Published:Updated:

விதை போட்ட அப்பா... விருட்சமாக வளர்ந்த மகள்! - ‘ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ சண்முகதேவி

சண்முகதேவி
பிரீமியம் ஸ்டோரி
சண்முகதேவி

எம்.சி.ஏ முடிச்சுட்டு, அமெரிக்காவுல ஐ.டி நிறுவனத்துல வேலை செஞ்சேன். கல்யாணம் முடிஞ்சதும், முன்பு சொன்னதுபோல குழப்பமான சூழலுக்கு மத்தியில் பிசினஸ்ல இறங்கலாம்னு முடிவெடுத்தேன்.

விதை போட்ட அப்பா... விருட்சமாக வளர்ந்த மகள்! - ‘ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ சண்முகதேவி

எம்.சி.ஏ முடிச்சுட்டு, அமெரிக்காவுல ஐ.டி நிறுவனத்துல வேலை செஞ்சேன். கல்யாணம் முடிஞ்சதும், முன்பு சொன்னதுபோல குழப்பமான சூழலுக்கு மத்தியில் பிசினஸ்ல இறங்கலாம்னு முடிவெடுத்தேன்.

Published:Updated:
சண்முகதேவி
பிரீமியம் ஸ்டோரி
சண்முகதேவி

“என் அப்பா பிசினஸ்மேன். அதனால, சின்ன வயசு லேயே எனக்கும் பிசினஸ்ல ஆர்வம் வந்தது. நகைக்கடை, ரிக் வண்டி சர்வீஸ்னு பல பிசினஸ்ல யும் வெற்றிகரமா இயங்கின அப்பாவுக்கு, புது பிசினஸ் ஒண்ணுல நஷ்டம் ஏற்பட்டது. மறுபடியும் பிசினஸ்ல வெற்றி பெற முடியாததால, அப்பாவுக்கு ரொம்பவே வருத்தம். அப்பா விட்ட பிசினஸ் பயணத்தை நான் தொடரணும்னு ஆசைப்பட்டேன். ‘உனக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது’ன்னு பலரும் பயமுறுத்தினாங்க. அமெரிக்காவுல மாதந்தோறும் பல லட்சம் வருமானம் கிடைக்கும் ஐ.டி வேலையில தொடர்வதா... பிசினஸ்ல இறங்கி சவால்களை எதிர்கொள்வதாங்கிற குழப்பம்... கடைசியா நான் அந்த முடிவை எடுத்தேன்’’

- வெற்றி அனுபவம் பகிரும் முன்பாக, தான் எதிர்கொண்ட இக்கட்டான சூழலை உணர்த்துகிறார் சண்முகதேவி. நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களில், இன்டீரியர் வேலைகள், தூய்மை, பராமரிப்பு, செக்யூரிட்டி, எலெக்ட்ரிகல், பார்க்கிங், அலுவலக உதவியாளர்கள் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கான பணியாளர்களை ஒப்பந்த முறையில் பணிக்கு அமர்த்துகிற `ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்' துறைக்கான தேவை பெருகிவருகிறது. இந்தத் துறையில் சென்னையில் முன்னணி தொழில்முனைவோராக இருக்கும் சண்முகதேவி, கரூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இன்று பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார்.

விதை போட்ட அப்பா... விருட்சமாக வளர்ந்த மகள்! - ‘ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ சண்முகதேவி

“எம்.சி.ஏ முடிச்சுட்டு, அமெரிக்காவுல ஐ.டி நிறுவனத்துல வேலை செஞ்சேன். கல்யாணம் முடிஞ்சதும், முன்பு சொன்னதுபோல குழப்பமான சூழலுக்கு மத்தியில் பிசினஸ்ல இறங்கலாம்னு முடிவெடுத்தேன். மறுபடியும் அமெரிக்கா போகும் முடிவை கைவிட்டு கணவரும் நானும் சென்னையில வேலைக்குச் சேர்ந்தோம். பத்து வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவுல ஃபெசிலிட்டி மேஜேன்மென்ட் துறை பெரிசா வளர்ந்துடுச்சு. அந்த நேரத்துல சென்னையிலயும் ஐ.டி உள்ளிட்ட முக்கியமான சில துறைகள் வேகமா வளர ஆரம்பிச்சுது. எதிர்காலத்துல ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் துறை நம்மூர்லயும் பிரபலமாகும்னு உறுதியா நம்பினேன். ‘ஸ்வஸ்தி சப்போர்ட் சர்வீஸஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ங்கிற பெயர்ல ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிச்சேன். ஐ.டி வேலைக்குப் போய்கிட்டே, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு கறையான், கரப்பான்பூச்சி, கொசுத் தடுப்பு உள்ளிட்ட பூச்சிக் கட்டுப்பாட்டுக்கான (Pest Control) வேலைகளைச் செஞ்சு கொடுத்தேன். பெரிசா வருமானம் இல்லாட்டியும், வாடிக்கையாளர்களைப் பெருக்கினேன்”

- முதல் படியை புத்திசாலித் தனமாக எடுத்து வைத்தவர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் துறையில் இறங்கியதுடன், ஐ.டி வேலையிலிருந்தும் விலகியிருக்கிறார்.

“இந்தத் துறையில, எந்தப் பின்புலமும் இல்லாததால, பெரிய நிறுவன ஆர்டர்கள் பிடிக்குறது சவாலா இருந்துச்சு. எல்லாத்தையும் சமாளிச்சோம். ஒருகட்டத்துல சென்னை டைடல் பார்க்கின் பராமரிப்பு பணிக்கான ஆர்டர் கிடைச் சதும், அடுத்தடுத்து புதிய ஆர்டர்கள் கிடைச்சது. அவ்வப்போது வெளிநாடு களுக்குப் போய் துறை சார்ந்த அனுபவங்களையும், புதுத் தொழில் வாய்ப்புகளையும் கத்துகிட்டு வருவேன்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகத்தோட பராமரிப்புப் பணி, இப்ப எங்க நிறுவனத்துக்கிட்டதான் இருக்கு. அங்கு வரும் வாசகர்கள் மனநிறைவுடன் புத்தகங்களைப் படிச்சுட்டுப் போகணும்னு பராமரிப்பு, உள் அலங்காரம்னு இந்த நூலகத்துக்கான ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துச் செய்யுறோம். சென்னை வர்த்தக மையம் (Trade Center), நந்தனம் ஆவின் தலைமை அலுவலகம், ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, திருமயம் பெல் நிறுவனம்னு பல்வேறு கவர்மென்ட் புராஜெக்ட்டுகள் கைவசம் இருக்கு.

விதை போட்ட அப்பா... விருட்சமாக வளர்ந்த மகள்! - ‘ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ சண்முகதேவி

எங்களோட பணியாளர்களுக்கு உரிய வேலைக்கான பயிற்சியுடன், வேலை செய்யும் நிறுவனப் பணியாளர்களிடம் நடந்துக்க வேண்டிய விதம் குறித்தும் வழிகாட்டி அனுப்பி வைப்போம். தொழில்நுட்ப திறனுடைய, தொழில்நுட்ப திறன் அல்லாத பணியாளர்களையும் தனியார் நிறுவனங் களுக்கு ஒப்பந்த அடிப்படையில அனுப்பி வைக்கிறது, பள்ளிகள்ல ஆங்கில பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைக் கொடுக்குறதுனு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் கூடுதல் கவனம் கொடுக்கிறேன்”

- பிசினஸில் ஜெயித்த சண்முகதேவி, தனியார் மருத்துவ மனைகள், ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள் என 60-க்கும் அதிகமான புராஜெக்ட்டுகளை கைவசம் வைத்திருக்கிறார்.

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு பணிகளுக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர், “லாக் டெளன் நேரத்துல ஐ.டி நிறுவனப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஆரம்பிச்சதால, எங்களுக்கான வேலைவாய்ப்பு கணிசமா குறைஞ்சுடுச்சு. நிலைமை இப்போதான் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிச்சிருக்கு. ஒரு நிறுவனத்தின் தோற்றத்துலயும், ஊழியர்கள் சிக்கலின்றி வேலை செய்யுறதுலயும் எங்களோட பங்களிப்பு முக்கிய மானது. எனக்குப் பக்கபலமா இருக்குற என் கணவர் லக்ஷ்மண பெருமாளும் தனியா பிசினஸ் பண்றாரு. ‘வைராக் கியத்தோடு ஜெயிச்சுட்ட’ன்னு குடும்பத்துல பெருமையா சொல்றாங்க. இந்த வெற்றியைத் தக்க வெச்சுக்க, இப்பவரைக் கும் ஒவ்வோர் அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்குறேன். தொடர்ந்து ஜெயிப்போம்”

- லட்சியத்தை வசப்படுத்தியதைப்போலவே, நிதான மாகவும் பக்குவத்துடனும் பேசி முடித்தார் சண்முகதேவி.