Published:Updated:

லாபமெல்லாம் அப்புறம்... வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே பிரதானம்!

 ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

கைத்தறி பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா

லாபமெல்லாம் அப்புறம்... வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே பிரதானம்!

கைத்தறி பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா

Published:Updated:
 ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

எத்தனையோ துணிக்கடைகள் தொடங்கப் படுகின்றன.... தொடங்கிய வேகத்திலேயே மூடவும் படுகின்றன. கொரோனா காலத்தில் தொழில்முனைவோர் பலரும் பிசினஸை சமாளிக்க முடியாமல் மூடுவிழா கண்ட நிலையில், அந்தச் சூழலிலும் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா. இன்ஜினீயரான இவர், இன்று சக்சஸ்ஃபுல் பிசினஸ்வுமன்.

“2011 -ம் வருஷம் இன்ஜினீயரிங் முடிச்சேன். அடுத்த வருஷமே கல்யாணம். காலையிலேருந்து சாயந்திரம் வரை பார்க்கும் ஐடி வேலைகள்ல எனக்கு விருப்பமில்லை. சின்ன வயசுலேருந்து எம்ப்ராய்டரிங், டிசைனிங் எல்லாம் பிடிக்கும். என் வேலையும் எனக்குப் பிடிச்ச விஷயங் களை அடிப்படையா கொண்டதா இருக் கணும்னு ஆசைப்பட்டேன். பிசினஸ் தொடங் கணும்ங்கிற என் ஆசையை கணவர்கிட்ட சொன்னேன். அதுக்கு அவர் ‘நான் உனக்கு 5,000 ரூபாய் முதலீடா தரேன். அதை வெச்சு பிசினஸை தொடங்கு. அடுத்தகட்டத்துக்கு கொண்டு போனாலும் சரி, ஃபெயிலிய ரானாலும் பிரச்னையில்லை’ன்னு சொன் னார். 500 ரூபாய்க்கு மெட்டீரியல் வாங்கி, ஃபேஸ்புக் மூலமா 700 ரூபாய்க்கு வித்தேன். அதை மறுபடி பிசினஸ்லயே முதலீடு செய் தேன்.

பல இடங்கள்ல செயற்கை கருவிகளைப் பயன்படுத்தி நெசவு செய்யறாங்க. கைத்தறி நெசவு செய்யும் குடும்பங்களை நேர்ல போய் பார்த்தபோது, அந்தக் குடும்பங்கள் கைத்தறி நெசவை மட்டுமே நம்பி இருக்கிறது தெரிஞ்சது. அவங்களை ஆதரிக்கணும்கிற எண்ணத்துல கைத்தறி சேலைகளை மட்டும் விற்பனை செய்யணும்னு முடிவெடுத்தேன்.

லாபமெல்லாம் அப்புறம்... வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே பிரதானம்!

2012-ல ‘பாரிஜாத் கலெக்‌ஷன்ஸ்’னு எங்க பிராண்டை உருவாக்கினோம். காஞ்சிபுரம், கர்நாடகா, ஆந்திரா, விசாகபட்டினம்னு பல பகுதிகள்ல உள்ள நெசவாளர்களையும் நேர்ல சந்திச்சு, கைத்தறி சேலைகளை வாங்கிட்டு வந்தோம். கணவர் சொன்னபடி, பிசினஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோறதுக்கான முயற்சிகள்ல ஆர்வம் காட்டத் தொடங்கி னேன்...’’ அறிமுகம் சொல்கிற ஐஸ்வர்யா, சேலைகளை விற்பனை செய்வதற்கு முன் அவற்றை படங்கள் எடுப்பதற்காக போட்டோகிராபி கற்றுக் கொண்டிருக் கிறார்.

‘`அது மட்டுமில்லை, ஆன்லைன் வியாபார நுணுக்கங்களைக் கத்துக் கிட்டேன். இன்னிக்கு எங்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, யு.எஸ், யு.கேனு உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் இருக்காங்கன்னா அதுக்கு என் முயற்சி யும் முனைப்பும்தான் காரணம். கொரோனா லாக்டௌன் காலத்துல வேலைக்கு ஆட்களே இல்லாத நிலையிலும் நான் தனி ஆளா, ரெண்டு வயசுக் குழந்தையைத் தூக்கி வெச்சுக் கிட்டே பிசினஸை கவனிச்சிருக்கேன். கைத்தறி பிடிக்காத பெண்களே இருக்க மாட்டாங்க. அந்த வகையில எங்களுக்கு சாமானிய பெண்கள் முதல் நாடாளு மன்ற உறுப்பினர் அனுபிரியா பட் டேல்னு பிரபலங்கள்வரை பலரும் வாடிக்கையாளர்களா இருக்காங்க....’’ என்கிறார் பெருமையாக.

லாபமெல்லாம் அப்புறம்... வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே பிரதானம்!

ஆரம்பித்த வேகத்தில் பிசினஸை விட்டு விலகுபவர்களுக்கு ஐஸ்வர்யா சொல்வது அவசியமான அட்வைஸ்....

‘`எடுத்ததும் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. கஸ்டமர்ஸை சம்பாதிக்கிறது தான் முக்கியம். அதைவிட முக்கியம் அவங்க நம்பிக்கையை சம்பாதிக்கிறது. நாம பண்ற பிசினஸ் சம்பந்தமா வேற சில திறமைகளையும் நுணுக்கங்களை யும் கத்து வெச்சிருக்கிறதும் அவசியம். தொடர் முயற்சியும் பொறுமையான அணுகுமுறையும் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும், எனக்குக் கொடுத்த மாதிரி...’’ என்பவரின் பேச்சில் சாதித்த பெருமை.