லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

இது கொரோனா தந்த வாழ்க்கை! - ‘கடைப்பை’ அனிதா ராஜலட்சுமி

அனிதா ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா ராஜலட்சுமி

2019 கடைசியில கொரோனா நோய்ப் பரவல் காரணமா பல பேரோட தொழில் முடங்கிடுச்சு. ஆனா, என்னோட தொழில் கொரோனா வந்த பிறகுதான் வளர ஆரம்பிச்சது

``ஈகோ ஃபிரெண்ட்லி பொருள்கள்னாலே, அவற்றை வசதியானவங்க மட்டுமே வாங்க முடியும்கிற நிலைமையை மாத்தணும்னுதான் ‘கடைப்பை’யை ஆரம்பிச்சேன்’’ என்கிற பிசினஸ் வுமன் அனிதா ராஜலட்சுமி, அதைப் பற்றி நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்.

``பயோ இன்ஃபர்மேஷன், பயோ கெமிஸ்ட்ரி படிச்சிட்டு கோயம் புத்தூர்ல பயோ பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கிற பிசினஸ் செஞ்சு கிட்டிருந்தேன். எந்த வகையிலும் என் தொழில்ல பிளாஸ்டிக் இருக்கக் கூடாதுன்னு முடிவு செய்தேன். 2018-ல வெட்டிவேர்லயும் வாழை நார்லயும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கக் கத்துக்கிட்டேன். `கடைப்பை’ என்ற பெயரைப் பதிவு செஞ்சு வீட்ல இருந்தபடியே பிசினஸ் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்கிற அனிதா ராஜலட்சுமி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இந்த பிசினஸுக்காக

5 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். இவரிடம் வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட தலையணை, கைவினைப் பொருள்கள், அலங்கார பொருள்களோடு வாழை நாரில் தயாரிக்கப்பட்ட தலையணை, குஷன், தாம்பளத்தட்டுகள், பாய், கூடைகள் மற்றும் கைப்பைகளும் கிடைக்கின்றன.

``2019 கடைசியில கொரோனா நோய்ப் பரவல் காரணமா பல பேரோட தொழில் முடங்கிடுச்சு. ஆனா, என்னோட தொழில் கொரோனா வந்த பிறகுதான் வளர ஆரம்பிச்சது. மக்களோட கவனம் இயற்கையின் பக்கம் திரும்பினதால, என்னோட தயாரிப்புகளை நிறைய பேர் விரும்பிக் கேட்க ஆரம்பிச்சாங்க’’ என்கிற அனிதா, டூ வீலரிலேயே தன் பொருள்களை டெலிவரி செய்கிறார்.

அனிதா ராஜலட்சுமி
அனிதா ராஜலட்சுமி

``கொரோனாவுக்கு முன்னாடி வரைக்கும் மாசம் 10,000 வருமானம் கிடைக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. அதனால, டெலிவரி செய்ய வேண்டிய பொருள்களை என்னோட டூ வீலர்லேயே கட்டி எடுத்துட்டுப் போவேன். ரோட்ல போறப்போ, ‘பொம்பளைப்புள்ள லோடு அடிக்குது பாரேன்’பாங்க. கொரோனா வந்து லாக்டௌன் போட்டப்போகூட நிறைய பேர் போன் பண்ணி எப்படியாவது அனுப்பி வையுங்களேன்னு கேட்டாங்க. போன வருஷம் லாக்டௌனை தளர்த்த ஆரம்பிச்சதும் கணிசமான அளவு ஆர்டர் வர ஆரம்பிச்சுது. சின்னதா ஒரு கடை ஆரம்பிச்சிருக்கேன். ஒரு பையனை வேலைக்கு வெச்சிருக்கேன். இப்போ என் `கடைப்பை’யில மாசம் இரண்டரை லட்சம் வரைக்கும் வருமானம் வருது. இப்போ, லோடு அதிகமா இருந்தா வாடகைக்கு வண்டி எடுக்கிறேன். இது கொரோனா கொடுத்த வாழ்க்கை’’ என்று முகம் மலர்கிறார் அனிதா ராஜலட்சுமி.