Published:Updated:

முயற்சி உடையாள் 3 - அழகுக்கலையில் ஆர்வமா? அசத்தலாக ஜெயிக்கலாம்! - வழிகாட்டும் பியூட்டீஷியன் வசுந்தரா

அழகுக்கலை
பிரீமியம் ஸ்டோரி
அழகுக்கலை

“இப்படியொரு முடிவை நாம் எடுக்கும் போதே, `அடுத்தவர்களின் முகத்தை, முடியை, கைகால்களைச் சுத்தம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமா

முயற்சி உடையாள் 3 - அழகுக்கலையில் ஆர்வமா? அசத்தலாக ஜெயிக்கலாம்! - வழிகாட்டும் பியூட்டீஷியன் வசுந்தரா

“இப்படியொரு முடிவை நாம் எடுக்கும் போதே, `அடுத்தவர்களின் முகத்தை, முடியை, கைகால்களைச் சுத்தம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமா

Published:Updated:
அழகுக்கலை
பிரீமியம் ஸ்டோரி
அழகுக்கலை

சில வருடங்களுக்கு முன்பு பியூட்டி பார்லர் செல்வதே ஆடம்பரமான விஷயங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. பார்லர் செல்கிற, மேக்கப் செய்து கொள்கிற பெண்களைப் பற்றிய கண்ணோட் டம் வேறு மாதிரி இருந்தது.

ஆனால், இன்று பார்லர் செல்வது நகரத்துப் பெண்களுக்கு மட்டுமல்ல, கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையிலும் வாடிக்கையான விஷயமாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் அழகுக்கலை துறையை கரியராக தேர்ந்தெடுக் கும் பெண்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது.

வசுந்தரா
வசுந்தரா

ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்களுக்கு வெற்றியை உறுதிப்படுத்தும் பியூட்டிஷியன் தொழிலில் சாதிக்க வழிகாட்டுகிறார் சீனியர் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

“இப்படியொரு முடிவை நாம் எடுக்கும் போதே, `அடுத்தவர்களின் முகத்தை, முடியை, கைகால்களைச் சுத்தம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமா... இதெல்லாம் ஒரு வேலையா... குடும்ப பெண்கள் இதையெல் லாம் பண்ணலாமா’ என நிறைய கேள்விகள் வரும். இதையெல்லாம் கடந்து, குடும்பத்தாரைச் சம் மதிக்க வைப்பதுதான் அழகுக் கலை துறையைத் தேர்ந்தெடுப் பவர்கள் சந்திக்கும் முதல் சவால். நான் பியூட்டீஷியனாக முடிவு செய்தபோது, எதிர்கொண்ட கேள்விகளுக்கெல்லாம் என் வெற்றிதான் பதில் என்று களத்தில் இறங்கி னேன். பியூட்டீஷியனாக இது எனக்கு 30-வது வருடம். மற்றவர்களின் தேவையற்ற கேள்வி களைப் புறக்கணிப்பதும், உங்களின் மனத் தடைகளை உடைப்பதும்தான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி.

ஏதோ ஓர் ஆர்வத்தில் பியூட்டீஷியன் ஆகி விடுகிறோம். ஆனால், அடுத்தவர்களின் முகம், கைகால்களைத் தொட்டு சுத்தம் செய்யும்போது சில நேரம் அருவருப்பு உணர்வு வரலாம். மருத் துவர்களுக்கு அடுத்தபடியாக பியூட்டீஷி யன்களை நம்பியே மக்கள் தங்கள் உடலை ஒப்படைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் அந்த அருவருப்பு மாறிவிடும்.

பிரபலமானவர்கள் Vs நிபுணர்கள்

தற்போது மூன்று மாத பயிற்சி வகுப்புகள் முடித்தவர்களும் உடனே பயிற்சியாளராக மாறி விடுகிறார்கள். சமூக வலைதளங்களில் மேக்கப் சார்ந்த வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் பிரபலமாகிறார்கள். பிரபலமாக இருப்பவர்கள் நிபுணர்களாகத்தான் இருப் பார்கள் என்று நினைக்காதீர்கள். அனுபவம் மிக்க, அப்டேட் ஆன பயிற்சியாளரிடம் மட்டும், அழகுக்கலை பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆன்லைன் பயிற்சி வகுப்புகளைவிட, நேரில் சென்று கற்றுக்கொள்வதன் மூலம் உங் களுக்கு முழுமையான பயிற்சி கிடைக்கும்.

என்னிடம் அழகுக்கலை முடித்த 70 வயது பாட்டி இன்று நார்வேயில் பிசினஸ் தொடங்கியிருக்கிறார். அழகுக்கலை துறையில் கால் பதிக்க வயது தடையே இல்லை. ஆர்வம் மட்டுமே முக்கியம். அழகுக்கலை படிப் புக்கு அடிப்படை கல்வித்தகுதி அவசிய மில்லை என்பது கூடுதல் ப்ளஸ்.

புன்னகை பழகுங்கள்.!

அலங்காரம் செய்ய வெளியிடங் களுக்குச் செல்லும்போது, எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், எல்லோரும் உங்களை உரிய மரியாதை யுடன் நடத்துவார்கள் என்று எதிர் பார்க்காதீர்கள். ‘அலங்காரம் பண்ணத்தானே வந்திருக்கீங்க...’ என்ற தொனியில் நடத்தக்கூடும். சில வீடுகளில் உட்கார நாற்காலிகூட தர மாட்டார்கள். ரெஸ்ட் ரூம், தண்ணீர் போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட எதிர்பார்க்க முடியாமல் போக லாம். நான் உட்பட பல பியூட்டீஷியன் களும் இத்தகைய கசப்பான அனுபவங் களைக் கடந்துதான் வந்திருக்கிறோம். கோபத்தைத் தவிர்த்துவிட்டு சின்ன புன்னகையுடன் இத்தகைய சூழலை எதிர்கொள்ள மனதளவில் உங்களைத் தயார்செய்து கொள்ளுங்கள்.

சட்டென கோபப்படுபவர்களும், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் அந்த குணங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே இத்துறையில் தாக்குப்பிடிக்க முடியும். சிரித்த முகத்துடன் வரவேற்று, வாடிக்கையாளர்கள் சொல்வதை முழுமையாக உள்வாங்கினால் மட்டுமே அவர்கள் நம் நண்பர்களாக வும் மாறுவார்கள்.

முயற்சி உடையாள் 3 - அழகுக்கலையில் ஆர்வமா? அசத்தலாக ஜெயிக்கலாம்! - வழிகாட்டும் பியூட்டீஷியன் வசுந்தரா

அப்டேட் அவசியம் கேர்ள்ஸ்...

‘பியூட்டீஷியன் கோர்ஸ் படிச்சு பிசினஸ் தொடங்கியாச்சு... வருமானமும் வருது. இதுக்குமேல என்ன...’ என்று நினைக்காமல், புதுப்புது விஷயங்களில் அப்டேட் செய்து கொள்ளுங்கள். நான் அப்படித்தான்.... வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வேறு வேறு கோர்ஸ் படித்து என்னை அப்டேட் செய்து கொண் டேன். ஒருவேளை அப்படி அப்டேட் ஆகாமல் இருந்திருந்தால் இன்று காணாமல் போயிருப்பேன்.

பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்!

அதிகாலை முகூர்த்த நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டுமெனில் மணப்பெண்ணைத் தயார் செய்ய இரவு இரண்டு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டியிருக்கும் அல்லது இரவில் மண்டபத்திலேயே தங்க வேண்டியிருக்கும். இதனால் சில பியூட்டீஷியன் வீடுகளில் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. காவல்துறை, மருத்துவத்துறை போன்று இதுவும் ஒரு துறை, தொழில். வேலை பார்க்கத்தான் போகிறேன் என்பதை வீட்டில் சொல்லிப் புரியவையுங்கள் அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவரை பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லுங்கள். எங்கு சென்றாலும் உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள். சில திருமண வீடுகளில் மணமகனுக்கும் மேக்கப் செய்யச் சொல்லிக் கேட்பார்கள். அதற்கு ஊதியம் கொடுக்க மாட்டார்கள் என்பதைத் தாண்டி, அதை அசெளகர்ய மாக உணர்ந்தால் தயங்காமல் ‘நோ’ சொல்லுங்கள்.

பொதுவாக திருமண வீடுகளில் ஏதேனும் நகை காணாமல் போனால் முதல் சந்தேகமே பியூட்டிஷியன் பக்கம்தான் திரும்பும். மணப்பெண்ணைத் தயார்செய்யும் அறையில் கேமராவும் இருக்காது என்பதால் இதற்கு டெக்னிகல் தீர்வு கிடையாது. எனவே இப்படி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதே, நகைகளை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைக் கண்காணிக்கச் சொல்லுங்கள் அல்லது நகை இருக்கும் இடத்தில் மேக்கப் முடியும்வரை மற்றவர்களை அனுமதிக்காதீர்கள் என்பதை மணப்பெண் வீட்டில் உறுதியாகச் சொல்லி விடுங்கள்.

விமர்சனத்துக்குள்ளாகாதீர்கள்!

உங்களின் வாடிக்கையாளர்கள் விரும்பும் மேக்கப்போ, ஹேர்ஸ்டைலோ அவர்களுக்கு செட் ஆகாது என நீங்கள் நினைத்தால் முகஸ்துதிக் காக அந்த அவுட்லுக்கை கொடுக்கச் சம்மதிக்கா தீர்கள். பார்ப்பவர்களுக்கு, பொருந்தாத அந்த மேக்கப் சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பம் என்று தெரியாது. ‘பியூட்டிஷியன் சரியா செய்யலை’ என்றே கமென்ட் அடிப்பார்கள். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசிப் புரிய வையுங்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ட்ரையலுக்கு அறிவுறுத்தலாம்.

பேக்கப் சப்போர்ட் இருக்கிறதா?

சொந்தமாக பார்லர் தொடங்குகிறீர்கள் என்றால் குடும்பத்தில் இருப் பவர்கள் பொருளாதார உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பார்லர் தொடங்க சில லட்சங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். பார்லர் தொடங்கிய அடுத்தநாளே வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே உங்கள் பிசினஸ் பிக்கப் ஆகும்வரை குடும்பத்தாரின் சப்போர்ட் அவசியம். இன்று தெருவுக்கு இரண்டு பார்லர்கள் இருக்கின்றன. இது போட்டிகள் நிறைந்த தொழில்தான். ஆனால், ஹேர், மேக்கப், ஸ்கின்கேர் என உங்களுக்கு எதில் திறமையும், ஆர்வமும் இருக்கிறது என்பதை அறிந்து அதில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களை முறையாக நடத்தினால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.”

- சாதிப்போம்...

உங்கள் சாய்ஸை முடிவு செய்யுங்கள்!

மேக்கப் துறையில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்பினால் மாடலிங் ஃபீல்டுக்கான மேக்கப், பிரைடல் மேக்கப், சினிமா மேக்கப் எனப் பல பிரிவுகள் இருக்கின்றன. உங்கள் விருப்பத்துக்கேற்ற பிரிவைத் தேர்வு செய்யலாம்.

பிரைடல் மேக்கப்பில் குறைந்தது 10,000 ரூபாய் தொடங்கி, ஒரு லட்ச ரூபாய்வரை சம்பாதிக்கலாம். சினிமா, மாடலிங்துறை சார்ந்த மேக்கப் எனில் முதலில் மற்றவர்களுடன் சேர்ந்து கொலாப்ரேஷன் ஷூட்டுகளில் வேலைசெய்து உங்கள் வேலை மற்றவர்களால் கவனிக்கப்பட ஆரம்பிக்கும்போது கட்டணங்களை நிர்ணயிக்கலாம். ஸ்கின் கேர் பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்புவோர், இயற்கை அழகு சிகிச்சைகள், அழகு சார்ந்த பொருள்கள் தயாரிப்பது, விற்பது போன்ற வற்றின் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

எங்கு படிக்கலாம்.... என்ன படிக்கலாம்?

மாடுலர் எம்ளாயபுள் ஸ்கில்ஸ் (Modular Employable Skills) அல்லது நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் ஆஃப் இந்தியா (National Skill Development of India) போன்ற இந்திய அரசின் திட்டத்தில் சேர்ந்து அழகுக் கலையில் உங்களுக்கு விருப்பமான துறையில் டிப்ளோமா கோர்ஸ் படிக்கலாம். கீழ்க்காணும் இணையதள லிங்க்குகள் https://www.india.gov.in/modular-employable-skills-scheme, https://nsdcindia.org/ மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் துறையில் பயிற்சி கொடுக்க இந்தியா முழுவதும் உள்ள தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் பதிவு செய்திருப்பார்கள். உங்கள் இருப்பிடத்துக்கு அருகிலுள்ள அழகுக்கலை நிபுணரிடம் சேர்ந்து பயிற்சி பெற்று, தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம் உங்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கும்.

உலக அளவில் வெளிநாடுகளில் பியூட்டீஷியனாக இயங்க விரும்புகிறீர்கள் என்றால் (City and Guilds) என்ற லண்டன் நிறுவனத்தில் சேர்ந்து டிப்ளோமா கோர்ஸ் படிக்கலாம். இந்த அமைப்பில் நீங்கள் படிக்கும் படிப்புகள் 150 நாடுகளில் செல்லுபடியாகும். இதற்காக நீங்கள் லண்டன் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த அமைப்பில் பதிவு செய்துள்ள, உங்கள் பகுதியில் உள்ள பயிற்சியாளர்களிடம் பயிற்சிபெற்று, தேர்வு எழுதி, City and Guilds அமைப்பின் சான்றிதழ் பெறலாம். சில கல்லூரிகளில் தற்போது அழகுக்கலையில் இளநிலை தொழிற்பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதை முடித்து, சான்றிதழ் பெறுவதன் மூலமும் அழகுக் கலை துறையில் நுழையலாம். அழகுக்கலையில் நீங்கள் தேர்வுசெய்யும் கோர்ஸை பொறுத்து பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை கட்டணங்கள் வேறுபடும்.