Published:Updated:

அன்று ஆறு ஊழியர்கள், இன்று 70... 'சி.சி.டி.வி' சேவைத் தொழிலில் ராக்கி ராஜ்ஜியம்!

"ஆண்கள் அதிகம் நிறைந்த இந்தத் துறையில், பயணிக்கிறது எனக்கு சவால்தான். ஆனா, இதுகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கு.

ராக்கி
ராக்கி

சென்னையைச் சேர்ந்த SagTaur Systems நிறுவனத்தின் உரிமையாளர் ராக்கி தீபக், தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பயணம் இது.

கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள சிறு கிராமம்தான் ராக்கியின் பூர்வீகம். இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா துறவறம் மேற்கொண்டுவிட்டார். கிராமத்துச் சூழலில், ஆண் துணையற்ற நிலையில் குடும்பம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அரசுப் பள்ளி ஆசிரியராக அம்மா பணியாற்றிவந்த பள்ளியிலேயே ராக்கியும் அவர் தம்பியும் படித்துகொண்டிருந்தார்கள். அம்மாவின் வருமானத்தில் குடும்பம் இயங்கிவந்தது. வெளியுலகத்தில் சுதந்திரமாகச் செயல்படமுடியாத அந்தச் நிலையில் வீடு மற்றும் பள்ளிதான் ராக்கியின் மொத்த உலகம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2mm70vT

"ஆண்கள் அதிகம் நிறைந்த இந்தத் துறையில், பயணிக்கிறது எனக்கு சவால்தான். ஆனா, இதுகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கு

எம்.எஸ்ஸி முடித்ததும் தான் விரும்பியவாறு பேராசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார். வேலையில் சேர்ந்த எட்டாவது மாதம் திருமணம். அதுவரை பிசினஸ் பற்றிய தெளிவோ, ஆர்வமோ ராக்கிக்கு இல்லை. கணவர் மூலமாகத் தொழில்துறை குறித்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த கணவருக்கு, ஆந்திர மாநிலத்தின் சிமென்ட் விற்பனைப் பிரிவு நிர்வாகியாகப் பணி மாறுதல் வர, குடும்பத்துடன் ஹைதராபாத்துக்குக் குடியேறுகிறார்கள். பிறகு, கணவருக்குச் சென்னையில் பணிமாறுதல் கிடைக்க, வெளியுலகைப் பார்க்க ஆரம்பித்து, பிசினஸில் அடியெடுத்து வைக்கிறார், ராக்கி.

பிசினஸ் சென்டர் ஒன்றின் விற்பனைப் பிரிவில் வேலை, 'டைகோ' (Tyco) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் சென்னை விநியோகஸ்தர் உரிமை, வாடகை வீட்டில் அலுவலகத்தை ஏற்படுத்தி, ஆறு ஊழியர்களுடன் தொழிலை விரிவுபடுத்தியது என ராக்கி ஒரு தொழில்முனைவராக தடம்பதிக்க ஆரம்பித்தார்.

தற்போது, சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பு, தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாய்ஸ் ஆக்டிவேஷன் சிஸ்டம், அக்சஸ் கன்ட்ரோல், பில்டிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கிவருகிறது ராக்கியின் நிறுவனம். ஐ.டி.சி ஹோட்டல் குரூப், பார்க் ஹயாத் ஹோட்டல், தி பார்க் ஹோட்டல், சென்னை மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்கள், கோழிக்கோடு விமான நிலையம், குஜராத்திலுள்ள ஃபோர்டு நிறுவனம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகள் இவர் வசம்தான். 70-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் முதலாளியாக, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டிவருகிறார் ராக்கி. தவிர, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பகுதி நேரப் பணியில் இருக்கிறார்கள்.

"ஆண்கள் அதிகம் நிறைந்த இந்தத் துறையில், பயணிக்கிறது எனக்கு சவால்தான். ஆனா, இதுகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கு.

ராக்கி
ராக்கி

முதலாளி என்று என் இஷ்டத்துக்கு வந்து போறதில்லை. தினமும் காலையில முதல் ஆளா ஆபீஸூக்கு வந்து, 12 மணி நேரம் வேலை செய்யறேன். நம் செயல்பாடுதான் ஊழியர்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும். அப்போதான் அவங்களுக்கு நம்ம மேல மதிப்பு வரும். நாம் சொல்றதை அக்கறையுடன் கேட்டுப்பாங்க" எனப் புன்னகையுடன் தம்ஸ் அப் காட்டுகிறார், ராக்கி.

- 18 வருடங்களுக்கு முன்பு சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாகவே இருந்தது என்பதால்,

ராக்கியின் இந்த வெற்றிப் பயணம் இதமானதாக இருக்கவில்லை. எதிர்பாராத தடைகளைத் தகர்த்தெறிந்த பிறகே இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவர் சந்தித்த சவால்களும், அவற்றை அவர் எதிர்கொண்ட முயற்சிகளையும் அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > தொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்! https://www.vikatan.com/business/women/employee-to-employer-series-6

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/