Published:Updated:

1,700 ஊழியர்கள், 500 கோடி டர்ன்ஓவர்... அப்பாவின் பிசினஸில் அசத்தும் அம்ருதா வேலுமணி

அம்ருதா வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
அம்ருதா வேலுமணி

#Motivation

1,700 ஊழியர்கள், 500 கோடி டர்ன்ஓவர்... அப்பாவின் பிசினஸில் அசத்தும் அம்ருதா வேலுமணி

#Motivation

Published:Updated:
அம்ருதா வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
அம்ருதா வேலுமணி

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவில் 10 மாநிலங் களில் கிளைபரப்பி, இயங்கிவரும் தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெடின் நிறுவனர் வேலுமணி. இந்தியாவின் முக்கிய பரிசோதனை மையமான தைரோ கேரின் வளர்ச்சி மற்றும் அதன் புதுப் பாய்ச்சலின் பின்னணியில் இருக்கிறார் அம்ருதா. வேலுமணியின் மகள். தைரோ கேர் நிறுவனத்தின் இளம் இயக்குநர்.

மும்பைக்கும், சென்னைக்குமான பரபர பயண இடைவெளியில் நம்முடன் பேசினார்.

‘`லைஃப்ல அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். மும்பையில உள்ள பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர்ல 15 வருஷங்கள் வேலை பார்த்தவர். அந்த அனுபவத்தோடு, தனியே லேப் தொடங்கினார். பரிசோதனைகளுக்கான கட்டணத்தைக் குறைக்கும் எண்ணத்துலதான் 25 வருஷங் களுக்கு முன்னாடி தைரோகேர் ஆரம்பிச்சார். அப்ப தைராய்டு டெஸ்ட்டுக்கான கட்டணம் 800 ரூபாய். இன்னிக்கு 400 ரூபாய்.

மும்பையில வீட்டுக்குள்ளேயே ஒரு ரூம்ல சின்னதா லேப் ஆரம்பிச்சார். நினைவுதெரிஞ்ச நாள்லேருந்து லேப்லதான் என் வாழ்க்கை இருந்திருக்கு’’

- பால்யம் பகிர்பவருக்கு நாடி, நரம்பு, ரத்தமெல்லாம் பிசினஸ் ஊறியிருக்கிறது.

 ஊழியர்களுடன்...
ஊழியர்களுடன்...

‘`அப்பா எதையும் சொல்லித் தர மாட்டார். அவர்கிட்ட ஒரு சந்தேகம் கேட்டா, ‘நீ புத்தி சாலின்னு நினைச்சேனே’னு சொல்வார். அந்த வார்த்தையைக் கேட்டபிறகு, நாமளே அந்தச் சந்தேகத்துக்கான விடையைத் தேடிக் கண்டுபிடிச்சிடுவோம். சாப்பிடும்போது, கெஸ்ட் வந்திருக்கும்போதுன்னு வீட்டுல எப்போதும் அவர் என்கிட்டயும் அண்ணன்கிட்டயும் ஏதாவது கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பார். அது எனக்குள்ளே தேடலை ஏற்படுத்துனுச்சு. ப்ளஸ் டூ முடிச்சபோதே நான் அப்பா வோட கம்பெனியில வேலை செய்ய ஆரம்பிச்சேன். பிசினஸ்ல சேர்ந்த பிறகு அப்பா எனக்கு டாஸ்க் கொடுத்து, அதை எப்படிச் செய்யுறேன்னு பார்ப்பார்.

முதல்ல ஹெச்.ஆர் டீம்ல வேலை பார்த்தேன். காலேஜ்ல படிச்சுகிட்டே ஹெச்.ஆர் டீமை யும் மேனேஜ் பண்ணினேன். அடுத்து டிரெயினிங், அட்மின், ஈவென்ட்ஸ், பிசினஸ் டெவலப் மென்ட், ஐடி, பர்ச்சேஸ்னு ஒவ்வொரு விஷயமா கத்துக்கிட் டேன். கம்பெனியில வேலை பார்க்குற ஒவ்வோர் ஊழியரையும் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அப்பாவோட கம்பெனிதான் னாலும் எதுலயும் நான் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கலை. டீம்ல ஒருத்தியா வேலைகளைக் கத்துக்கிட்டேன்’’ என்று அடக்கமாகச் சொல்பவர், நிறுவனத்தில் நிகழ்த்திய முக்கியமான இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுகிறார்.

‘`ஃப்ரான்சைஸி மூலமா வாடிக்கையாளர்களுக்கு ஹோம் சர்வீஸ் கொடுத்துக் கிட்டிருந்தோம். ஹோம் சர்வீஸுக்கு போற டெக்னீஷியன்களுக்குச் சரியான அனுபவம் இல்லாததால சர்வீஸின் தரம் கேள்விக்குறி யானது. அப்பதான் எங்க கம்பெனியிலேருந்து முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்ட டெக்னீஷியன்களை மட்டுமே ஹோம் சர்வீஸுக்குப் பயன் படுத்தறதுனு முடிவெடுத்தோம். இன்னிக்கு எங்ககிட்ட 1,200 டெக்னீஷியன்கள் இருக்காங்க. 300-க்கும் அதிகமான ஊழியர்களின் வேலையை டெஸ்க்டாப்லேருந்து ஆப்புக்கு மாத்தினோம். லாக்டௌன்ல அது பெரிய அளவுல ஹெல்ப் பண்ணுச்சு’’ என்கிறார்.

சுமார் 1,700 ஊழியர்களை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அம்ருதா வுக்கு அது எவ்வளவு பெரிய சவால்?

‘`கல்யாணமாகிப் போகும்போது உனக்கு சமைக்கத் தெரிஞ்சிருக் கணும், வீட்டு வேலைகள் பார்க்கத் தெரிஞ்சிருக்கணும்னு அம்மா ஒருநாளும் சொல்லி வளர்த்த தில்லை. அண்ணனையும் என்னை யும் சமமா வளர்த்தாங்க. எனக்கும் சமையல், வீடு கூட்டித் துடைக்கிறதுனு எல்லா வேலை களும் தெரியும். ஆனா அதெல்லாமே ஆண், பெண் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்.

வீட்டுல எப்படி வளர்ந்தேனோ, அதே மாதிரி தான் கம்பெனியிலும். அங்கே 50 சதவிகிதம் பேர் பெண்கள். ஆணோ, பெண்ணோ அவங்க திறமைக்கும் வேலைக்கும்தான் சம்பளம்.

‘இவ பொம்பளைதானே... இவ சொல்லி நாம என்ன கேட்கிறது’னு இதுவரை யாரும் என்னைப் பார்த்ததில்லை. `நான் பாஸ்... நான் சொல்றேன், அதனால நீ பண்ணணும்'னு சொல்லும்போதுதான் அந்த ஈகோ தலைதூக்கும். அப்படியில்லாம, ‘உங்களுக்காக நான் இருக்கேன்’ற தொனியில பேசினா வேலைகள் சுமுகமா நடக்கும்’’

- அம்ருதா சொல்லும் மேலாண்மை உளவியலில் அவ்வளவு உண்மை.

குடும்ப பிசினஸில் களமிறங்குவோர் எதிர்கொள்ளும் சாதக, பாதகங்களைத் தன் அனுபவத்திலிருந்து சொல்கிறார் அம்ருதா.

1,700 ஊழியர்கள், 
 500 கோடி டர்ன்ஓவர்...
அப்பாவின் பிசினஸில் அசத்தும்
அம்ருதா வேலுமணி

‘உங்களுக்கென்னங்க... நீங்க பணக்காரங்க’னு கமென்ட் அடிப்பாங்க. பணக்காரங்க என்ற ரிசல்ட்டுக்காக அப்பா கடினமா உழைச்சிருக் கார். பணம் சம்பாதிக்க, சம்பாதிக்க அடுத்து வீடு வாங்கலாமா, கார் வாங்கலாமானு யோசிப்போம். ஆனா, எனக்கு ஏற்கெனவே அதெல்லாம் இருக்கிறதால, பிசினஸ்ல அடுத்த கட்ட வளர்ச்சியை யோசிச்சேன். பிசினஸ்ல அப்பா சேர்த்து வெச்ச வெச்ச கான்டாக்ட்ஸ் எனக்குப் பெரிய அளவுல கைகொடுக்குது.

இதுல பாதகங்களும் நிறைய. அமிதாப் பச்சனோடு அவர் மகனை ஒப்பிட்டுப் பேசறது மாதிரிதான் இதுவும். எதிர்பார்ப்புகள் ரொம்ப பெருசா இருக்கும். பிசினஸ் குடும்பம் என்பதால வீடு, வசதிகளுக்கு அடிமையாகாத மனநிலை அவசியம்.

ஏற்கெனவே அப்பாவோ, தாத்தாவோ உருவாக்கி வெச்சிருக்கிற பிசினஸ் சாம்ராஜ்யத்தை மேல எடுத்துட்டுப் போகற திறமை இல்லாம, ‘தெரியுமா, நான்தான் எங்க கம்பெனியில டைரக்டர்’னு பெருமை பேசுறது தவறு’’

- யதார்த்தமாகச் சொல்பவர், கோவிட் காலத்தில் எதிர்கொண்ட சவால்களையும் பேசுகிறார்.

‘`கோவிட் 19 காலத்துல ரெகுலர் பிசினஸ் டல் ஆனாலும், நாங்க எங்க லேப்ல கோவிட் டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சதால பிசினஸ் ஓரளவுக்கு தாக்குப்பிடிச்சது. ஆரம்பத்துல ஊழியர்கள் லேப்ல வேலை பார்க்க பயந்தாங்க. அவங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயமில்லாம வேலை செய்ய வைக்கிறதுதான் மிகப்பெரிய சவாலா இருந்தது’’

- எனர்ஜியோடு பேசுபவருக்கு பிசினஸில் பெருங்கனவுகள் இருக்கின்றன.

‘`ஸ்டாக் மார்க்கெட்ல எங்க கம்பெனியும் லிஸ்ட்டடு. கோவிட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி 500 ரூபாயா இருந்த எங்க ஷேர், இப்போ 1,100 ரூபாயா அதிகரிச்சிருக்கு. அதை 3,000 ரூபாய்க்கு உயர்த்துறதுதான் பிளான். 1,700 ஊழியர்களை 3,000 ஆக அதிகரிக்கணும். அப்புறம் 500 கோடி டர்ன் ஓவரை 1,000 கோடியா உயர்த்தணும்’’

- அநாயாசமாகச் சொல்பவருக்கு அத்தனை யும் வாய்க்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism