Published:Updated:

அம்மாக்களால் அம்மாக்களுக்கு... கலகலக்கும் கடைவீதி

சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

வழிகாட்டி

அம்மாக்களால் அம்மாக்களுக்கு... கலகலக்கும் கடைவீதி

வழிகாட்டி

Published:Updated:
சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

லருக்கும் முகநூல் என்பது பொழுதுபோக்கு. அதையே தன் பிசினஸுக்கான தளமாக மாற்றி வீட்டிலிருந்தே மாதம் ஒரு லட்ச ரூபாய்வரை சம்பாதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சங்கீதா. அப்படி என்னதான் செய்கிறார் இவர்...

“ஆசை ஆசையா சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்சி முடிச்சேன். கல்யாணம், குழந்தைனு ஆன பிறகு, என்னால் என் துறையில் கவனம் செலுத்த முடியல. கரியரில் பிரேக் எடுத்துக்கிட்டேன். குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதில் தொடங்கி, எந்தப் பொருளை விளையாடக் கொடுக்கலாம் என்பதுவரை குழந்தை வளர்ப்பில் வரும் சந்தேகங்களை தோழிகள்கிட்ட கேட்பேன். தோழிகளுக்கிடையே குழந்தை வளர்ப்பு சம்பந்தமான தகவல்களைப் பரிமாறிக்க உருவானது தான் ‘ஸ்மார்ட் மம்மீஸ்' என்ற முகநூல் பக்கம். ஏழு வருஷங்களில் எங்கக் குழுவில் இணைந்த அம்மாக் களின் எண்ணிக்கை 50,000.’’

- சுருக்கமாகச் சொல்லும் சங்கீதா, முழுக்க முழுக்க அம்மாக்களின் நலனுக்காக உருவாக்கிய இந்தக் குழுவின் அட்மின்.

சங்கீதா
சங்கீதா

‘`இந்தக் குழுவில் இணைய எந்தக் கட்டணமும் கிடையாது. ஏற்கெனவே இருக்கும் உறுப்பினர் யாரையாவது பரிந்துரைத்தால் போதும். குழந்தை வளர்ப்பு, அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், உள்ளாடைகள், உடல் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள்னு தனிப்பட்ட விஷயங்கள் இந்தக் குழுவில் பேசப்படுவதால் ஆண்களோ, ஆண் பெயரில் முகநூல் பக்கம் கொண்டுள்ள பெண் களையோ நாங்கள் உறுப்பினர்களா இணைக்கிறதில்லை. அதே போல குழந்தைக்கு சளி... என்ன மருந்து கொடுக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம்னு மருத்துவ பிரச்னைகளையும் இந்தக் குழுவில் பேசக் கூடாது. இது குழுவின் முக்கியமான விதி. குழந்தைகள் கல்வி, ஹோம் வொர்க், ஆடை சுதந்திரம், பாலியல் விழிப்புணர்வுனு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை விவாதிக்கிறோம்'' என்ற சங்கீதா, ‘மாம்ப்ரூனர்ஸ்’ உருவான விதம் பற்றிப் பேசினார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பிரசவத்துக்குப் பிறகு, பெரும்பாலான அம்மாக்கள் கரியரில் ஒரு பிரேக் எடுத்திருப் பாங்க. அப்படியான சிலர் வீட்டிலிருந்தே சிறுதொழில்கள் செய்ய ஆரம்பிப்பாங்க. அவங்களோட பிசினஸ் பற்றி ‘ஸ்மார்ட் மம்மீஸ்’ குழுவில் பகிர ஆரம்பிச்சாங்க. நாளடைவில் குழந்தை வளர்ப்பு தொடர்பான பதிவுகள் குறைஞ்சு பிசினஸ் தொடர்பான பதிவுகள் அதிகமானதால் பிசினஸ் தொடர்பான பதிவுகளை ஸ்மார்ட் மம்மீஸ் குழுவில் தடை செய்தேன். இதற்கான மாற்று வழியை யோசிச்சேன்.

‘எஸ்.எம் பிசினஸ் மேக்னெட்ஸ்’ என்ற பிசினஸ் சார்ந்த முகநூல் குழுவை உருவாக்கினேன். `ஸ்மார்ட் மம்மீஸ்’ குழுவில் இருக்கும் அம்மாக்களுக்கு இந்த பிசினஸ் குழு பற்றி தனிப்பட்ட முறையில் தெரிவிச்சேன். இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வோர் அம்மாவும் அவங்களுடைய பிசினஸ் பற்றிய தகவல்களைப் பதிவிடலாம். பொருள்களை வாங்கலாம், விற்கலாம். பொருள்களை விற்பனை செய்யும் அம்மாக்களிடம் மாதம் 500 ரூபாய் சந்தா வசூலிக்கிறேன். வாங்குபவர்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கலாம். இந்த பிசினஸ் குழுவில் இப்போ 10,000 அம்மாக்கள் உறுப்பினர்களா இருக்காங்க. அவங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததோடு எனக்கான வருமானத்தையும் ஈட்ட முடியுது. சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஒரு பிசினஸ் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கி வருமானம் ஈட்ட முடியும். ஆனால், உறுப்பினர்களை இணைப்பதில் கவனமாக இருக்கணும்'' என்பவர் பிசினஸின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிப் பேச ஆரம்பித்தார்...

“பொருள்களை விற்பவர்களும் வாங்குபவர் களும் அம்மாக்களே என்ற நிலையிலிருந்து அடுத்தகட்ட வளர்ச்சிக்காகப் பொதுமக்கள் அனைவரும், அம்மாக்கள் தயாரிக்கும் பொருள்களை வாங்கும் வகையில் `கடைவீதி' என்ற ஆன்லைன் பிசினஸை கையில் எடுத்தோம். இதில் இணையும் அம்மாக்களுக்கு புகைப்படம் எடுப்பது, மார்கெட்டிங் செய்வது, பொருள்கள் பற்றிய கருத்துகளைப் பகிர்வதுனு எல்லா பயிற்சிகளையும் கொடுப்போம். அதற்காகக் குறைந்த அளவு கட்டணமும் வசூலிக்கிறோம். கொரோனா சூழலில் ஆன்லைன் மூலமே ஷாப்பிங் ஸ்டால்கள் அமைச்சோம். இது அம்மாக்களுக்காக அம்மாக் களே கைகொடுக்கும் குழு. அம்மாக்களின் எண்ணிக்கை சீக்கிரமே லட்சங்களைத் தொடும்”

- நம்பிக்கையோடு விடைபெற்றார் சங்கீதா.

அம்மாக்களால் அம்மாக்களுக்கு... கலகலக்கும் கடைவீதி

குறைந்த செலவில் பெரிய லாபம்!

``நான் ஒரு ஃபேஷன் டிசைனர். ஐந்து வருடங்களாக `மாம்ப்ரூனர்ஸ்' குழுவில் உறுப்பினரா இருக்கேன். ப்ளவுஸ் டிசைனிங், ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்யறேன். இந்தக் குழுவில் நிறைய பெண்கள் இருப்பதால் ரெகுலரா ஆர்டர்கள் வரும். அந்த ஆர்டர்களை என்னால் தனியா சமாளிக்க முடியாம 10 பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கேன். குறைந்த செலவில் இந்தியா முழுவதும் நம்முடைய பிராண்ட் ரீச் ஆகவும் லாபம் அதிகரிக்கவும் இந்தக் குழு உதவியா இருக்கு” என்கிறார் சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா.