Published:Updated:

“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்

காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
காயத்ரி

என் கணவரோட தாத்தா காலத்தில் இருந்து, இந்த நெய் தயாரிக்கும் தொழிலை செஞ்சுக்கிட்டு வர்றாங்க.

“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்

என் கணவரோட தாத்தா காலத்தில் இருந்து, இந்த நெய் தயாரிக்கும் தொழிலை செஞ்சுக்கிட்டு வர்றாங்க.

Published:Updated:
காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
காயத்ரி

“நான் நாலஞ்சு டிகிரி படிச்சுட்டு, தனியார் கல்லூரி துறை தலைவர், தனியார் பள்ளியின் முதல்வர்னு வேலைபார்த்தேன். குழந்தைகள், அதிக வேலைப்பளுனு வாழ்க்கை போனதால, வேலையை விட்டுட்டு, என் கணவர் செய்துவந்த நெய் உருக்கி விற்பனை செய்யும் தொழிலை கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போ ஈரோடு, நாமக்கல், சேலம்னு மட்டும் விற்பனையாகிட்டு இருந்த எங்க நெய்யை, இப்போ தமிழ்நாடு முழுக்கவும், பிற மாநிலம் வரையிலும் விற்பனை செய்யுற அளவுக்கு வளர்த்தெடுத்திருக்கேன்...’’ பெருமையுடன் சொல்கிறார், காயத்ரி சிவக்குமார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவ காயத்ரி, கணவர் கார்த்திகேயனோடு சேர்ந்து, ‘ஐயப்பா கீ புரொமோட்டர்ஸ்’ என்ற பெயரில் நெய் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள் நேரடியாக கொண்டு வரும் வெண்ணெயை அவர்களை வைத்தே உருக்கி, தரமான நெய்யை வாங்கி விற்பனை செய்துவருகிறார். இவர் மூலம் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வருமானத்துக்கு வழி கிடைத்திருக்கிறது. நெய் உருக்கிக்கொண்டிருந்தவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்த காயத்ரி சிவக்குமாரை சந்தித்துப் பேசினோம்.

“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்

“என் கணவரோட தாத்தா காலத்தில் இருந்து, இந்த நெய் தயாரிக்கும் தொழிலை செஞ்சுக்கிட்டு வர்றாங்க. நான் பொறந்தது சேலம். எம்.எஸ்சி, எம்.ஃபில், பி.எட், நெட் தேர்வுனு முடிச்சிருக்கேன். ஒரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்தப்ப, என் கணவரும் அங்க வேலைபார்த்தார். 2008-ம் வருஷம் காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். என் கணவர்தான் முதலில் நெய் தயாரிக்கும் தொழிலை பார்த்துக்கிட்டு இருந்தார். அப்போ சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய ஊர்கள்ல மட்டும் எங்க நெய் விற்பனை ஆகிட்டிருந்துச்சு. ஆண், பெண்ணுனு ரெண்டு குழந்தைகள், வேலையில் ரூ.42,000 சம்பளம்னு வாழ்க்கை போயிட்டிருந் தப்போதான், குழந்தைகளை கவனிச்சுக்கிட்டு வேலைக்குப் போக முடியலைன்னு வேலையை விட்டேன். கணவரோடு சேர்ந்து நெய் தயாரிக்கும் தொழிலை கவனிப்பதுனு முடிவு பண்ணினேன்.

`நீ படிச்ச படிப் பென்ன, பார்க்குற உத்தியோகம் என்ன? அதை விட்டுட்டு, அடுப்படியை கட்டிக் கிட்டு அழப் போறியா?’னு கேட்டாங்க பலர். அடுப்படியவே எப்படி வருமானம் தர்ற இடமா மாத்திக்காட்டுறேன் பாருங்கனு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சேன்’’ என்பவர், தொழிலில் தான் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி பற்றி பகிர்ந்தார்.

“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்
“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்
“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்

‘`என் கணவர் நெய்யுடன் 2010-ல் இருந்து, மைசூர் பாகு, முந்திரி கேக், சம்பா கோதுமை அல்வா, பாதாம் அல்வானு இனிப்பையும் செஞ்சு விற்பனை செய்தார். 2016-ம் நான் தொழிலைப் பார்க்க வந்தப்போ, எங்க கம்பெனி நெய்யும், ஸ்வீட்ஸும் ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல மட்டும் விற்பனை யாகிட்டு இருந்துச்சு. முதல்ல, ஆன்லைன் மூலம் எங்க கம்பெனி நெய்யை தமிழ்நாடு முழுக்க விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். ஹோம் மேடா கையாலேயே நெய்யை உருக்குறதால தரம் பிடிச்சிப்போக, பல ஊர்களில் இருந்தும் கஸ்டமர்கள் நிறைய கிடைச்சாங்க. சில மாதங் களிலேயே, சேலத்துல எங்க நிறுவனத்தோட கிளையைத் தொடங்கினோம்.

கடந்த வருஷம் கொரோனா பிரச்னையால் வேலை யிழந்த ஐ.டி ஊழியர்கள் பலர், வருமானத்துக்காக நெய் விற்பனை செய்ய முன்வந்து எங்ககிட்ட பேசினாங்க. அதுல, பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னைனு 13 பேருக்கு வாய்ப்புக் கொடுத்தோம். தொழில், தொழில்நுட்ப பாய்ச்சலோட ஜோரா போக, சென்னை, மேற்கு மாம்பலத்துல எங்க நிறுவனத்தின் மூணாவது கிளையை தொடங்கினோம். தமிழ்நாடு முழுக்கவும், பெங்களூரிலும் எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர் இருக் காங்க. கொரியர், பார்சல் மூலமா எங்க நெய்யை அனுப்பிக்கிட்டு இருக்கோம். தவிர, எங்ககிட்ட மொத்தமா நெய் வாங்கி, தங்களோட கம்பெனி பெயர்ல 130 பேர் விற்பனை செய்றாங்க. அடுத்ததா, எங்க கம்பெனிக்கு மாநிலம் முழுக்க டீலர்ஷிப் நியமிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம்’’ என்று சொல்லும் காயத்ரியின் நிறுவனத்துக்கு ஹோட்டல், கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பேக் கரிகள், கல்லூரிகள், தனி நபர்கள் என இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கிறார்கள்.

“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்
“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்
“தமிழகம் முழுக்க மணக்குது எங்க நெய்!” - சாதித்த பட்டதாரி பெண்

‘`விவசாயிகள் எங்ககிட்ட வெண்ணெயோடு வந்து, நெய்யை உருக்கித் தந்துட்டுப் போவாங்க. பசுமாடு, எருமை, நாட்டுமாடுனு மூணு மாட்டு வெண்ணெய் களையும் தனித்தனியா வாங்கி, தனித்தனியா நெய்யா காய்ச்சி வாங்கிக்குவோம். லைட்டா உப்பு போட்டு காய்ச்ச சொல்லுவோம். காய்ச்சிய பிறகு, கொஞ்சம்போல முருங்கைக் கீரையைப் போட்டு, கிளறச் சொல் வோம். நெய்யில் உள்ள கரிப்புத் தன்மை அப்பத்தான் போகும். விவசாயிகளிடம் வெண்ணெயை கிலோ ரூ. 340னு வாங்கி, நாங்க நெய்யை ஒரு லிட்டர் ரூ. 500 வரை விற்பனை செய்றோம். மாசத்துக்கு 3 டன் வரை நெய் விற்பனை செய் கிறோம்’’ என்று ஆச்சர்யப்படுத்திய காயத்ரி இறுதியாகச் சொன்னார்...

‘`நான் பேராசிரியர் வேலையை விட்டுட்டு நெய் தொழில் செய்ய வந்தப்போ என்னை கேலி செஞ்சவங்க எல்லாம், இப்போ அதைவிட பல மடங்கு இதில் நான் சம்பாதிக்கிறதை பார்த்து வியந்து போய் பாராட்டுறாங்க. ஏதாச்சும் செய்யணும், நம்ம கையில வருமானம் பார்க்கணும்னு நினைக்கிற பெண்கள், சமையலைக்கூட கையில எடுக்க லாம். ஏன்னா, உணவுதான் இங்க எல்லாருக்கும், எப்பவும் தேவை யானது. அதை எப்படி நம்ம தொழிலா மாத்திக்கலாம்னு யோசிங்க, திட்டமிடுங்க, களத்துல இறங்குங்க தோழிகளே!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism