Published:Updated:

`₹200 முதலீடு; ₹20,000 வருமானம்!' - சாதாரண ஊசியில் ஆரி வேலைப்பாடுகள் செய்யும் பயிற்சி

இந்த பிசினஸுக்கான முதலீடு உங்களின் நேரமும், 200 ரூபாயும்தான். ஒரு பிளவுஸ் டிசைன் செய்ய 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் டிசைன் செய்து விட முடியும்.

லினன், சில்க் காட்டன், கிரேப், சிந்தடிக் என எந்த ரக புடவையை அணிந்தாலும், மேட்சிங் பிளவுஸ்கள்தான் ஹைலைட்டான விஷயம். அதிலும், நாமே மேட்சிங் செய்யும் பிளவுஸ்கள் நம்மை இன்னும் கூடுதல் அழகாக்கிக் காட்டும். அதனால்தான் புடவையின் விலையைவிட பிளவுஸ் தைத்து வாங்குவதற்கான விலை சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது.

பிளவுஸ்
பிளவுஸ்
புதுமையான பிசினஸ் ஐடியா...
வெற்றிவாகை சூடும் ஸ்டார்ட்அப்கள்!

பிளவுஸில் நாம் செய்யும் பேட்டர்ன் வேலைப்பாடுகள் ஒரு ஸ்டைல் என்றால், ஆரி வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள், எம்பிராய்டரி செய்வது போன்றவை எப்போதும் டிரெண்டிலிருக்கும் ஸ்டைல். பிளவுஸில் சிறிய ஆரி டிசைன் செய்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகும். பிளவுஸ் முழுவதுமான ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்த பிளவுஸின் விலை சராசரியாக 20,000 ரூபாய்க்கும் அதிகம்.

சரி, நாமே ஆரி வேலைப்பாடுகள் கற்றுக்கொள்ளலாம் என்றால் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்களும் அதிகம். அதோடு மட்டுமல்லாமல் ஆரி வேலைப்பாடுகளுக்குத் தேவையான கட்டில் தொடங்கி, நூல் வரை அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒரு பிளவுஸ் டிசைன் செய்யவே மணிக்கணக்கில் ஆகும். அதுமட்டுமில்லாமல் முதுகு வலி தொந்தரவுகளும் ஏற்படலாம். குறைந்த பட்ஜெட்டில் இதுபோன்ற பிளவுஸ்களை அணிய வாய்ப்பே இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் பதில் இருக்கிறது. சாதாரண ஊசியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிமையான முறையில் தங்களுடைய பிளவுஸை டிசைன் செய்துகொள்ள முடியும்.

பிளவுஸ்
பிளவுஸ்

சின்ன எம்ராய்டரி தொடங்கி, பெரிய வேலைப்பாடுகள் வரை ஆரி ஊசியில் வடிவமைக்கும் பெரும்பாலான டிசைன்களை சாதாரண ஊசியைப் பயன்படுத்தி செய்து கிராண்டான பிளவுஸ் டிசைன்களை உருவாக்க முடியும். இதற்கான முதலீடும் குறைவு, முதுகுவலி பிரச்னைகள் இல்லை. ஆனால் சரியான பயிற்சி அவசியம். நுணுக்கமான டிசைன்கள் செய்யக் கற்றுக்கொண்டால் இதை பிசினஸாகவும் மாற்ற முடியும். இந்த பிசினஸுக்கான முதலீடு உங்களின் நேரமும், 200 ரூபாயும்தான். ஒரு பிளவுஸ் டிசைன்செய்ய 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் டிசைன் செய்து விட முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைந்த செலவில் சாதாரண ஊசியில் ஆரி வேலைப்பாடுகள் செய்யும் பிசினஸ் பயிற்சியை அவள் விகடன் அளிக்கவுள்ளது. இந்த பிசினஸ் பயிற்சி ஆன்லைனில் அக்டோபர் 23-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. கிராஃப்ட் பயிற்சியாளர் ஆண்டாள், பயிற்சியை வழங்க உள்ளார். சென்னையைச் சேர்ந்த ஆண்டாள் 15 ஆண்டுகளாக கிராஃப்ட் பயிற்சியாளராக உள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலிருந்து ஆன்லைன் வகுப்புகளிலும் பிஸியாக உள்ளார். ஆரி வேலைப்பாடுகள், ஸ்டோன் வொர்க்ஸ், பீட்ஸ் வொர்க் ஆகிய பிசினஸ் மற்றும் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்.

பிளவுஸ்
பிளவுஸ்
``ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு புடவை, லெஹெங்கா இலவசம்!'' - உதவும் கேரள மனிதரின் உடை வங்கி

பிளவுஸ் மற்றும் சுடிதாரில் ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்யும் வழிமுறைகள், பீட்ஸ் வேலைப்பாடுகள் செய்வதற்கான ஐடியாக்கள், ஹேண்ட் ஆரி வேலைபாடுகளை பிசினஸாக மாற்றுவதற்கான டிப்ஸ் உள்ளிட்டவை பயிற்சியில் அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்போரின் தனிப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பயிற்சியாளர் பதிலளிப்பார். பயிற்சி வகுப்புக்கான கட்டணம் 500 ரூபாய். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். பயிற்சியில் கலந்துகொள்ள இந்த லிங்கில் பதிவு செய்யவும்: https://bit.ly/3imIJjM

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு