தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 18 - யூடியூபில் வருமானம் பார்ப்பது எப்படி?

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

வீட்டைவிட்டு வெளியே வருவதுதான் பொருளாதாரம் ஈட்ட முதல் அடியாக இருந்தது.

உலகம் இயங்கும் முறையை அவ்வப்போது சில கண்டுபிடிப்புகள் ராக்கெட் வேகத்தில் மாற்றியமைக்கும். சக்கரம், நெருப்பில் தொடங்கி இணையம் வரை நீளும் அந்தப் பட்டியலில் நூற்றுக்கு மேலெல்லாம் விஷயங்கள் இருக்காது. அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டு மனித வாழ்க்கையை மாற்றி எழுதியவை நூற்றுக்கும் குறைவான கண்டு பிடிப்புகள்தாம் என்கிறார்கள் மானுட ஆய்வாளர்கள். மற்றவையெல்லாம் அந்தக் கண்டுபிடிப்புகளின் நீட்சியாகத்தான் இருக்கும். உதாரணமாக, சக்கரம் கண்டு பிடித்த பின் வாகனங்களைக் கண்டுபிடித்திருப்போம். வாக னங்கள் மனிதன் இடம் பெயர உதவி செய்தாலும், அதற்கு சக்கரம்தான் மூலகாரணம். அந்த வகையில், சமீபத்தில் மனிதர்களின் வாழ்க்கை யைப் பெரிய அளவில் மாற்றியமைத்தவை இணையத்தின் முக்கிய விளைவான சமூக வலைதளங்கள்தாம் எனச் சொல்லலாம். ஏகப்பட்ட சமூக வலைதளங்கள் இருந்தாலும் நம்நாட்டுச் சூழலில் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவை யூடியூப் மற்றும் இன்ஸ்டா கிராம். காரணம், இவை இரண்டும்தான் பொருளாதாரரீதியான அனுகூலங்களை அதிகம் தருகின்றன, குறிப்பாகப் பெண் களுக்கு.

வீட்டைவிட்டு வெளியே வருவதுதான் பொருளாதாரம் ஈட்ட முதல் அடியாக இருந்தது. அதைத்தான் காலம் காலமாகப் பெண்களுக்கு எளிதில் கிடைக்காத ஒன்றாக நம் சமூகம் மாற்றிவைத்திருக்கிறது.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

இத்தனை நூறு ஆண்டுகளாகப் பெண்களை வீட்டைவிட்டு சுதந்திரமாக வெளியே வரவைக்க நிறைய பேர் கருத்தியல் ரீதியாக வும், உரிமைப் போராட்டங்களாகவும் முயன்றி ருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்குள்ளே இருந் தாலும் பொருளாதார ரீதியாக வெற்றி பெற முடியும் எனப் பாதை அமைத்துத் தந்தவை யூடியூபும் இன்ஸ்டாவும்தான். இந்த அத்தி யாயத்தில் யூடியூபில் என்ன மாதிரியான வருமானங்களைப் பெண்கள் பார்க்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ளலாம்.

வ்யூஸ்

இது நேரடியாக யூடியூபே நமக்குத் தரும் வருமானம். நம் வீடியோக்களின் ஆரம்பத்திலும் இடையிலும் விளம்பரங்கள் வரு கின்றன அல்லவா? அந்த விளம்பரங்களை

யும் அவற்றுக்கான பணத்தையும் யூடியூப் பெற்று, அதில் நமக்கொரு பங்கைத் தருகிறது. எத்தனை பேர் வீடியோவைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள், விளம்பரங்களை ‘ஸ்கிப்’ செய்து பார்க்கிறார்களா அல்லது முழுமையாகப் பார்க்கிறார்களா, நம் வீடியோ ‘டிரெண்டிங்’ பட்டியலில் வந்திருக்கிறதா எனப் பல காரணிகளை வைத்து இந்தத் தொகையை யூடியூப் முடிவு செய்கிறது. தோராயமாகக் கணக்கு சொல்ல வேண்டுமென்றால், ஒரு வீடியோவை ஒரு லட்சம் பேர் பார்த்தால் 4,000 - 5,000 ரூபாய் நமக்கான பங்காகக் கிடைக்கலாம்.

‘தேர்டு பார்ட்டி’ விளம்பரங்கள்

இது நாமே விளம்பரதாரர்களைப் பிடித்து அவர்களிடம் பணம் பெறும் முறை. நாம் வீடியோ தயாரிக்கும்போதே விளம்பர தாரர்களின் வீடியோ க்ளிப்களையும் இணைத்து அப்லோடு செய்ய வேண்டும். இதில் யூடியூபின் உதவி இல்லை யென்பதால் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆனால், விளம்பரதாரர்களை நாமே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சப்ஸ்கிரை பர்கள் அதிகமாகிவிட் டால் விளம்பரதாரர்கள் கிடைப்பது எளிது.

பொருள்களை விற்பது

சேலை வியாபாரம் செய்பவர்களை உதாரணமாகச் சொல்லலாம். அவர்களிடம் இருக்கும் புடவைகளை தனித் தனியாகப் பிரித்துக் காட்டி வீடியோக்கள் செய்கிறார்கள். அதை யூடியூபில் அப்லோடு செய்து, குறிப்பிட்ட டிசைன் புடவை வேண்டுமென்பவர்களைத் தங்களைத் தொடர்புகொண்டு ஆர்டர் செய்யலாம் என்கிறார்கள். இதில் யூடியூபோ விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் தருவதில்லை. நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள் கிறோம். ஆனால், அதற்கான வழியாக யூடியூப் இருக்கிறது.

இவைதான் அதிகமானோர் பயன்படுத்தும் வருமான வழிகள். இவை தவிர, மெர்ச்செண் டைஸ் உள்ளிட்ட இன்னும் சில வழிகள் உண்டு. அவற்றை எல்லோருக்கும் எளிதில் தந்துவிடுவதில்லை யூடியூப்.