Published:Updated:

``பேராசிரியை டு 30 ஊழியர்களுக்கு முதலாளி!'' - உணவுப் பொருள்கள் பிசினஸில் கலக்கும் முனைவர் ஆஷ்மி

வெங்கையா நாயுடு, ஆஷ்மி
வெங்கையா நாயுடு, ஆஷ்மி

"என்னுடைய நம்பிக்கை வீண்போகலை. இன்னைக்கு நல்ல பெயரும், சிறப்பான வருமானமும் ஈட்ட முடிவதோடு, 30-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறேன்."

தன் அம்மாவின் ஆரோக்கியத்துக்காக, இயற்கை உணவுப் பொருள்கள் மீதான தேடலில் இறங்கிய சென்னையைச் சேர்ந்த ஆஷ்மிக்கு, புதிய தொழில் பாதைகளும் வசமாகின. அதன் பலனாக, 'ஃபெட்டல் பயோ புராடெக்ட்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இயற்கை உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார். மேலும், பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் தொழில்முனைவோராக மாறியிருக்கிறார். தன் வெற்றிகுறித்து ஆஷ்மி திருவம்பலம் பேசுகையில்...

ஆஷ்மி
ஆஷ்மி

"இளம் வயதில் நாகர்கோவிலில் இயற்கைச் சூழலில் வளர்ந்தேன். அதனால், இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள்மீது ஆர்வம் ஏற்படவே, எம்.எஸ்ஸி பயோ டெக்னாலஜி படிச்சேன். பிறகு, பேராசிரியராக வேலை செய்துகிட்டிருக்கும்போது என் அம்மாவுக்கு இருதய நோய் ஏற்பட்டுச்சு. அதற்கான காரணங்களைத் தேடியபோது, பல காரணங்களுடன் ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் முழுமையா புரிஞ்சது.

அந்த நேரத்தில், கல்யாணமாகி சென்னையில் குடியேறினோம். அம்மாவின் உடல்நிலைக்காக இயற்கை உணவுப் பொருள்கள் தேடலில் ஈடுபட்டேன். மேலும், இயற்கை உணவுகளின் மூலம் புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றிய பி.ஹெச்டி படிப்பையும் முடிச்சேன். இதனால, நிறைய பயனுள்ள பாதைகள் எனக்குத் தெரிஞ்சது" என்பவர், அதன் பிறகு தொழில்முனைவோராகவும் களமிறங்கியிருக்கிறார்.

ஆஷ்மி
ஆஷ்மி
"ஐபிஎஸ் பணியிலிருந்து சமூக சேவையோடு இயற்கை விவசாயம் பக்கம் வந்தது ஏன்?" -`கர்நாடக சிங்கம்' அண்ணாமலை

"சேமிப்புப் பணம் மற்றும் வங்கிக் கடனுதவி பெற்று இயற்கை உணவுப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பிச்சேன். முதல் கட்டமாக கையிருப்பு மற்றும் வங்கியில் கடன்பெற்று தொழிற்சாலை அமைச்சு இயந்திரங்களை நிறுவினேன். அதற்கு என் கணவர் ரொம்பவும் உதவினார். குறிப்பா, சிறிதும் தண்ணீர் சேர்க்காம, பூண்டு மற்றும் இஞ்சியிலிருந்து சாறு எடுக்கவும், எலுமிச்சம்பழங்களை நறுக்கி சாறு எடுக்கவும், பல மாத உழைப்புக்குப் பிறகு இயந்திரங்களை வடிவமைச்சேன்.

உற்பத்தியை ஆரம்பிச்சு, கார்டியாக் ரிஸ்க் ஃப்ரி என்ற இதய நோயாளிகளுக்கான டானிக் மாதிரியான உணவுப்பொருளைத் தயாரிச்சேன். மத்திய அரசின் FSSAI (Food Safety and Standards Authority of India), SSI (Small Scale Industries) எனப்படும் சிறு தொழிற்சாலைகளுக்கான அனுமதி மற்றும் ISO தரச் சான்றிதழ்களை வாங்கி விற்பனையைத் தொடங்கினேன்.

ஆஷ்மி
ஆஷ்மி

ஆரம்பத்துல உணவுப் பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் இயற்கை அங்காடிகளில் என் நிறுவனத் தயாரிப்புகளை விற்க தினமும் ஏறி இறங்கினேன். அப்பெல்லாம் பெரிசா லாபம் கிடைக்கல. ஆனாலும் நம்பிக்கையோடு இருந்தேன். அதன் பலனாக, ஒருவர் மூலம் ஒருவராக என் நிறுவன ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாகவும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது.

என் குழந்தைகளின் நலனுக்காக, புரதச்சத்து அதிகமுள்ள நேந்திரங்காய் பவுடர், கேழ்வரகு மற்றும் பாசிப்பருப்பு பவுடர், அரிசியுடன் சில சேர்மானங்கள் சேர்ந்த பவுடர் எனத் தனித்தனியே சில ஊட்டச்சத்து பொருள்களைத் தயாரிச்சேன்.

ஆஷ்மி
ஆஷ்மி
1,000 குழந்தைகளில் 3 பேருக்கு காதுகேளாமை பிரச்னை... சமுதாயம் ஆதரித்தால் சாதிக்கலாம்!

என் குழந்தைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கவே, அந்த ஊட்டச்சத்துப் பொருள்களையும் என் நிறுவனத்தில் தயாரிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்" என்கிற ஆஷ்மிக்கு, அமெரிக்காவின் 'Global Peace' என்ற பல்கலைக்கழகம் சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இவர், ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார்.

"இந்தியாவில், பல மாநிலங்களில் என் நிறுவன தயாரிப்புகள் விற்பனையாகின்றன. தவிர, வட அயர்லாந்து நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறேன். விரைவில், மேலும் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறேன். என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. இன்னைக்கு நல்ல பெயரும் சிறப்பான வருமானமும் ஈட்ட முடிவதோடு, 30-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறேன்.

ஆஷ்மி
ஆஷ்மி

உணவுப் பொருள்கள் என்பதால், மிகுந்த கவனத்துடனும் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் தயாரிப்புகளை விற்பனை செய்றேன். அதுக்காக, இயற்கை விவசாயிகளிடமிருந்துதான் தேவையான விளைபொருள்களை வாங்குகிறேன்.

நாகர்கோவிலிலுள்ள என்னுடைய விவசாய நிலத்தில், இயற்கை விவசாயம் செய்வதற்கான முயற்சியிலும் கவனம் செலுத்துகிறேன். மக்களும், துரித உணவுகளையும் ரசாயன விளைபொருள்களையும் பயன்படுத்தாமல் இருந்தாலே, பெரும்பலான நோய்களின் வரவைத் தடுக்க முடியும்" என்கிறார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு