Published:Updated:

பெண்களுக்கான ஆன்லைன் பிசினஸ்... அசத்தல் வருமானம்... அவள் விகடனின் வழிகாட்டுதல் பயிற்சி!

Digital business for women
Digital business for women

வீட்டையும் பார்த்துக்கொண்டு மாதம் குறைந்தது ரூ.30,000 வரை பெண்களால் எளிதாக வருமானம் ஈட்டமுடியும்.

"கோவிட் பாதிப்பின் விளைவாக பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு பலரும் வேலையிழப்பைச் சந்திக்க நேர்ந்தது. இந்தச் சூழலை அடிப்படையாகக்கொண்டு பலரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் எனச் சமூகவலைதளங்களில் குறைந்த செலவில் பிசினஸ் தொடங்கியுள்ளனர்.
"சமூக வலைதளங்கள் மூலம் பிசினஸ் தொடங்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து வருமானத்தைத் தக்கவைக்க மார்கெட்டிங் தொடங்கி, விற்பனை வரை நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஆன்லைன் பிசினஸ்க்கான வழிகாட்டுதல் வழங்கி வரும் டிஜிட்டல் மார்கெட்டிங் நிபுணர் சக்திவேல் பன்னீர் செல்வம்.

Online business
Online business

"சமுதாயத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப பிசினஸ் மற்றும் மார்கெட்டிங் யுத்தியை அப்டேட் செய்து கொண்டால் தொடர்ந்து சக்சஸ் கொடுக்க முடியும். இப்போது எல்லா வயதினருமே ஆல்லைனில் அப்டேட்டடாக இருக்கிறார்கள். அதனால் ஆன்லைன் பிசினஸுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. வீட்டையும் பார்த்துக்கொண்டு மாதம் குறைந்தது ரூ.30,000 வரை பெண்களால் எளிதாக வருமானம் ஈட்டமுடியும்.

எல்லாருடைய பிசினஸுக்கும் ஒரே மாதிரியான மார்கெட்டிங் டெக்னிக் கைகொடுக்காது. சோஷியல் மீடியா பக்கம் தொடங்குவதிலிருந்து கஸ்டமர்களை ஃபாலோ செய்வது வரை ஒவ்வொரு பிசினஸுக்கும் தனித்தனி வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பொருளைதான் விற்பனை செய்ய வேண்டும். பொருள்களுக்கான விலை ஆயிரங்களில்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற எந்த வரைமுறைகளும் ஆன்லைன் பிசினஸுக்கு கிடையாது. மக்களுக்குத் தேவையிருக்கும் எந்தப் பொருளையும் உங்களின் பிராண்டாக உருவாக்க முடியும்.

Sakthivel Pannerselvam
Sakthivel Pannerselvam

ஒரு பொருளை வடிவமைத்துவிட்டோ, உற்பத்தி செய்துவிட்டோ அதற்குத் தகுந்தாற்போல் வாடிக்கையாளர்களைத் தேடுவதை விட, வாடிக்கையாளர்களைக் கண்டறிந்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் பொருள்களை வடிவமைத்து, மார்கெட்டிங் செய்தால் எளிதில் வெற்றி பெற முடியும்" என்கிறார் அவர்.

அவள் விகடன் சார்பில் டிஜிட்டல் பிசினஸ் தொடங்குவது முதல் விற்பனை வரை கவனிக்க வேண்டிய பல பயனுள்ள விஷயங்கள் குறித்த சிறப்புப் பயிலரங்கம் பிப்ரவரி 27-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 3.30 முதல் 4.30 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் சக்திவேல் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பயனுள்ள தகவல்களை அளிக்கவிருக்கிறார். நிகழ்ச்சியில் ஆன்லைன் பிசினஸ் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படும்.

Digital business for women
Digital business for women

இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் இணைந்து பயனடைய இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

`முடி உதிர்வு A to Z' - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி! #Women'sDay
அடுத்த கட்டுரைக்கு