Published:Updated:

‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா

பாலசந்திரா
பிரீமியம் ஸ்டோரி
பாலசந்திரா

‘`இந்தக் கடை ஆரம்பிச்சு 28 வருஷங்களாச்சு. கணவனால கைவிடப்பட்ட பொண்ணுங் களுக்கும், ஆதரவு இல்லாத பொண்ணுங்களுக் கும் இலவசமா டெய்லரிங் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா

‘`இந்தக் கடை ஆரம்பிச்சு 28 வருஷங்களாச்சு. கணவனால கைவிடப்பட்ட பொண்ணுங் களுக்கும், ஆதரவு இல்லாத பொண்ணுங்களுக் கும் இலவசமா டெய்லரிங் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

Published:Updated:
பாலசந்திரா
பிரீமியம் ஸ்டோரி
பாலசந்திரா

புடவை, ஆபரணங்கள் அணிந்து ஒரே நேர்க் கோட்டில் நிற்பது போன்ற ஒன்பது அம்மன் சிலைகளின் பிரமாண்ட புகைப்படம் கடந்த வருட நவராத்திரியின்போது சமூக வலை தளங் களில் பலராலும் பகிரப்பட்டது. அந்த அம்மன் அலங்காரத்தைச் செய்திருந்தவர் தென்காசியைச் சேர்ந்த பாலசந்திரா.

தன் வீட்டில் வருடந்தோறும் வித்தியாச கொலு வைப்பதுடன் தெய்வ முகங்களை அலங்காரம் செய்து விற்பனையும் செய்து வருகிறார் பாலசந்திரா.

“ஃபேஸ்புக்லாம் எனக்குத் தெரியாது. போன வருஷம் எங்க வீட்டு கொலுவை போட்டோ புடிச்சு யாரோ நெட்ல போட்டாவ. அதைப் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணி பேசினது சந்தோஷமா இருந்துச்சு...’’ வெள்ளந்தி யாகப் பேசும் சந்திராவுக்குச் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் மேலகரம்.

 ‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா

‘`எட்டாப்பு வரை படிச்சேன். வீட்ல சும்மா இருந்த நேரத்துல தையல் கத்துக்கிட்டேன். 22 வய சுல கல்யாணமாச்சு. அவுகளுக்கு சொந்த ஊரு புளியங்குடி. அதனால் அங்கேயே செட்டிலாயிட் டோம். டெய்லர் கடை வைக்கணுங்கிற என் ஆசையைச் சொன்னதும் உடனே கடை வெச்சுக் கொடுத்தாவ. டெய்லரிங் வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சேன். பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சு, பார்லர் பிசினஸையும் செய்ய ஆரம் பிச்சேன். எங்களுக்கு புள்ள பொறக்கவே, அவுக வேலையை விட்டுட்டு எனக்காக குடும் பத்தை கவனிச்சுக்கிட்டாவ...'' அறிமுகம் சொல்லித் தொடர்கிறார் பாலசந்திரா.

‘`இந்தக் கடை ஆரம்பிச்சு 28 வருஷங்களாச்சு. கணவனால கைவிடப்பட்ட பொண்ணுங் களுக்கும், ஆதரவு இல்லாத பொண்ணுங்களுக் கும் இலவசமா டெய்லரிங் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். கடை வாடகை, கரன்ட் பில்னு செலவெல்லாம் போக மாசம் 30,000 ரூபாய்க்கு மேல என்னால சம்பாதிக்க முடிஞ் சுது. என் மவன், நல்லா படிச்சு, ப்ளஸ்டூவுல 1178 மார்க் எடுத்தான். என்னோட வருமானத் துல அவனை டாக்டருக்கு படிக்க வெச்சுருக்கேன். நான் புளியங்குடி மார்க் கெட்டுல கடை ஆரம் பிச்சப்போ ‘பொம்பள மார்க்கெட்டுல கடை போடுறா... எப்படி தொழில் பண்ண முடியும்’னு நக் கலா பார்த்தாவ. ‘படிக்காத பொம்பள... கடை தொறந்து என்னத்த பண் ணிறப்போறா’ன்னு பேசு னாவ. இன்னிக்கு, அதே மனுஷங்க, ‘தான் படிக் கலைனாலும் வைராக்கியத் தோட மகனை டாக்டர் ஆக்கிட்டா’னு பேசறாவ...’’ முகம் மலர பேசும் சந்திரா, தனக்குப் பெயர் வாங்கித் தந்த பொம்மை அலங்காரம் பற்றி பேச ஆரம்பித்தார்.

 ‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா

‘`14 வருஷமா கொலு வைக்கேன். ஆரம்பத்துல நான் செஞ்ச கைவினைப் பொருளை மட்டுமே அடுக்கி கொலு வெச் சுட்டு இருந்தேன். அப்புறம் பொம்மைகள் சேர்க்க ஆரம்பிச்சேன். எங்க வீட்டு கொலுவை ஒவ்வொரு வருஷமும் வித்தியாசமா எப்படி பண்ணணும்னு யோசிப்பேன். அப்படி வந்த ஐடியாதான் அம்மன் முக அலங்காரம். அம்மன் முக மோல்டுகளை வாங்கி பெயின்ட் அடிச்சு, அலங்காரம் பண்ணேன். அந்த முகத்தை மூணு அடி உயர குத்துவிளக்குல வெச்சுட்டு, குத்துவிளக்கோட உயரத்துக்கு ஏத்த மாதிரி கை, உடம்பை பேப்பரை சுருட்டி தயார் பண்ணி, புடவை, நகைன்னு அலங்காரம் பண்ணேன். கொலு பார்க்க வந்தவுங்க எல் லாரும் பாராட்டுனாவ. இதே மாதிரி அம்மன் உருவம் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாவ.

 ‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா
 ‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா
 ‘வைரல்’ ஆன ‘ஒன்பது அம்மன்!’ - அலங்காரத்தில் அசத்தும் மேலகரம் பாலசந்திரா

கும்பகோணத்துல இருந்து, பேப்பர் மோல்டுகளால ஆன அம்மன் முகங்களை வாங்கி, அதை வெச்சு முக அலங்காரம் பண்ற பிசினஸை ஆரம்பிச்சேன். நான் தயார் பண்ணிக்கொடுக்குற முகத்தை கும்பம் அல்லது குத்துவிளக்குல நிறுத்தி, அம்மனோட கை, கால்களை பேப்பரால சுருட்டி நமக்குத் தேவையான வடிவத்துக்குச் செய்யணும். அப்புறம் சேலை, நகைனு நம்ம விருப்பத்துக்கு ஏத்த மாதிரி அலங்கரிக்க வேண்டியதுதான்.

கொலு முடிஞ்சதும் முகத்தை தனியா எடுத்து பேப்பர்ல சுத்தி வெச்சுட்டா, அடுத்த நவராத்திரி, வரலட்சுமி பூஜைனு பயன் படுத்திக்கலாம். அம்மன் முக அலங்காரத்தை லாபம் தர்ற பிசினஸா பார்க்காம, ஆத்ம திருப்திக்காகப் பண்றேன். ஆனாலும் லாபம் கிடைக்குது” என்கிற சந்திரா, அம்மன் உருவம் செய்ய இலவச பயிற்சியும் கொடுக்கிறார்.