Published:Updated:

ரூ.500 முதலீட்டில் ரூ. 50,000 வரை வருமானம்... அவள் விகடன் வழங்கும் சாரி பெயின்டிங் பயிற்சி!

அவள் விகடன்
அவள் விகடன்

பெயின்ட், பிரஷ்னு 500 ரூபாய்தான் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். நுணுக்கமா பெயின்டிங் செய்ய ஆரம்பிச்சுட்டா ஒரு சாரி பெயின்டிங்கை 8,000 ரூபாய் வரை விற்பனை செய்யமுடியும்.

"ஒரு கைத்தொழில் தெரிஞ்சிருந்தா நாம யாரையும் சார்ந்து இருக்கணும்னு அவசியமில்ல. எந்த டென்ஷனும் இல்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு வீட்டிலிருந்தே மாசம் 50,000 வரை சம்பாதிக்கலாம்" என்று நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் ஜெயராணி.

பெயின்டிங்
பெயின்டிங்

10 வருடங்களாக சாரி பெயின்டிங், மியூரல் பெயின்டிங், சில்க் த்ரெட் ஜுவல்லரி, டெரகோட்டா என பலவிதமான கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருவதுடன் அதை பிசினஸாகவும் செய்து வருகிறார்.

"எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம் பக்கத்துல முகவூர். சின்ன வயசிலிருந்தே கிராஃப்ட் மீது ஆர்வமிருந்ததால் பேச்சுலர் ஆஃப் ஆர்ட்ஸ் படிச்சேன். திருமணம் முடிச்சு ஹோம் மேக்கராக இருந்த நான் டெரகோட்டா ஜுவல்லரி செய்ய ஆரம்பிச்சேன். கைவினை பொருள்கள்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு புது டிரெண்ட் வந்துட்டே இருக்கும். கிராஃப்ட் துறையில் இருப்பவர்கள் புதிய டிரெண்டுக்கு ஏற்ப அப்டேட் ஆவது அவசியம். அப்படி கத்துக்கிட்டதுதான் மியூரல் பெயின்டிங், சாரி பெயின்டிங், தஞ்சாவூர் பெயின்டிங்.

சாரி பெயின்டிங்
சாரி பெயின்டிங்

கல்யாணமான புதுசுல நான் செய்யுற பொருள்களையெல்லாம் தெரிஞ்சவங்க மூலம் விற்பனை செய்துட்டு இருந்தேன். அதுல போதுமான வருமானம் கிடைக்கல. அதனால நான் செய்யுற எல்லா கைவினை பொருள்களையும் ஃபேஸ்புக் பக்கத்தில அப்டேட் பண்ண ஆரம்பிச்சேன்.

என்னோட கலெக்‌ஷன்கள் தனித்துவமாக இருந்ததால வெளியூர், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது. அதன் பிறகு, பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சேன்" என்பவர் துணிகளில் பெயின்டிங் செய்வது பற்றிப் பேச ஆரம்பித்தார்.

அவள் விகடன்
அவள் விகடன்

"துணிகளில் பெயின்டிங் செய்வதை ஃபேப்ரிக் பெயின்டிங்னு சொல்வாங்க, இதுக்கு படம் வரைய தெரிஞ்சுருக்கணும்னு அவசியம் இல்ல. டிரேஸ் எடுத்துதான் பெயின்டிங் பண்ணுவோம். அடிப்படையான சில விஷயங்களைக் கத்துக்கிட்டா போதும். குழந்தைகளோட டி-ஷர்ட், பிளவுஸ், சாரினு நம்ம விருப்பத்துக்கு எதுல வேணும்னாலும் பெயின்டிங் செய்யமுடியும். பெயின்ட், பிரஷ்னு 500 ரூபாய்தான் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். நுணுக்கமா பெயின்டிங் செய்ய ஆரம்பிச்சுட்டா ஒரு சாரி பெயின்டிங்கை 8,000 ரூபாய் வரை விற்பனை செய்யமுடியும்.

இப்போது ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகள்தான் டிரெண்ட். பெயின்ட் செய்து ஆரி வேலைப்பாடும் செய்து கொடுத்தா இன்னும் அதிகமான லாபம் பார்க்கமுடியும். மாசத்துக்கு குறைஞ்சது 50,000 வரை வீட்டிலிருந்தே எளிமையா சம்பாதிக்க முடியும்" என்கிறார் ஜெயராணி.

சாரி பெயின்டிங்
சாரி பெயின்டிங்

அவள் விகடனுடன் இணைந்து ஜெயராணி ஜனவரி 30-ம் தேதி சாரி பெயின்டிங் பயிற்சி வகுப்பு எடுக்க இருக்கிறார். அதில் பெயின்டிங் டெக்னிக்ஸ், சாரி பெயின்டிங்கை பிசினஸாகத் தொடங்குவது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் பகிர்ந்துகொள்வார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://bit.ly/38sSwjx

பயிற்சியில் கலந்துகொள்ளத் தேவையானவை:

எம்ப்ராய்டரி ஸ்டாண்ட் - 1

அக்ரிலிக் கலர் - விருப்பமான நிறங்களில்

பிரஷ் - 000 ரவுண்ட் பாயின்ட் பிரஷ், ஒன்றாம் நம்பர் ரவுண்ட் பிரஷ், 2-ம் நம்பர் ஃபிளாட் (Flat)பிரஷ் - 1

மஞ்சள் கார்பன் பேப்பர் - 1

உங்களுக்கு விருப்பமான படம் - 1 ( டிரேஸ் எடுக்க )

காட்டன் சாரி - 1

அடுத்த கட்டுரைக்கு