Published:Updated:

`வேலை செய்துகொண்டே, குழந்தையை கவனித்துக் கொள்ளும் தாய்மையின் பணி சவாலானது’ - ராதிகா குப்தா!

ராதிகா குப்தாவின் குழந்தை!
News
ராதிகா குப்தாவின் குழந்தை! ( @iRadhikaGupta )

``அடிக்கடி ஒரு தாயாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, கொஞ்சம் திட்டமிடல், அதீத பொறுமை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் மனப்பான்மை ஆகிய விஷயங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அது சாத்தியம் என்பேன்...”

வேலைக்குச் சென்று கொண்டு வீட்டையும் நிர்வகிப்பதைப் பல பெண்கள் சிறப்பாகக் கையாள்வதுண்டு. ஆனால் இதில் கூடுதல் சவாலே தவழும் வயதிலோ, நடக்கும் வயதிலோ குழந்தைகள் இருந்துவிட்டால், வேலை செய்து கொண்டு, குழந்தையையும் பார்த்துக் கொள்வது தான்.

ராதிகா குப்தா
ராதிகா குப்தா

இந்நிலையில், எடெல்வீஸ் மியூச்சுவல் ஃபண்டின் (Edelweiss Mutual Fund) சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணிபுரியும் ராதிகா குப்தா, `வேலை செய்துகொண்டே குழந்தையைக் கவனிக்கும் தாய்மையின் பணி எளிமையானது அல்ல, சவாலானது' என தன்னுடைய அனுபவத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், தவழும் வயதில் இருக்கும் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில், உதவிக்கு யாரும் இல்லாத சமயத்தில், யார் வேலை செய்ய வருவார்கள்.

அடிக்கடி ஒரு தாயாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, `கொஞ்சம் திட்டமிடல், அதீத பொறுமை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் மனப்பான்மை ஆகிய விஷயங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்'' என்பேன். அதோடு ஒரு குழந்தையின் சிரிப்பு மற்றதைச் செய்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு நேர்மறையான கருத்துகள் வந்தபோதும், பலரும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே குழந்தையை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று பராமரிக்கும் வசதிகள் கிடைக்கும். சராசரி வேலையைச் செய்பவர்களுக்கு அதிலும் சிக்கல் உண்டு என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.