Published:Updated:

ஃப்ளவர் பொக்கே விற்பனையில் ஈரோட்டின் அடையாளம்! - காந்திமதியின் வெற்றிக் கதை

2002-ல் எனக்குக் கல்யாணமானது. என் பிசினஸ் பயணத்துல இணைந்த கணவர் லஷ்மணன், நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்திய அளவிலான நிலவரம் தெரியலை. ஆனா, தமிழக அளவில் புடவை மேட்சிங் பூக்கள் விற்பனையை முதலில் தொடங்கியது நான்தான்.

இளம் வயது பிசினஸ் கனவை நிறைவேற்ற, அனைத்துப் படிநிலைகளையும் சரியாகக் கடைப்பிடித்திருக்கிறார், காந்திமதி. இதனால், துல்லியமான வெற்றி இவருக்கு எளிதில் வசமாகியிருக்கிறது. ஃப்ளவர் பொக்கே விற்பனையில் ஈரோட்டின் அடையாளமாக இருக்கிறார். ஈவென்ட் டெகரேஷன் தொழிலும் கலக்கிவருகிறார். ஏராளமான பெண் தொழில்முனைவோரை உருவாக்கிய பெருமையுடைய காந்திமதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

"என் பூர்வீகம் நாமக்கல் அருகிலுள்ள பாலப்பட்டி கிராமம். நடுத்தர விவசாயக் குடும்பம். அப்பா, அரசுப் பள்ளி ஆசிரியர். அம்மா விவசாயி. பத்தாவதுவரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். தொழில்முனைவோராவது என் இளமைக்கால கனவு. செய்யும் செயல் எதுவானாலும், அதை நேர்த்தியாகச் செய்வதிலும் அழகாகக் காட்சிப்படுத்துவதிலும் முனைப்பு காட்டினேன். 'எண்ணம் செயலாகும்' என்பதைப் பிற்கால பிசினஸ் அனுபவத்தில் உணர்ந்தேன். போஸ்ட் டிப்ளோமா முடித்ததும், 1993-ம் ஆண்டு, ஈரோட்டில் சித்தப்பா தொடங்கிய ஷேர் புரோக்கிங் தொழிலில் நானும் என் அண்ணனும் பங்குதாரர்களாக இணைந்தோம். ஓய்வில்லாமல் உழைத்தோம். சில ஆண்டுகளில் தொழில் பெரிய அளவில் வளர்ந்தது.

1995-ம் ஆண்டு, எங்கள் நிறுவனத்தின் கீழ்த்தளத்தில் என் அக்கா, சிறிய அளவில் பொக்கே ஷாப் ஒன்றைத் தொடங்கினார். தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகவும் அவர் வேலை செய்தார். எனவே, என் வேலையோடு சேர்த்து பொக்கே ஷாப்பையும் கவனிச்சுக்கிட்டேன். இந்த நிலையில் சில தனிப்பட்ட காரணங்களால், 1998-ம் ஆண்டு, ஷேர் புரோக்கிங் தொழிலில் இருந்து விலகினேன். அந்த நிறுவனத்தில் எனக்கிருந்த 25 சதவிகிதப் பங்குகளை என் அண்ணனிடமே ஒப்படைச்சேன். பிறகு, அக்காவின் பொக்கே ஷாப்பை நானே எடுத்து நடத்தினேன். அப்போ ஒருநாள் வருமானமே 10 ரூபாய்தான்!

ஃப்ளவர் பொக்கே விற்பனையில் ஈரோட்டின் அடையாளம்! - காந்திமதியின் வெற்றிக் கதை

ஒரு வருஷம் தொழில் நஷ்டத்துலதான் போனது. ஆனாலும், பெரிய வெற்றி கிடைக்கும்னு உறுதியா நம்பினேன். அண்ணன், அக்கா, நான்... எங்க மூவரின் பெயர்களிலிருந்தும் தலா ஓர் எழுத்துடன், மலரின் இதழ்களைக் குறிக்கும் பெயரைச் சேர்ந்து, 'shiga petals'னு நிறுவனத்துக்குப் பெயர் வெச்சேன். வியாபார வாய்ப்புகள் உள்ள துறையில் தொழில் தொடங்கி வெற்றி பெறுவது ஒரு ரகம். ஒரு துறையில் புதிதாக வியாபார வாய்ப்பை உருவாக்கி வெற்றி பெறுவது மற்றொரு ரகம். நான் இரண்டாவது ரகத்தைத் தேர்வு செஞ்சேன். 25 வருஷங்களுக்கு முன்பு ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஃப்ளவர் பொக்கேவுக்கான தேவையும் விழிப்புணர்வும் மிகக் குறைவாகவே இருந்தது. அந்த நிலையை மாற்றுவதை என் முதல் நோக்கமா வெச்சுக்கிட்டேன்... விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2w1684Q

... 2002-ல் எனக்குக் கல்யாணமானது. என் பிசினஸ் பயணத்துல இணைந்த கணவர் லஷ்மணன், நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்திய அளவிலான நிலவரம் தெரியலை. ஆனா, தமிழக அளவில் புடவை மேட்சிங் பூக்கள் விற்பனையை முதலில் தொடங்கியது நான்தான். அந்தத் தருணத்துல பூக்களைக்கொண்டு, பல்வேறு நிற ஃப்ளவர் ஸ்பிரேயரைப் பயன்படுத்தி புடவை மேட்சிங் பூக்களை உருவாக்கினேன். பெண்கள் பலரையும் தொழில்முனைவோராக்கும் நோக்கத்துல, புடவை மேட்சிங் பூக்களுக்கான செய்முறைப் பயிற்சி கொடுக்க முடிவெடுத்தேன். 'பயிற்சி கொடுத்தா உனக்குப் போட்டியா பலர் உருவாகி, உன் பிசினஸ் பாதிக்கும்'னு பலரும் சொன்னாங்க. ஆனா, என் முடிவில் உறுதியா இருந்தேன். பலநூறு பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். புடவை மேட்சிங் பூக்களுக்கான வரவேற்பும் தயாரிப்பும் தமிழகம் முழுக்க பிரபலமானது...

ஈரோடு பகுதியில் ஃப்ளவர் பொக்கே பயன்பாட்டுக்கான வரவேற்பு இப்போ அதிகமாகிடுச்சு. வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு ஆர்டரையும் எடுக்கிறோம். இன்றைக்கும் புடவை மேட்சிங் பூக்கள் மற்றும் அலங்கார சீர்வரிசை தட்டுகள் தயாரிப்பிலும் ஈடுபடுகிறேன். நாங்க நடத்தும் ஈவென்ட் டெகரேஷன் நிகழ்ச்சி எங்க நடந்தாலும், பெரும்பாலும் நான் நேரில் போய் ஊழியர்களை உற்சாகப்படுத்துவேன்..."

ஃப்ளவர் பொக்கே விற்பனையில் ஈரோட்டின் அடையாளம்! - காந்திமதியின் வெற்றிக் கதை

திருமணம், நிச்சயதார்த்தம், கிரஹப்பிரவேசம், பல்வேறு நிறுவன நிகழ்ச்சிகள் உட்பட ஆண்டுக்கு 100 - 150 பெரிய நிகழ்ச்சிகளுக்கான டெகரேஷன் ஆர்டர்களை செய்துவருகிறார் காந்திமதி. அக்கா சிவகாமியுடன் பார்ட்னராக இணைந்து, 'வைபவா' என்ற தனி நிறுவனத்தையும் நடத்துகிறார். இந்த நிறுவனத்தின் மூலம், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் ஆண்டுக்கு 100 - 150 நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆர்டருக்கும் 200-க்கும் அதிகமான பகுதி நேரப் பணியாளர்களைப் பயன்படுத்துகிறார். 40 ஊழியர்களுக்கு முதலாளியான காந்திமதி, ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார்.

- இந்த வெற்றி சாத்தியமானது எப்படி? > பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்புத் தொடருக்காக அவள் விகடன் இதழில், ஈரோடு 'ஷிகா பெட்டல்ஸ்' நிறுவன உரிமையாளர், காந்திமதி லஷ்மணன் பகிர்ந்தவற்றை முழுமையாக வாசிக்க > என் பிசினஸ் கதை - 9 - பிரச்னைகளையும் வாய்ப்புகளாகவே பார்த்தேன்... வெற்றி வசமானது! https://www.vikatan.com/business/women/business-story-9-gandhimathi-laxmanan

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு