Published:Updated:

புதிய பாடம்: பிரச்னைகளைவிட, மனவலிமைக்கு சக்தி அதிகம்!

தேவகி
பிரீமியம் ஸ்டோரி
தேவகி

ஆன்சைட் டு ஆன்லைன்... வருமானத்தை இரட்டிப்பாக்கிய கொரோனா ஊரடங்கு!

புதிய பாடம்: பிரச்னைகளைவிட, மனவலிமைக்கு சக்தி அதிகம்!

ஆன்சைட் டு ஆன்லைன்... வருமானத்தை இரட்டிப்பாக்கிய கொரோனா ஊரடங்கு!

Published:Updated:
தேவகி
பிரீமியம் ஸ்டோரி
தேவகி

கொரானாவால் பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தன்னுடைய டியூஷன் தொழிலுக்குப் புதுப்பொலிவு கொடுத்து, மாற்றத்தை விதைத்துள்ளார் தேவகி. தனிப்பட்ட பொருளாதார மேம்பாடு என்பதுடன் சிலருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் தொடங்கி இப்போதுவரை இவரின் மாத வருமானம் 3 லட்சம் ரூபாய். தேவகியின் வெற்றி ரகசியங்களைத் தெரிந்துகொள்ள சென்னை, அசோக்நகரில் அவரது டியூஷன் சென்டரில் சந்தித்து உரையாடினோம்.

தேவகி
தேவகி

“சொந்த ஊரு வடசென்னை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அப்பா இறந்துட்டாங்க. எனக்கு ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி. ‘தலப்புள்ள ஆம்பளப்புள்ளயா இருந்தா குடும்பம் எப்படியாவது முன்னுக்கு வந்துரும். அதுக்கும் வழியில்லாமப் போச்சு’னு எல்லாரும் சொன்னாங்க. அந்த வார்த்தை என் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிருச்சு. ஊரே ஆச்சர்யப்படுற அளவுக்கு என் குடும்பத்தை உயர்த்திக் காட்டுவேன்னு மனசுக்குள்ள உறுதியெடுத்துக்கிட்டேன். நிறைய கடன் இருந்துச்சு. சொந்த பந்தம் யாரும் உதவி பண்ண முன் வரல. எங்க அம்மா டெய்லர். ராப்பகலா துணி தைச்சுதான் எங்க மூணு பேருக்கும் சாப்பாடு போடுவாங்க. வீடு இருந்த சூழலில், ‘ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டுங்க’னு அம்மாகிட்ட கேட்க முடியல. நான் படிச்ச ஸ்கூலில் ஸ்காலர்ஷிப்புக்கு அப்ளை பண்ணிதான் படிப்பைத் தொடர்ந்தேன். பணம் உள்ளவங்கதான் ஜெயிக்க முடியும்னு இல்ல. முயற்சி பண்ணினா நம்ம நிலைமையை நிச்சயமா மாத்திக்க முடியும்னு நம்பிக்கையோடு ஓட ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய பாடம்: பிரச்னைகளைவிட, மனவலிமைக்கு சக்தி அதிகம்!

அம்மாவுக்கு உதவலாமேனு படிக்கும் போதே டியூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். அதுல கிடைக்கும் தொகையில் என் தம்பி, தங்கச்சிகளுக்கு ஃபீஸ் கட்டுவேன். ப்ளஸ் டூ முடிச்சதும், தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தம்பி, தங்கச்சிகளைப் படிக்க வெச்சதோடு, தொலைதூரக் கல்வியில் சேர்ந்து எம்.காம், எம்.பி.ஏ படிச்சேன். கடனெல்லாம் அடைச்சு வாழ்க்கை சுமுகமா போக ஆரம்பிச்சுருந்த நேரம் என் தம்பி ஒரு விபத்தில் இறந்துட் டான். உலகமே இருண்ட மாதிரி இருந்துச்சு” - வார்த்தைகள் உடைந்து அமைதியாகிறார் தேவகி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என் தம்பியோட இழப்பிலிருந்து என்னால் மீளவே முடியல. வீட்டுக் குள்ளயே முடங்கினேன். அந்த பாதிப்பி லிருந்து மீட்டெடுக்க எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. என்னோட முதல் குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு. வாழ்க்கை விரக்தியின் உச்சத்துக்கு என்னைத் தள்ளுச்சு. ஆனாலும், இந்தக் குழந்தையை என்னால்தான் பாத்துக்க முடியும்னு நம்பினேன். மறுபடி டியூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். டியூஷன் சென்டர் ஆரம்பிச்சேன். மூன்று வயசு குழந்தை முதல் காலேஜ் படிக்குறவங்க வரை டியூஷனுக்கு வர ஆரம்பிச்சாங்க. என்கிட்ட படிச்சவங்க நிறைய மார்க் எடுத்து ஸ்கோர் பண்ணதால் வாய்வழி விளம்பரம் மூலமே நிறைய பேர் என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. மூணு வருஷத்தில் முந்நூறு பேராக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துச்சு. என்னால் தனியா சமாளிக்க முடியல அதனால் என் கணவரும் எனக்கு உதவ ஆரம்பிச்சார். அவர் மேத்ஸ் டியூஷன் எடுப்பார். கடந்த ஆறு வருஷமா டியூஷன் தொழில் மூலமா மாசம் 60,000 வரை சம்பாதிச்சுக்கிட்டு இருந்தோம்.இந்த வருஷம் கொரோனா வந்து வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுச்சு. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா வயித்துப் பொழப்புக்கு என்ன பண்றது, அடுத்தகட்ட நகர்வு என்னனு யோசிக்க ஆரம்பிச்ச போதுதான் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பத்திக் கேள்விப்பட்டேன். துணிஞ்சு ஒரு முயற்சி எடுத்தேன்.

நிறைய பேர் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் கத்துக்க விருப்பம் காட்டினாங்க. இந்தி, கையெழுத்துப் பயிற்சி, ஓவியம், தமிழ், இலக்கணம்னு அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் சில ஆசிரியர்களோடு பார்டனர்ஷிப் வெச்சு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். இதன் மூலம் வெவ்வேறு இடங்களில் நிறைய மக்களை ரீச் பண்ண முடிஞ்சுது. இப்போ என்னுடைய மாத வருமானம் 3 லட்சம். முன்ன சம்பாதிச்சதைவிட ரெண்டு மடங்குக்கு மேல’’ என்று சொல்லி கண்களில் கம்பீரம் காட்டும் தேவகி, ‘`இது புதிய ஆரம்பம். எந்த நிலைமையிலும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீங்க. பிரச்னைகளைவிட, மனவலிமைக்கு சக்தி அதிகம். கொரோனா கற்றுத்தந்த இந்தப் பாடம்தான் இனி என் வாழ்க்கைக்கான பாடம்...”

- எனர்ஜி பொங்கச் சொல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism