Published:Updated:

வீட்டிலிருந்தபடியே மாதம் ₹50,000 வருமானம்... `டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங்' பயிற்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 டெரகோட்டா ஜூவல்லரி மேக்கிங் பயிற்சி
டெரகோட்டா ஜூவல்லரி மேக்கிங் பயிற்சி

டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங்கைப் பொறுத்தவரை கலரிங், பேக்கிங் போன்ற அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டா போதும்.

``வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டே மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறேன். எனக்கு மட்டுமல்ல கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருந்தால் எல்லா பெண்களுக்கும் இது சாத்தியம்தான்" - உற்சாகம் ஏற்படுத்திப் பேசுகிறார் ஓபு உஷா. வீட்டிலிருந்து டெரகோட்டா நகைகள் தயார்செய்து இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வரும் ஓபு உஷா தன்னுடைய பிசினஸ் வெற்றி பற்றிப் பகிர்கிறார்.

ஓபு உஷா
ஓபு உஷா

``ஒன்பது வருஷமா டெரகோட்டா நகைகள் தயாரிச்சு பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். சில்க் த்ரெட் நகைகள், ஆக்சிடைஸ்டு நகைகள் என அடுத்தடுத்து நிறைய டிரெண்ட் மாறிருச்சு. ஆனாலும் டெரகோட்டா நகைகள் பட்டுப்புடவை மற்றும் டிரெடிஷனல் லுக்குக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த நகைகளுக்கான தேவைகள் எப்போதும் இருக்கு.

ஆரம்பத்தில் சில பயிற்சி வகுப்புகள் மூலம் டெரகோட்டா நகை செய்யக் கற்றுக்கொண்டேன். வீட்டிலேயே நிறைய நகைகள் செய்து பின் ஐந்தாயிரம் முதலீட்டில் மெட்டீரியல்கள் வாங்கி நகைகள் செய்து தோழிகள்கிட்ட விற்க ஆரம்பிச்சேன். அதன் பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் பிசினஸ் பக்கம் தொடங்கினேன். நான் செய்த நகைகளை புகைப்படம் எடுத்து, விலை விவரங்களுடன் அப்டேட் பண்ண ஆரம்பிச்சேன். ஆர்டர்களும் நிறைய வர ஆரம்பிச்சுது.

Terracotta Jewels
Terracotta Jewels

சோஷியல் மீடியாக்கள் மூலம் ஆர்டர்கள் எடுப்பதால் செலிபிரிட்டிகளையும் ஈஸியா அணுக முடியுது. நடிகை தேவயானி, ரக்‌ஷிதா, பாடகி மஹதி, சீரியல் நடிகை ஜனனி, சுஜா வருணினு நிறைய செலிபிரிட்டிகள் இன்ஸ்டாகிராம் மூலம் ஆர்டர் கொடுக்குறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிநாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலமாக நிறைய ஆர்டர்கள் கிடைக்குது. ஜுவல்லரி மேக்கிங்கைப் பொறுத்தவரை கலரிங், பேக்கிங் போன்ற அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டா போதும். கிரியேட்டிவிட்டியைப் பொறுத்து தொடக்கத்திலேயே மாதம் 30,000 முதல் 50,000 வரை சம்பாதிக்க முடியும்."

Terracotta Jewelry making training
Terracotta Jewelry making training

டெரகோட்டா நகைகள் செய்து என்னைப் போல பிசினஸ் செய்ய ஆசையா? அவள் விகடன் வழங்கும் `டெரகோட்டா ஜூவல்லரி மேக்கிங்' ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள். டெரகோட்டா நகையை எப்படி உருவாக்குவது, பெயின்டிங் டெக்னிக்ஸ் போன்றவற்றைக் கற்றுத் தர இருக்கிறேன். டிசம்பர் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சியில் கலந்துகொள்ளத் தேவையானவை:

சார்ட் அட்டை -1

ஐ பின் - 5

கறுப்பு நிறக் கயிறு - (10 மி.லி. மீட்டர் அளவில்)

ஓ. ஹெச்.பி ஷீட் - 1

ஸ்ட்ரா - 1

பயன்படாத சிடி - 10

செலோ டேப் - 1

பூரிக்கட்டை - 1

கத்தி - 1

பேனா மூடி - 1

டூத் பிக் - 1

Terracotta Jewelry
Terracotta Jewelry

டெரகோட்டா களிமண் (கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) - 1 பாக்கெட்

மரப்பாசிகள் (6 மி.மீ. அளவு, ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும் ) - சில

கத்தரிக்கோல் - 1

அக்ரலிக் பெயின்ட் - விருப்பமான வண்ணங்களில்

பயிற்சியில் கலந்துகொள்ள கீழ்க்காணும் இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு