Published:Updated:

நிலையற்ற காலம்... நிதானமான முதலீடு... உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!

உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!

வளமான வாழ்வு

நிலையற்ற காலம்... நிதானமான முதலீடு... உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!

வளமான வாழ்வு

Published:Updated:
உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!
இல்லத்தரசிகளின் முதல் சேமிப்பு வங்கி என்றால்... சமையலறை; வங்கி லாக்கர் என்றால்... கடுகு டப்பா. அவசரத்துக்குக் கைகொடுக்கும் இந்தச் சமையலறை வங்கிக்கு எந்தநாளும் பாதகமில்லை. அதேநேரம், வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், தங்க முதலீடுகள் என்று விரிவடைந்து கிடக்கும் முதலீட்டுக்கான களங்களிலும் பெண்கள் மெள்ள கால்பதித்து, முன்னேற ஆரம்பித்துள்ளனர். ஆனால், இந்தக் கொரோனா காலத்திலும், இதற்கு பிந்தைய காலத்திலும் இந்தக் களங்கள் எப்படி மாறும்... இவற்றில் எப்படி களமாடுவது என்பதுதான் பெரும் சவாலாக இருக்கப் போகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனாவுக்குப் பிறகான புதிய இயல்பு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்காது... குறிப்பாக, பெண்களுக்கு. கோவிட்-19 பெருந்தொற்று 1.2 கோடி இந்தியர்களை வறுமைக்குத் தள்ளும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது. புதிதாக வறுமைக்குள் விழுவோரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும். இதன் பாதிப்பு, வீடுகளின் நலன், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பு அனைத்தையும் பாதிக்கும். மேலும், அடுத்த தலைமுறையினரின் பள்ளிப் படிப்பில் பாதிப்பு, சுகாதாரத்தில் பெரிய பின்னடைவு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு மற்றும் முதலீட்டைச் சரியாகத் திட்டமிட்டால், பெண்களால் ஓரளவு இந்தத் துயரத்திலிருந்து மீள முடியும். பொதுவாகவே, பெண்களின் முக்கிய முதலீடாகவும் சேமிப்பாகவும் இருப்பது தங்கம்தான். நகைக்கடைகளில் மாதாமாதம் சிறிய தவணைத் தொகையைச் செலுத்தி ஓராண்டு முடிவில் நகை வாங்குவார்கள். நிலையற்ற தன்மை நிலவுவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாலும் தவணை செலுத்தி நகை வாங்குவதை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

`அப்படியென்றால் பெண்கள் சேமிப்புக்காக எதில் முதலீடு செய்யலாம்?' என்ற கேள்வியுடன் பிரைம் இன்வெஸ்டர் அமைப்பின் இணை நிறுவனர் வித்யா பாலாவிடம் பேசினோம்.

“இந்தப் பெருந்தொற்று காலத்தில் உடல்நலத்தில் மட்டுமல்லாமல் பொருளாதாரம், பங்குச்சந்தை எல்லாவற்றிலும் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நிலையில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டியது... கையிலிருப்பதை எப்படிப் பாதுகாப்பது என்பதில்தான். பாதுகாப்பு மட்டுமல்லாமல் தேவையான நேரத்தில் புழக்கத்துக்கு எடுக்கும் வகையிலும் இருக்கவேண்டும். அதற்கு வங்கி, அஞ்சலகத்தில் சேமிக்கும் ஆர்.டி (Recurring Deposit) அல்லது நிலையான வைப்புநிதியில் (Fixed Deposit) சேமிக்கலாம். குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

நீண்ட கால முதலீடு வேண்டாம்!

தற்போது குறைந்த வட்டி விகிதம் வழங்கப்படுவதால் ஐந்து ஆண்டுகள் போன்ற நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் சென்று சிக்கிக்கொள்வோம். பெருந்தொற்று காலம் நிறைவடைந்துவிட்டால் ஓராண்டில் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வட்டி விகிதம் அதிகரித்த பிறகு, நீண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதுதான் நல்லது. தற்போது அவசரத்துக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் ஓராண்டுக் காலத் திட்டங்களில் சேரலாம்” என்ற வித்யாபாலா, பாதுகாப்பான முதலீடுகள் பற்றித் தொடர்ந்தார்.

''இன்றைய சூழலில் பெண்கள் புழக்கத்துக்குத் தேவையான சேமிப்பை (liquid assets) 45 சதவிகிதம் வங்கியின் சேமிப்புக் கணக்கு களில் வைத்திருக்கின்றனர். அதாவது, வங்கியின் சேமிப்புக் கணக்கில் ஆண்களைவிட பெண்கள் அதிக பணத்தைச் சேமித்து வைக்கின்றனர். அதே நேரம் ஆண்கள் 43 சதவிகிதம் சேமிக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

நிலையற்ற காலம்... நிதானமான முதலீடு... உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!

பாதுகாப்புதான் முக்கியம்!

இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பான முதலீடுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் வித்யா பாலா. “குழந்தையின் உயர் படிப்புக்காகச் சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் பத்திரம் (RBI Floating Rate Bond) வாங்கிச் சேமிக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி,

ஹெச்.டி.எஃப்.சி போன்ற பல்வேறு வங்கிகளில் இது 7.15 சதவிகித வட்டி விகிதத்தில் கிடைக்கும். விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் வட்டி விகிதமும் தானாகவே அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியின் பின்புலம் இருப்பதால் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான முதலீடாகும்

மியூச்சுவல் ஃபண்டு

நீண்டகால முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்டு நல்ல தேர்வாக இருக்கும். எங்கு முதலீடு செய்வது என்ற குழப்பம் இருந்தால், எளிதாக இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ் எனப்படும் நிஃப்டி, சென்செக்ஸ் போன்ற பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். அரசின் தங்கப் பத்திரத்தில் (Gold Bond) முதலீடு செய்யலாம். இருந்தாலும் அரசு அதை விநியோகிக்கும்போதுதான் வாங்க முடியும். நாம் விரும்பும் நேரத்தில் கிடைக்காது. தனியாரிடம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இடைத்தரகர்கள் மூலம் தங்கப் பத்திரம் வாங்க முடியும். ஆனால், அதிகம் பேர் இதை வாங்கி விற்பதில்லை என்பதால் புழக்கத்துக்குத் தேவைப்படும் பட்சத்தில் பணம் கிடைக்காது.

 வித்யா பாலா
வித்யா பாலா

தங்கத்தில் முதலீடு கூடாதா?

பெண்கள் உணர்வுகளையும் முதலீட்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். ‘பாட்டி, அம்மா நகை வாங்கிச் சேமித்தனர். நானும் என் மகளுக்காகத் தங்கம் வாங்க வேண்டும்’ என்ற உணர்வு இருக்கிறது.

20 ஆண்டுகள் கழித்து நடைபெறப்போகும் திருமணத்துக்கு இப்போதே நகையாக வாங்கிச் சேமித்தால், திருணத்தின்போது அவை பழைய மாடலாக மாறியிருக்கும். அவற்றை மாற்றி புதிய நகை எடுக்கும்போது கணிசமான நஷ்டம் ஏற்படும். பணமாகச் சேமித்து வைத்தால் தேவைப்படும் நேரத்தில் நஷ்டமில்லாமல் அதை நகையாக மாற்றிக்கொள்ளலாம்.

மொத்த முதலீட்டில் 10 - 15 சதவிகிதம் தங்கத்தில் இருந்தால் போதுமானது. தங்கத்தை முதலீட்டுக்காக வாங்கிச் சேமிக்கும்போது செய்கூலி, சேதாரம் என்று பணவிரயம் ஏற்படத்தான் செய்யும். மியூச்சுவல் ஃபண்ட்ஸில் போட்டால் பணம் விரயமாகாமல் முழுவதுமாகக் கிடைக்கும். தங்க நகை என்றில்லாமல், தங்கத்தை நிதியாக (Financial Gold) சேமிப்பதே புத்திசாலித்தனம்” என்று அழுத்தம் கொடுத்தார் வித்யா பாலா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகைச்சீட்டு வேண்டவே வேண்டாம்!

கோவிட்-19 காலத்தில் நகைச் சீட்டு சேர்வது உச்சபட்ச ஆபத்து. சிறிய நகைக்கடைகள் முதல் பல கிளைகளைப் பரப்பியிருக்கும் நகைக் கடைகள்வரை நகைச்சீட்டில் முதலீடு செய்வது ஆபத்துதான். காரணம், பல வர்த்தக நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. சில காலத்துக்கு முன்னால் ஒரு பிரபல நகைக்கடை இதே போன்று மூடப்பட்டது நினைவிருக்கலாம். அதில் சீட்டு போட்டிருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் முதலீடு திரும்ப கிடைக்கவேயில்லை.

நிலையற்ற காலம்... நிதானமான முதலீடு... உங்கள் பணத்துக்கு உத்தரவாத டிப்ஸ்!

முதலீடு செய்த இடத்தில் ஏதோ பிரச்னையாகி விட்டது என்றால் என் பணத்தை மீட்பதற்கு எங்கு போய் நிற்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். வங்கிகளில் செய்யப்பட்ட முதலீட்டில் ஏதாவது பிரச்னை என்றால் ரிசர்வ் வங்கி தீர்வளிக்கும். இதுபோன்று நகைக்கடைகளில் சீட்டுப் போட்டு பணத்தை இழந்தால் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். நீதிமன்றத்துக்குச் சென்றால் அதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது நாமறிந்ததே.

வேலையிழப்பு, குறைந்த சம்பளம் போன்ற சூழல் நிலவும் நேரத்தில் ரிசர்வ் வங்கி, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதே சிறந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism