Published:Updated:

`160 விவசாயிகளுக்கு வருவாய், 800 குடும்பங்களுக்குக் காய்கறிகள்...' - அர்ச்சனா ஸ்டாலின் அசத்தல்

அர்ச்சனா ஸ்டாலின்
அர்ச்சனா ஸ்டாலின்

தேவைக்குப்போக, மீதமான காய்கறிகளை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்தோம். ஒருகட்டத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைகிற காய்கறிகளை விலைக்குக் கேட்க ஆரம்பிச்சாங்க

''நம்ம மண்ணை நம்பி இறங்கினா, நிச்சயம் நாம பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம்" - உற்சாகமாகப் பேச தொடங்கினார், திருவள்ளூர் மாவட்டம், செம்பட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பி.இ பட்டதாரி அர்ச்சனா ஸ்டாலின்.

விவசாயிகளையும் இயற்கை உணவு ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கிற அர்ச்சனா தொடர்ந்தார்... ``சொந்த ஊர் தேனி. படிப்பு முடிச்சு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன்.

படிக்கிற காலத்திலேயே நம்மாழ்வார் ஐயா வீடியோவில் அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு வளர்ந்தேன். அப்படித்தான் இயற்கைமீதும் விவசாயம்மீதும் ஆர்வம் வந்தது. நாமும் விவசாயம் செய்யணும்கிற எண்ணம் மனசு முழுக்க நிரம்பியது.

ஒருகட்டத்துல எங்க வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைச்சோம். இயற்கை உரங்கள் பற்றியும், அதை வெச்சு எப்படி பயிர்களை இயற்கையா வளர்க்கிறது என்பது பற்றியும் விவசாயிகள்கிட்ட கேட்டேன்.

அர்ச்சனா ஸ்டாலின்
அர்ச்சனா ஸ்டாலின்

பஞ்சகவ்யா, அடுக்குச்சாம்பல், பிண்ணாக்கு வெச்சு மாடித் தோட்டத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். எங்க வீட்டில் விளைந்த காய்கறிகளோட சுவை பிரமாதமா இருந்தது.

தேவைக்குப்போக, மீதமான காய்கறிகளை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்தோம். ஒருகட்டத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைகிற காய்கறிகளை விலைக்குக் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் இயற்கை விவசாயத்தை முழுநேர தொழிலா செய்யலாம் என்கிற முடிவெடுத்தேன்.

பார்த்துட்டிருந்த வேலையை விட்டுட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ரெண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தேன். `பொழைக்க தெரியாதவள்'னு கிண்டல் செய்தாங்க. அதையெல்லாம் நான் கண்டுக்கலை. இப்போ, பல 20 வகையான கீரைகள், 25 வகையான காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்.

`160 விவசாயிகளுக்கு வருவாய், 800 குடும்பங்களுக்குக் காய்கறிகள்...' - அர்ச்சனா ஸ்டாலின் அசத்தல்

'`இயற்கை விவசாயத்தை விரும்புகிறவங்க கிட்ட, `நீங்களே விவசாயம் பண்ணுங்க. நாங்க வழிகாட்டுறோம்'னு சொன்னோம். ஆர்வம் இருந்தவங்க எல்லாம் சொன்ன பதில், `இடமில்லை' என்கிறதுதான். அப்போதான் அந்த யோசனை வந்துச்சு.."

- 160 விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்தையும் 800 குடும்பங்களுக்குக் காய்கறிகளையும் கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருக்கும்

அர்ச்சனா ஸ்டாலின் பகிர்ந்த அனுபவத்தை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > மாற்றத்தை விதைப்போம்: இது பெருமைப்படக்கூடிய தொழிலாக மாறும்! https://bit.ly/3drWg4U

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்ல்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு