Published:Updated:

சேமிப்பு மட்டும் போதுமா... பணத்தைப் பெருக்க என்ன வழி? - நிதி ஆலோசகரின் வழிகாட்டல்!

சேமிப்பு மட்டும் போதுமா
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு மட்டும் போதுமா

தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்தால், 5 அல்லது பத்து வருடங்கள் கழித்து அன்றைய சந்தை நிலவரத்தின்படி செய்கூலி, சேதார இழப்பில்லாமல் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

சேமிப்பு மட்டும் போதுமா... பணத்தைப் பெருக்க என்ன வழி? - நிதி ஆலோசகரின் வழிகாட்டல்!

தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்தால், 5 அல்லது பத்து வருடங்கள் கழித்து அன்றைய சந்தை நிலவரத்தின்படி செய்கூலி, சேதார இழப்பில்லாமல் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Published:Updated:
சேமிப்பு மட்டும் போதுமா
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு மட்டும் போதுமா

கடுகு டப்பாவில் காசு சேர்த்தார்கள் பாட்டிகள். சீட்டு, ஆர்.டி என்று பணம் சேர்த்தார்கள் அம்மாக்கள். பெரும்பான்மை பெண்கள் வேலைக்குச் செல்கிற இந்தக் காலத்தில் கூடுதல் லாபம் கிடைக்க, பெண்கள் வேறு என்னென்ன முறைகளில் முதலீடு செய்யலாம் என்று நிதி ஆலோசகர் வித்யா பாலாவிடம் கேட்டோம்.

வித்யா பாலா
வித்யா பாலா

``பல காலமாக வீட்டு பட்ஜெட் பெரும்பாலும் பெண்களிடமே இருந்து வந்தது. அதனால், சேமிப்பிலும் பெண்கள் திறமைசாலிகள்தாம். இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் வேலை பார்க்கிறார்கள்; நிறைய சம்பாதிக்கிறார்கள். சேமிப்பு வேறு, பணத்தைப் பெருக்குவது என்பது வேறு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணம், பாதுகாப்பான ஓய்வுக்காலம் போன்ற நீண்டகால கனவுகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்ல தேர்வு.

மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே, அதில் ரிஸ்க் இருக்குமே என்று நினைக்கலாம். சில விஷயங் களில் தெளிவாக இருந்தால், ரிஸ்க்கைவிட லாபமே அதிகமாகக் கிடைக்கும்’’ என்றவர், அதற்கான வழிமுறைகளை விளக்க ஆரம்பித்தார்.

“மியூச்சுவல் ஃபண்டுகள் செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்வது எளிது. கார் என்பதை முதலீடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த காரை நாமே ஓட்டினால் பங்குச் சந்தை. ஒரு டிரைவர் வைத்து ஓட்டினால், மியூச்சுவல் ஃபண்ட். அவ்வளவு தான் வித்தியாசம். விஷயம் தெரிந்த ஒருவர் / ஒரு நிறுவனம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.

சேமிப்பு மட்டும் போதுமா... 
பணத்தைப் பெருக்க என்ன வழி? - 
நிதி ஆலோசகரின் வழிகாட்டல்!
Matrix Images

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, பெண்களுக்கென்று, ஆண்களுக்கென்று எனத் தனித்தனியாகக் கிடையாது.

ஒரு ஃபண்டை பெண்களுக்கானது என்று யாரேனும் விளம்பரம் செய்தால், அதை நம்பாதீர்கள். எந்த ஃபண்டிலும் பெண்கள் அவரவர் தேவைக்கேற்ப முதலீடு செய்யலாம். மாதம்தோறும் 1,000 ரூபாயைக்கூட முதலீடு செய்யலாம். ஆனால், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

சந்தைக்குப் புதிதாக வரும் ஃபண்டு களுக்கு கடந்தகால லாப வரலாறு என்று ஒன்று இருக்காது. ஆகையால் ஏற்கெனவே சந்தையில் உள்ள, லாப வரலாறு கொண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. நீண்ட கால முதலீடா, குறைந்த கால முதலீ டா என முடிவெடுத்து அதற்கேற்ற ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். தவிர, எந்த நோக்கத்துக்காக முதலீடு செய்யவிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் ஃபண்டைத் தேர்ந்தெடுக்க லாம்.

அதாவது, அடுத்த வருடம் பிள்ளையின் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டுவதற்காக மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட விருக்கிறீர்கள் என்றால், ஓவர் நைட் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட் மாதிரி ரிஸ்க் குறைவானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ரிட்டர்ன் குறைவாகக் கிடைக்கும் என்றாலும் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வட்டி கிடைக்கும். இதுவே ஐந்து வருடங்கள் கழித்துதான் பணம் தேவைப்படும் என்றால், ஈக்குவிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

இப்போதுதான் முதல் தடவையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய் கிறீர்கள் என்றால், நீங்கள் முதலீடு செய்யவிருக்கிற தொகையை ஈக்கு விட்டி ஃபண்டில் 40 சதவிகிதமும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் 60 சதவிகிதமும் முதலீடு செய்யலாம்.

ஏழு வருடங்கள், 10 வருடங்கள்,

15 வருடங்கள் கழித்துதான் உங்களுக் குப் பணம் வேண்டுமென்றால், ஈக்குவிட்டி ஃபண்டில் 70 சதவிகித மும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் 30 சதவிகிதமும் முதலீடு செய்யலாம். முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவிருக்கிறீர்கள் எனில், சிம்பிளான இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

இதையெல்லாம் கேட்பதற்கு புரிந்தும் புரியாத மாதிரியும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கும். ஆனால், மாதம் ரூ.500, ரூ.1000 என்று முதலீடு செய்யத் தொடங்கினால், எளிதில் புரிய ஆரம்பிக்கும். நல்ல, விஷயம் தெரிந்த நிதி ஆலோசகரின் உதவியுடன் மியூச்சுவல் ஃபண்டில் மெள்ள மெள்ள முதலீடு செய்யத் தொடங்கினால், சேமிப்பு என்பதி லிருந்து முதலீடு என்கிற அடுத்த கட்டத்துக்கு எல்லாப் பெண்களும் செல்ல முடியும். இனிவரும் காலத்தில் இந்த வகையில் செயல் படுவது தான் அனைவருக்கும் சரியானதாக இருக்கும்’’ என்று முடித்தார் வித்யா பாலா.

நீண்ட காலத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும், கூடுதலாக லாபம் சம்பாதிக்க நினைக்கும் பெண்கள் இதைத் தாராளமாகப் பரிசீலிக்க லாமே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன?

வழக்கமான சேமிப்புகளைத் தாண்டி முதலீட்டில் விருப்பம் உள்ளவர்கள் பங்கு வர்த்தகத்தில் பணம் போட விரும்பலாம். பங்கு வர்த்தகம் பற்றித் தெரியாதவர்கள் மற்றும் அதிலிருக்கிற ரிஸ்க்கைப் பார்த்து அஞ்சுபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நல்ல தீர்வு. இவர்கள், இதற்கென இருக்கும்

அரசு அனுமதி பெற்ற முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். அந்த முதலீட்டு நிறுவனங்கள்,

ஒரே நோக்கம் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, அந்தத் தொகையைப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து, முதலீட்டைப் பெருக்கும். அந்த முதலீடு மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியைச் சேவைக் கட்டணமாகத் தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்ட்டின் அடிப்படை.

உங்களுடைய மியூச்சுவல் ஃபண்டை நிர்வாகம் செய்பவர்கள், பலருடைய பெரும் தொகைகளை முதலீடு செய்வதால், பல்வேறு பங்குகளில் முதலீட்டைப் பரவலாகப் போட்டு, ரிஸ்க்கைக் குறைப்பார்கள். தவிர, பங்கு வர்த்தகம் தொடர்பாக அவர்களுக்குக் கிடைக்கும் தகவல் களின் தரம் மற்றும் அவர்கள் முதலீடுகளில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைப் பொறுத்து முதலீட்டாளர்களான உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் லாபம் அடைவதால்தான் இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயர். தமிழில் `பரஸ்பர நிதி'.