Published:Updated:

“ஆரோக்கியத்தின் வேரைத் தேடி, புதுப்புது பிசினஸை ஆரம்பிச்சேன்!”

 கயல்விழி
பிரீமியம் ஸ்டோரி
கயல்விழி

பாரம்பர்யத்தை மீட்கும் கயல்விழி

“ஆரோக்கியத்தின் வேரைத் தேடி, புதுப்புது பிசினஸை ஆரம்பிச்சேன்!”

பாரம்பர்யத்தை மீட்கும் கயல்விழி

Published:Updated:
 கயல்விழி
பிரீமியம் ஸ்டோரி
கயல்விழி

சென்னையில் வளர்ந்து, அமெரிக்காவில் பணியாற்றி, இயற்கை வாழ்வியல்மீதான ஆர்வத்தில் சென்னையில் குடியேறியவர் கயல்விழி. ‘Essential Traditions by Kayal’ என்ற பெயரில், பாரம்பர்ய சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், நஞ்சில்லாத இயற்கை உணவுகளை விற்பனை செய்யும் தொழில் முனைவோ ராகப் புதுமையான கண்ணோட்டத்தில் பயணிக்கிறார்.

“ஸ்கூல் படிக்கும்போது விடுமுறை தினங்கள்ல தாத்தா பாட்டியைப் பார்க்கக் கிராமத்துக்குப் போவேன். மண்பாத்திர சமையல், வாழையிலைச் சாப்பாடு, பருவத்துக்கேற்ற உணவுகள்னு அவங்க கடைப்பிடிக்கிற பெரும்பாலான விஷயத்துலயும் காரண காரியம் இருக்கும். அந்த வாழ்க்கை முறைக்கு மாறணும்ங்கிற ஆசை இருந்தாலும், கல்யாணமானதும் வேலைக்காக என் கணவரும் நானும் வெளிநாட்டுல வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. ஒருகட்டத்துல சென்னையில குடி யேறினோம். ஒருமுறை தென் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவரைச் சந்திச்சோம். அவரோட வாழ்க்கை முறையும், விருந்தோம்பலும் விவரிக்க இயலாத நிறைவைக் கொடுத்துச்சு. பிறகு, என் கணவரும் நானும் வேலையை விட்டுட்டோம். இயற்கை விவ சாயிகள்கிட்டேருந்து விளைபொருள் களை வாங்கி, ஆன்லைன்ல விற்பனை செஞ்சோம். பிறகு, 2013-ல் ‘வேர் ஆர்கானிக்’ங்கிற பெயர்ல முதல் ஷோரூமை ஆரம்பிச்சோம்” என் பவரின் தேடல், பாரம்பர்ய வீட்டு உபயோகப் பொருள்களின் மீதும் திரும்பியிருக்கிறது.

“ஆரோக்கியத்தின் வேரைத் தேடி, புதுப்புது பிசினஸை ஆரம்பிச்சேன்!”
“ஆரோக்கியத்தின் வேரைத் தேடி, புதுப்புது பிசினஸை ஆரம்பிச்சேன்!”

“ஆரோக்கியமான உணவுகளை, உரிய பாத்திரங்கள்ல சமைக்கிறதும் அவசியமானதுனு புரிஞ்சது. அதுக்கான விழிப்புணர்வை ஏற் படுத்த, பாரம்பர்ய பாத்திரங்களுக் கான எக்ஸ்போவை நடத்தினோம். பிறகு, பணியாரக்கல், கல் சட்டி, இரும்புக்கடாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கிறவங்களைத் தேடிப்போனோம். குறிப்பிட்ட சில பகுதிகள்ல, சில குடும்பத்தினர் மட்டுமே இவற்றைத் தயாரிக்கிறதும், அந்தத் தொழில்ல நிறைய சவால்கள் இருக்கிறதும் தெரிஞ்சது. அவங்களுக்கு முடிஞ்ச அளவுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறதோடு, நகரப் பகுதி மக்கள்கிட்ட இவற்றைக் கொண்டு போகும் நோக்கத்துல, தனி ஷாப் ஆரம்பிச் சோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறும் கயல்விழி, புதுப்புது தேடலுடன் தனது தொழிலையும் விரிவுபடுத்தியிருக்கிறார்.

“மின்சார உபகரணங்கள்ல அரைக்கும் போது உணவுல வெப்பம் அதிகரிச்சு, அதிலிருக்கும் சத்துகளும் பலன்களும் குறையலாம். ஆனா, அம்மிக்கல், ஆட்டுக்கல், திருகைக்கல் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள்ல உணவுகளை அரைக்கிறப்போ குறைவான வெப்பமே உருவாவதுடன், உணவிலிருக்கிற சத்துகளும் அப்படியே நிலை நிறுத்தப்படும். அதேபோல தானியங்களைப் புடைத்தெடுக்கப் பயன்படுற உலக்கையை, கருங்காலி மரத்துலதான் செய்வாங்க. அதைப் பிடிச்சுப் பயன்படுத்த பயன்படுத்தவே அது இலகுவானதா மாறும். மாக்கல்லால் செய்யப் பட்ட தோசைக்கல்லில் வார்த்தெடுக்கிறதையே கல்தோசைனு சொல்லுவாங்க. மரத்தாலான மத்துல பருப்பையும் கீரையையும் கடைய ஏதுவா, மண் சட்டியின் உட்புற அடிப்பரப்புல சின்னச் சின்ன மேடு பள்ளத்தை உருவாக்கி யிருப்பாங்க.

“ஆரோக்கியத்தின் வேரைத் தேடி, புதுப்புது பிசினஸை ஆரம்பிச்சேன்!”
“ஆரோக்கியத்தின் வேரைத் தேடி, புதுப்புது பிசினஸை ஆரம்பிச்சேன்!”

இதுபோல நுட்பமான காரணத்துடன் முறையான அனுபவமும் பொறுமையும் கொண்டவர்களால மட்டுமே இதுபோன்ற கருவிகள் தயாரிக்கப்படுது. இவற்றைக் கொண்டு, சமையலை ரொம்பவே ரசிச்சு செய்ய முடியும். கூடவே, அந்த உணவுல மணமும் சுவையும் தனித்துவமா இருப்பதுடன், செரிமானப் பிரச்னைகள் ஏற்படுவதும் குறையும். இத்தகைய கருவிகள் நம் முன்னோர்களின் வாழ்வியலோடு ஒன்றிப் போயிருந்ததோடு, உடலுறுதிக்கும் மனப் பயிற்சிக்கும் பெரும் பங்காற்றியிருக்கு...” பாரம்பர்ய வீட்டு உபயோகப் பொருள்களின் சிறப்பம்சங்களை அடுக்குபவர், சென்னை தவிர, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலும் விற்பனைக்கூடங்களை நடத்திவருகிறார். சினிமா உள்ளிட்ட பல துறை பிரபலங்களையும் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் கயல்விழி, பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறார்.

“இதுபோன்ற பாரம்பர்ய பொருள்களைப் பயன்படுத்துறதும் பராமரிக்கிறதும் ரொம் பவே சுலபம்தான். சாம்பல் கொண்டு தேங் காய் நார்ல துலக்கினாலே போதும். முறையா பராமரிச்சா வருஷக்கணக்குல வெச்சிருந்து பயன்படுத்தலாம். கட்டுப்படியான விலையில் எல்லாத் தரப்பினரும் பயன்படுத்துற வகையிலும் இவை கிடைக்குது. இதை வாங்கிறது அவரவர் விருப்பம். அதேசமயம், இந்தப் பயன்பாடுகள் பத்தின விழிப்புணர்வு அதிகரிச்சாலே, இவற்றின் அழிவைத் தடுத்து, இந்தத் தொழிலை நம்பியிருக்கிறவங்களோட வாழ்வாதாரத்தைக் காக்க முடியும்” என்று அக்கறையுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism