Published:Updated:

“குக்கிராமத்துலயிருந்து அமேசான்ல விக்குறோம்!” - மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் அழகுதீரன்

அழகுதீரன்
பிரீமியம் ஸ்டோரி
அழகுதீரன்

பக்கத்துல உள்ளவங்க, மாடித்தோட்டம் போட்டிருக்கிறவங்கனு கொடுத்துக்கிட்டு இருந்தப்போதான், ஏன் ஆன்லைன்ல விற்கக் கூடாதுனு தோணுச்சு.

“குக்கிராமத்துலயிருந்து அமேசான்ல விக்குறோம்!” - மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் அழகுதீரன்

பக்கத்துல உள்ளவங்க, மாடித்தோட்டம் போட்டிருக்கிறவங்கனு கொடுத்துக்கிட்டு இருந்தப்போதான், ஏன் ஆன்லைன்ல விற்கக் கூடாதுனு தோணுச்சு.

Published:Updated:
அழகுதீரன்
பிரீமியம் ஸ்டோரி
அழகுதீரன்

``மண்புழு, உழவனோட நண்பன். கழிவுகளை உண்டு தன் எச்சத்தை உரமாக்கி நிலத்துக்கு வளம் சேர்க்கும். அந்த உரத்தைப் பயன்படுத்தி வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், விவசாயம்னு விளைச்சலை அதிகப்படுத்தலாம். ஒரு குக்கிராமத்துல இருந்து, நாங்க இன்னிக்கு அமேசான் மூலமா தமிழகம் முழுக்கவும், இன்னும் பல மாநிலங்களுக்கும் மண்புழு உரம் விக்குறோம், மாசம் 40,000 ரூபாய்க்கு விற்பனை நடக்குதுனு சொன்னா நம்புவீங்களா?!” - முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் கேட்கிறார் அரியலூரைச் சேர்ந்த அழகுதீரன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்தில் மண்புழு உரத் தயாரிப்பிலும், அதை மற்றவர் களுக்குக் கற்றுத் தருவதிலும் பிஸியாக இருப்பவரைச் சந்தித்தோம்.

 “குக்கிராமத்துலயிருந்து அமேசான்ல விக்குறோம்!” - மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் அழகுதீரன்
 “குக்கிராமத்துலயிருந்து அமேசான்ல விக்குறோம்!” - மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் அழகுதீரன்

‘`எம்.காம், பி.எட் பட்டதாரி நான். எங்க குடும்பம் பாரம்பர்ய விவசாயக் குடும்பம். எங்கப்பா ஒரு இயற்கை விவசாயி. நான் காலேஜ் முடிச்சதும் கல்யாணமும் முடிஞ்சது. அடுத்தடுத்து குழந்தைகள், வீட்டுச்சூழல்னு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. ஒரு ஸ்கூல்ல டீச்சரா ஒரு வருஷம் வேலைபார்த்தேன். ஆனா, குழந்தை களைப் பார்த்துக்க முடியல. அதனால வீட்டுலயிருந்தே பண்ற மாதிரி ஏதாச்சும் தொழில் பண்ணலாம்னு தோணுச்சு. அப்போதான், மத்திய அரசின் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்துல நடைபெறும் இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிகள்ல கலந்துகிட்டேன். அதுல காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தினாங்க’’ என்பவர், மண் புழு உரத்தை டிக் அடித்தது ஏன் என்பது குறித்துத் தொடர்ந்தார்.

‘`எங்கப்பா ஏற்கெனவே மண்புழு உரம் தயாரிச்சு, பயிர்களுக்குப் பயன்படுத்தினப்போ நல்ல விளைச்சலைக் கொடுத்ததோடு, காய்கறிகள் சுவையுடன் இருந்ததையும் பார்த்து வளர்ந்திருக்கேன். அந்தத் தொழிலையே நாம செய்யலாம்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘சாயில் ஸ்பிரிட்’ என்ற பெயர்ல தொழிலைத் தொடங்கினேன்.

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சு, விற்பனையும் செஞ்சேன். பக்கத்துல உள்ளவங்க, மாடித்தோட்டம் போட்டிருக்கிறவங்கனு கொடுத்துக்கிட்டு இருந்தப்போதான், ஏன் ஆன்லைன்ல விற்கக் கூடாதுனு தோணுச்சு.

‘குக்கிராமத்துலயிருந்து அமேசானுக்கா... இதெல்லாம் முடியுமா?’னு பலரும் நம்பிக்கை யில்லாம கேட்டாங்க. ‘டெக் னாலஜியோட அழகே அது தான்... உலகம் முழுக்க எல்லாரையும் இணைக்குறது. நமக்கு இதுயெல்லாம் தெரியாதுப்பா ஒதுங்கிட்டா எதுவுமே முடியாது. செஞ்சு தான் பார்ப்போமே...’னு எனக்கும் சேர்த்து தைரியம் சொல்லிட்டு களத்துல இறங்கி னேன்.

 “குக்கிராமத்துலயிருந்து அமேசான்ல விக்குறோம்!” - மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் அழகுதீரன்

அமேசான் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டேன். அவங்க வழிகாட்டினபடி என் மண்புழு உரத் தயாரிப்புகளை ஆன்லைன்ல பதிவு செஞ்சேன். அதன் மூலமா நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பிக்க... அப்புறமெல்லாம் ஏணிப்படி தான்’’ என்பவர், ஆன்லைன் விற்பனை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘`ஆன்லைன்ல ஆர்டர் வந்ததும் அந்த கஸ்டமருக்கு உரத்தை கொரியர்ல அனுப்ப, எங்க கிராமத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் இருக்குற ஜெயங்கொண்டம் போகணும். ஒவ்வொரு முறை கொரியர் அனுப்பப் போகும்போதும், ‘ஏம்மா நீ வீட்டுல புள்ளகுட்டிய பார்த்துக்கிட்டு இருந்தா என்ன, இதெல்லாம் தேவையா...’னு கேட்டவங்க அதிகம். ஆனா, குடும்பம் எனக்கு உறுதுணையா நின்னுச்சு. தயாரிப்பு, ஆன்லைன் ஆர்டர், விற்பனைனு திரும்பிப் பார்க்காம ஓடினேன். கடந்த 10 மாசத்துல மட்டும் 20 டன்னுக்கும் அதிகமா மண்புழு உரத்தை விற்பனை செஞ்சுருக்கேன்’’ என்று ஆச்சர்யப்பட வைத்தவர்...

‘`ஒரு கிலோ மண்புழு உரம் 10 ரூபாய்க்கும், மாடித் தோட்டத்துக்குப் பயன் படுத்துற வங்களுக்கு ஃபில்டர் செய்த மண்புழு உரத்தை 15 ரூபாய்க்கும் விற்குறேன். மண்புழு உரத்தைப் பற்றித் தெரியாத விவசாயிகளுக்கு முதல் முறை குறைஞ்ச விலையில கொடுக் கிறேன். ஒரு முறை என்கிட்ட உரம் வாங்கின வங்க மறுபடி மறுபடியும் என்கிட்டயே வர்ற அளவுக்கு இருக்கும் உரத்தோட தரம்.

 “குக்கிராமத்துலயிருந்து அமேசான்ல விக்குறோம்!” - மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் அழகுதீரன்

மூணு மாசம் முன்னாடி ஒரு விவசாயிக்கு 3 டன் மண்புழு உரம் வாங்கினாரு. இப்போ யெல்லாம் கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ற அளவுல உற்பத்தி செய்யுறதுதான் எங்களுக்கான சவாலா இருக்கு. மாதம் 30 - 40 ஆயிரம்வரை வருமானம் பார்க்க முடியுது’’ என்று பெருமை பொங்கச் சொல்லும் அழகுதீரன், சக பெண்களையும் இதில் கைதூக்கிவிடுகிறார்.

‘`எங்க கிராமத்துல உள்ள பத்து பொண்ணுங்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கக் கத்துக்கொடுத்திருக்கேன். அதுக்குத் தேவையான மூலப் பொருள்களை நானே கொடுத்தேன்.

வறுமை நிலையில இருந்த அவங்க குடும்பங்களோட நிலை இப்போ மாறியிருக்கு. நாங்க தயாரிக்குற மண்புழு உரம் தமிழகம் தாண்டியும் ‘அமேசான்’ மூலம் பெங்களூரு, மும்பை, டெல்லினு போகுதுங்கிறதுல இவங்களுக்கு எல்லாம் கிடைச்சிருக்குற தன்னம்பிக்கை நிறைய. இந்த பத்து பேர் மாதிரியே அவங்களும் பத்து பேரை உருவாக்கணும்!”

அடுத்தடுத்த அடிகள் நோக்கிச் செல்கிறது அழகுதீரன் படை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism