Published:Updated:

இந்தியாவிலிருந்து இன்னொரு CEO; பிரான்ஸின் `சேனல்' நிறுவனத்தின் CEO-வாகும் லீனா நாயர்!

லீனா நாயர்
News
லீனா நாயர் ( Twitter Photo: @LeenaNairHR )

லீனா, தங்கள் நிறுவனத்தில் சேரவிருக்கும் அறிவிப்பை வெளியிட்ட சேனல் குழுமம், ஜனவரியில் லீனா தங்கள் குழுமத்தில் சேரவிருப்பதாகத் தெரிவித்தது. மேலும், தங்கள் தனியார் நிறுவனத்தின் நீண்ட கால வெற்றிக்கு லீனா நாயரின் இந்த நியமனம் வழிவகுக்கும் என்று சேனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல பிரெஞ்சு நிறுவனமான சேனல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் லீனா நாயர். இது சம்பந்தமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது சேனல் குழுமம்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் கோலாபூரைப் பூர்வீகமாகக் கொண்ட லீனா நாயர், தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பை பொறியியல் துறையில் முடித்துவிட்டு, சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் (XLRI) தன்னுடைய பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். இங்கு, சிறப்பான செயல்பாட்டிற்காக லீனாவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

Chanel
Chanel

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படிப்பு முடிந்து பட்டம் பெற்றவுடன் ஹிந்துஸ்தான் யூனிலிவரில் பணிக்குச் சேர்ந்த லீனா , படிப்படியாக உயர்ந்து 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக உயரிய பொறுப்புக்குச் சென்றார். இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையும், ஆசியாவைச் சேர்ந்த முதல் ஆள் என்ற பெருமையும் லீனாவை பெற்றார்.மிக இளம் வயதிலேயே இந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவரே.

இந்நிலையில், ஃபேஷன் நிறுவனமான சேனலின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் லீனா நாயர். லீனாவைப் பற்றி அவர் முன்பு பணியாற்றிய யூனிலீவரின் தலைமைச் செயல் அதிகாரி ஆலன் ஜோப் கூறுகையில், ``கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்காக லீனா செய்த பங்களிப்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது" என்றார்.

லீனா நாயர்
லீனா நாயர்
Facebook Photo: Leena Nair

லீனா, தங்கள் நிறுவனத்தில் சேரவிருக்கும் அறிவிப்பை வெளியிட்ட சேனல் குழுமம், ஜனவரியில் லீனா தங்கள் குழுமத்தில் சேரவிருப்பதாகத் தெரிவித்தது. மேலும், தங்கள் தனியார் நிறுவனத்தின் நீண்ட கால வெற்றிக்கு லீனா நாயரின் இந்த நியமனம் வழிவகுக்கும் என்று சேனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவிலான ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியை நம் நாட்டைச் சேர்ந்த பெண் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தானே!