம், செய்யாறு அருகேயுள்ள பாராசூர். நடுத்தரக் குடும்பம். பட்டதாரிகளான பெற்றோர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்றாங்க. அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். குடும்பப் பொருளாதாரச் சூழல் சரியில்லாததால், ஆசிரியர் ஆகணும் என்கிற என் ஆசை நிறைவேறலை. ரெகுலரா கல்லூரிக்குப் போகவும் முடியலை. தன் குழந்தையின் பிறந்த நாளுக்குக் கிடைச்ச 3,000 ரூபாய் பரிசுப் பணத்தை அக்கா எனக்குக் கொடுத்து உதவினாங்க. அதைக்கொண்டுதான் கரஸ்ல பி.காம் சேர்ந்தேன். இதுக்கிடையே எங்க ஊர்லயே விவசாய வேலை உட்பட பல்வேறு வேலைகளைச் செய்தேன். 2002-ம் ஆண்டு, இங்கிலீஷ் கத்துக்கறதுக்காகவே சென்னை வந்தேன். பயிற்சிக் கட்டணம் 1,500 ரூபாய். அந்தத் தொகையையே சம்பளமா பேசி, கோச்சிங் சென்டர்லயே முழு நேரமா ஒரு வருஷம் வேலை செய்தேன்.

அன்று சில லட்சங்களில் முதலீடு... இன்று டர்ன் ஓவர் ரூ.7 கோடி! - சத்யபிரியாவின் `கன'ரக பயணம்!

அடுத்து தனியார் நிறுவனத்துல, 4,500 ரூபாய் சம்பளத்துல அக்கவுன்ட்ஸ் வேலை. கடுமையா உழைச்சேன். மூணே வருஷத்துல 45,000 ரூபாய் சம்பளத்துல, 400 பேருக்கு நிர்வாகியா உயர்ந்தேன். நிறைய அனுபவங்கள் பெற்றிருந்த நிலையில, அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடிவு செஞ்சேன். சிரமப்பட்டு ஓரளவுக்குப் பணம் சேர்த்தேன். சில லட்சங்கள் முதலீடு செய்து, 2010-ம் ஆண்டு, 'பவானிஸ் இன்ஜினீயரிங்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். ஹைவா இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் டீலர் கம் சர்வீஸ் சென்டர் வேலைகளைச் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன்.

முதல் மூணு வருஷம் ரொம்பவே போராட்டமா இருந்துச்சு. கஸ்டமர்களை ஈர்க்க ரொம்ப சிரமப்பட்டேன். 2015-ம் ஆண்டு, லூகாஸ் நிறுவனத்தின் ஆட்டோ எலெக்ட்ரிகல் டிவிஷன்ல சேல்ஸ் அண்டு சர்வீஸ் பணிகளைச் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன். லோக்கல் ஆர்டர்ஸும் எடுத்தேன். ஹைவா நிறுவனத்துல கனரக வாகனங்களும், லூகாஸ் நிறுவனத்துல கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களும் வரும். அவற்றுக்கான உதிரிப் பாகங்களை விற்பனை செய்வது, சர்வீஸ் செய்து கொடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்துகொடுக்கிறோம்.

எல்லா வேலைகளுக்கும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் இருக்காங்க. கண்காணிக்கிறதுதான் என் பொறுப்பு. தொழில்நுட்ப வளர்ச்சியால், வாகனங் களில் ஏற்படும் பழுது உள்ளிட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிச்சுடுச்சு. இப்போதெல்லாம் உதிரிப் பாகங்களை அடிக்கடி பழுது பார்ப்பதைவிடவும், பழுதான பாகங்களை மாற்றவே பலரும் விரும்புறாங்க. அதனால, சர்வீஸ் வேலைக்கு வரவேற்பு குறைஞ்சுகிட்டே வருது. அதனால, ரெண்டு வருஷ முன்திட்டமிடலுடன், 30 லாரிகளை சொந்தமா வாங்கினேன். உணவுப் பொருள்கள், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருள்களை டெலிவரி செய்ய லாரிகளை வாடகைக்கு விடறேன். இந்த பிளான் நல்ல பலன் கொடுத்துச்சு.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அன்று சில லட்சங்களில் முதலீடு... இன்று டர்ன் ஓவர் ரூ.7 கோடி! - சத்யபிரியாவின் `கன'ரக பயணம்!

மூன்று பாடங்கள்...

* ஒரு பிசினஸைத் தொடங்கி அது நல்லா போயிட்டிருந்தாலும், காலமாற்றத்துக்கேற்ப தொழிலில் புதுமைகளைப் புகுத்தி விரிவுபடுத்திட்டே இருந்தால்தான் நீண்டகால வளர்ச்சியைப் பெற முடியும். அதற்கு ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுக்கிட்டே இருக்கணும்.

* ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும், 'நம்மாள மீள முடியாது'ன்னு தப்பா நினைச்சு வருத்தப்படத் தேவையில்லை. நம்ம ஆரம்ப காலத்தை நினைச்சுப் பார்க்கணும். இவ்வளவு தூரம் கடந்துவந்த நம்மால், நிச்சயம் லாபப் பாதையில இயங்க முடியும்னு நம்பிக்கையோடு நடைபோடணும்.

* தொழில் கடன் வாங்கறது சுலபம். ஆனா, அதை முறையா கட்டத் தெரிஞ்சாதான், தொழிலை படிப்படியா விரிவுபடுத்தி வெற்றிகாண முடியும்.

அன்று சில லட்சங்களில் முதலீடு... இன்று டர்ன் ஓவர் ரூ.7 கோடி! - சத்யபிரியாவின் `கன'ரக பயணம்!

சென்னையில் கனரக வாகனங்கள் மற்றும் கார்களுக்கு சர்வீஸ் பணிகளைச் செய்கிறார். தவிர, ஹைவா நிறுவன வாகன சர்வீஸ் அழைப்புகள் வந்தால், தமிழகத்தில் எல்லாப் பகுதிகளுக்கும் ஊழியர்களை நேரில் அனுப்பி சர்வீஸ் பணிகளைச் செய்துகொடுக்கிறார். சர்வீஸ் பணிகளில் ஈடுபடும் 20 ஊழியர்களுக்குத் தங்குமிட வசதியை இலவசமாக ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். ஊழியர்களின் உணவுத் தேவைக்கும் சலுகைகளை வழங்குகிறார். பிறருக்கு உதவுவதற்காகவும் பல லட்சம் ரூபாய் செலவிடுகிறார். 60 பேருக்கு முதலாளியான சத்யப்ரியா, ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார்.

``குடும்பப் பொருளாதார நிலையை மேம்படுத்த நேரம் காலம் பார்க்காம உழைச்சேன். ரெண்டு தொழிலும் நல்லாதான் போயிட்டிருந்துச்சு. இந்த நிலையில பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் நாலரை கோடி ரூபாய் நஷ்டம். அதுவரை வாழ்நாள்ல சேமிச்ச மொத்தப் பணத்தையும் இழந்தேன்..."

- 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பினால் பள்ளத்தில் கிடக்கிற நிலை. அதிலிருந்தும் சத்யப்ரியா மீண்டார். எப்படி? - இவரது பிசினஸ் கதையை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > என் பிசினஸ் கதை - 4: இரண்டு மணிநேர தூக்கம்... 30 லாரிகள்... ரூ.7 கோடி டர்ன் ஓவர்! https://www.vikatan.com/business/women/business-story-of-sathyapriya

வீடியோ வடிவில்...

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo