Published:Updated:

ஐந்தாயிரம் முதலீடு,  லட்ச ரூபாய் வருமானம், செலிபிரிட்டி கஸ்டமர்ஸ்! - ஓபு உஷாவின் ஓஹோ வளர்ச்சி

உஷா
பிரீமியம் ஸ்டோரி
News
உஷா

#Utility

" பெரிய முதலீடு இல்லை. உழைப்பை மட்டும் நம்பினேன். இன்னைக்கு நானும் ஒரு தொழிலதிபர்'' - பெருமையாகப் பேசுகிறார் ஒபு உஷா. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து ஆன்லைன் மூலமாக இந்தியா முழுவதும் தான் உற்பத்தி செய்யும் டெரகோட்டா நகைகளை விற்பனை செய்யும் ஓபு உஷா தன் வெற்றிக்கதை பகிர்கிறார்.

ஐந்தாயிரம் முதலீடு, 
லட்ச ரூபாய் வருமானம், செலிபிரிட்டி கஸ்டமர்ஸ்! - ஓபு உஷாவின் ஓஹோ வளர்ச்சி

" சொந்த ஊர் சேலம். நெசவாளர் குடும்பம். பொம்பள புள்ளைக்கு படிப்பு வேணாம்னு  பத்தாம் வகுப்புலயே படிப்பை நிறுத்தப் பார்த்தாங்க. போராடி காலேஜ் வரைக்கும் வந்தேன். பி.எஸ்ஸி ரெண்டாவது வருஷம் படிச்சிட்டிருந்தபோது கல்யாணம் ஆயிடுச்சு. படிப்பை பாதியில் நிறுத்திட்டு, கணவர் ஊரான குமாரபாளையத்தில் செட்டில் ஆயிட்டோம். குடும்பம், குழந்தைனு முழு நேர ஹோம் மேக்கரா மாறினேன். எனக்குனு ஓர் அடையாளம் இல்லையேனு ஏக்கம் இருந்துட்டே இருந்துச்சு.  கணவர் என் ஆதங்கத்தைப் புரிஞ்சுகிட்டார்.

ஐந்தாயிரம் முதலீடு, 
லட்ச ரூபாய் வருமானம், செலிபிரிட்டி கஸ்டமர்ஸ்! - ஓபு உஷாவின் ஓஹோ வளர்ச்சி

'உன்னைத் தொலைச்சுட்டு பொறுப்பான குடும்பத்தலைவியா வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்ல. உனக்கான அடையாளத்தை உருவாக்கு'னு சொல்லி முழு சுதந்திரம் கொடுத்தார். வீட்டிலிருந்தே ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு தோணுச்சு. எங்க ஏரியாவில் லுங்கிகள், புடவைகள் விற்பனைதான் பிரதான தொழில். ஆனா நான் புது பிசினஸ் ஐடியாவை தேடினேன். அந்த நேரத்தில் டெரகோட்டா ஜுவல்லரி டிரெண்ட் ஆச்சு.   டெரகோட்டா ஜுவல்லரி செய்யக் கத்துக்கிட்டேன். 50க்கும் மேற்பட்ட நகைகள் செய்து பார்த்த பின் , இதை பிசினஸாக ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு.

5000 ரூபாய் முதலீட்டில்  மெட்டீரியல்கள் வாங்கி நகைகள் செய்து தோழிகள்கிட்டருந்து விற்பனையை ஆரம்பிச்சேன் "

ஐந்தாயிரம் முதலீடு, 
லட்ச ரூபாய் வருமானம், செலிபிரிட்டி கஸ்டமர்ஸ்! - ஓபு உஷாவின் ஓஹோ வளர்ச்சி

- பிசினஸ் ஆரம்பித்த கதை சொல்லித் தொடர்ந்தார் ஓபு உஷா.

"ஃபேன்ஸி நகைகளுக்கு அடிக்கடி ஆர்டர் கிடைக்காது. விசேஷங்களின்போது தான் வரும். விற்பனையை அதிகரிக்க மாற்றுவழியை யோசிச்சபோது, சமூகவலைதளங்கள் மூலமா, டெரகோட்டா நகைகளை விற்பனை செய்யும் ஐடியாவை என் கணவர் கொடுத்தார்.

என் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் பிசினஸ் பக்கம் ஆரம்பிச்சேன். நான் செய்த நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்து, விவரங்களுடன் அப்லோடு பண்ண ஆரம்பிச்சேன்.  ஆர்டர் வர ஆரம்பிச்சது.

ஐந்தாயிரம் முதலீடு, 
லட்ச ரூபாய் வருமானம், செலிபிரிட்டி கஸ்டமர்ஸ்! - ஓபு உஷாவின் ஓஹோ வளர்ச்சி

டெரகோட்டாவில் டெம்பிள்  ஜுவல்லரி டிசைனை அறிமுகம் செய்தேன். அந்தப் புது கான்செப்ட்டுக்கு நிறைய ஆர்டர் வந்தது. பட்டுப்புடவைகளுக்கு டெரகோட்டா டெம்பிள் நகைகளை மேட்சிங் செய்ய   பட்டுப்புடவைகளின் டபுள் ஷேடிலேயே நகைகளை டிசைன் செய்தேன்'' என்பவருக்கு, நடிகை தேவயானி, கே.எஸ் ரவிக்குமார் சாரின் மகள், பாடகி மஹதி , சீரியல் நடிகைகள் ரக்‌ஷிதா, ஜனனி, சுஜா வருணி என பிரபலங்கள் பலரும் வாடிக்கையாளர்கள்.

''பிசினஸ் செய்வதைவிட வந்த கஸ்டமர்களை தக்கவைப்பதுதான் சவாலானது. கஸ்டர்மர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது, குறைகளை ஏத்துக்கிட்டு வேறு நகைகள் கொடுப்பது, புது டிசைன்களை அப்டேட் செய்வது, பேக்கிங் போன்றவற்றில் அதிக கவனமா இருக்கணும். ஐந்தாயிராத்தில் ஆரம்பிச்ச பிசினஸில் இப்போ மாசம் ஒரு லட்சம்வரை வருமானம் வருது. நாலு பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்திருக்கேன்.''

-வெற்றிப் புன்னகையோடு விடைகொடுக்கிறார்.