அத்திவரதர் முதல் அமித் ஷா வரை இந்த வருட நவராத்திரி கொலு பொம்மைகளில் ஏகப்பட்ட புது வரவுகள். மற்ற யாருக்கும் கிடைக்காத கலெக்ஷனாக இருக்க வேண்டும் எனத் தேடித் தேடி வாங்குவோர் பலர். அப்படித் தேடிப்பிடித்து வாங்கினாலும் அவை உங்கள் வீட்டை மட்டுமே அலங்கரிக்கும் என்று சொல்ல முடியாது. நீங்களே உங்கள் கைப்பட பொம்மைகள் தயாரித்து கொலுவில் வைத்து அலங்கரித்தால்? அதிலும் அவை சுற்றுச்சூழலுக்கு உகந்த எக்கோ ஃபிரெண்ட்லி பொம்மைகளாக இருந்தால்?

‘அது சூப்பர் ஃபீலிங்காச்சே...’ என்பவர்களுக்குச் சுற்றுச்சூழலை பாதிக்காத பொம்மைகள் செய்வதில் பயிற்சி கொடுத்து, அவற்றைவைத்து பிசினஸ் செய்வதற்கான ஐடியாவை யும் பகிர்கிறார் சென்னை, பெரியார் நகரைச் சேர்ந்த சாந்தி.

‘`பி.எஸ்ஸி பிசிக்ஸ் படிச்சிருக்கேன். 20 வருஷங்களா கைவினைக் கலைகள் செய்திட்டிருக்கேன். சாக்லேட் மேக்கிங், கேண்டில் மேக்கிங்னு பல விஷயங்கள் தெரிஞ்சாலும் பொம்மைகள் பண்றது என்னுடைய ஸ்பெஷாலிட்டி. ஒவ்வொரு நவராத்திரிக்கும் வித்தியாசமான பொம்மைகள் செய்வேன். இந்த வருஷம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொம்மைகள். இந்தப் பொம்மைகளின் சிறப்பே தனித்தன்மைதான். சமையல். கோலம் மாதிரியான விஷயங்கள் எப்படி ஒவ்வொருத்தரின் கைவண்ணத்தைப் பொறுத்து அமையுமோ, அதே மாதிரி இந்தப் பொம்மைகளும் அவரவர் திறமைக்கேற்ப மெருகேறுபவை’’ என்கிறார் சாந்தி.

என்னென்ன தேவை? முதலீடு?

பொம்மைகளின் முகங்களுக்கான மோல்டுகள் (இவை கண், மூக்கு எல்லாம் வரையப்பட்டு ரெடிமேடாகவே கிடைக்கின்றன), உபயோகிக்காத, வீட்டிலிருக்கும் ஜாக்கெட் துணிகள், அலங்கார துணிகள், இலவம் பஞ்சு, கம்பி, பேஸுக்கான கட்டை, ரெடிமேடு முடி, ஊசி, நூல், சமிக்கி, நகைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள்... இப்படி ஒரு பொம்மைக்குக் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய்.

என்ன ஸ்பெஷல்?

கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் பொம்மைகளில் அவற்றைச் செய்தவர்களின் கிரியேட்டிவிட்டிதான் பிரதானமாக இருக்கும். இந்தப் பொம்மை களை உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப உருவாக்கலாம். அதாவது கடவுள் உருவங்கள் மட்டுமன்றி. காய்கறி விற்பவர், குயவர், பொற்கொல்லர், நடனக் கலைஞர் என உங்கள் வீட்டு கொலுவில் இடம்பெற வேண்டும் என நீங்கள் நினைக்கும் எந்த உருவத்தையும் நீங்களே உங்கள் கைப்படச் செய்யலாம். அவர்களின் உடை மற்றும் நகை அலங்காரங்களும் உங்கள் சாய்ஸாக இருக்கும். இவை முழுக்க முழுக்க உங்கள் கைகளால் தயாரானவை என்பது கூடுதல் சிறப்பாக இருக்கும். இந்தப் பொம்மைகளை நீங்கள் விற்பனை செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கேற்றபடி செய்து தர முடியும். எல்லாவற்றையும்விட சூழலைப் பாதுகாப்பதில் உங்கள் பங்கும் சேர்வதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது!

விற்பனை வாய்ப்பு? லாபம்?

500 ரூபாய் முதலீடு போட்டுச் செய்கிற ஒரு பொம்மையை 1,000 ரூபாயிலிருந்து விற்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு பொம்மைகள் செய்யலாம். நவராத்திரி சீசனில் அதிக விற்பனை இருக்கும். மற்ற நாள்களில் கல்யாணங்களுக்கு சீர்வரிசைத் தட்டில் வைக்க ஆர்டர் எடுக்கலாம். பாரம்பர்ய பொம்மைகளை விற்கும் கடைகளில் ஆர்டர் வாங்கலாம். ஆன்லைனில் விற்க சூப்பராக பிசினஸ் ஆகும்.

பயிற்சி?

ஒரு பொம்மைக்கான அடிப்படையைத் தெரிந்துகொண்டாலே அவரவர் விருப்பம் மற்றும் கற்பனைக்கேற்ப நிறைய செய்ய முடியும். 12 - 15 இன்ச் பொம்மை செய்யக் கற்றுக்கொள்ளத் தேவையான பொருள்களுடன் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் 1,500 ரூபாய்.