தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்!

இன்ஸ்டாகிராம் பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்டாகிராம் பிசினஸ்

எனக்கு பூர்வீகம் கேரளா. ஆறு மாசத்துலேருந்து அஞ்சு வயசு வரை உள்ள குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கிறது தான் என் பிசினஸ்

ஃபேஸ்புக், யூடியூபைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்பவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் கலக்கும் சில பிசினஸ் பெண்களின் அனுபவங்கள் உங்களுக்காக...

இன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்!

சஜ்லா

“எனக்கு பூர்வீகம் கேரளா. ஆறு மாசத்துலேருந்து அஞ்சு வயசு வரை உள்ள குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கிறது தான் என் பிசினஸ் . எம்.டெக் படிச்சுட்டு தனியார் கல்லூரியில் பேராசிரியரா வேலை பார்த்துட்டு இருந்தேன். ஆர்வத்துல ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன். கல்யாணமாகி வெளிநாட்டுல செட்டில் ஆனதால் தொடர்ந்து ஆடை வடிவமைப் பில் கவனம் செலுத்த முடியாமப் போச்சு. என் மகள் பிறந்த பிறகு, மறுபடி கேரளா வந்தோம். வேலைக்குப் போனா குழந்தையை சரியா பார்த்துக்க முடியாது. அதனால் வீட்டிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு நினைச்சு, குழந்தை களுக்கான ஆடைகள் வடிவமைப்பை தொடங்குனேன். ‘யாரா பொட்டிக்’னு இன்ஸ்டாகிராமில் அக்கவுன்ட் தொடங்கு னேன். ஐயாயிரம் ரூபாயும் ரெண்டு தையல் மெஷினும்தான் என்னுடைய முதலீடு. நான் டிசைன் செய்யும் எல்லா ஆடை களையும் மொபைலில் போட்டோ எடுத்து என் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் அப்டேட் பண்ணிட்டே இருந்தேன். வெளிநாடுகள்லேருந்துகூட ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. ராதிகா மேடம் உட்பட பல பிரபலங்களின் குழந்தைகளுக்கு டிரஸ் ரெடி பண்ணிக்கொடுத்திருக்கேன். இன்ஸ்டாகிராம்ல பிசினஸ் பண்ணும்போது, உங்க வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்வி களுக்கு உடனே ரிப்ளை பண்ணீங்கன்னா குறைஞ்ச முதலீட்டுல சக்சஸ் சாத்தியமே.’’

இன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்!

சாரா கணேஷ்

“கோயம்புத்தூர்ல பி.இ முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்திட்டிருந்தேன். பிசினஸ் தொடங்கணும் என்பது கனவு. மேக்கப் சார்ந்து சில கோர்ஸ் படிச்சேன். நான் மேக்கப் செய்துவிடும் சில மணப்பெண்களுக்கு நானே புடவை கட்டிவிடுவேன். புதுசா புடவை கட்டும் போது ‘புடவை வசதியா இல்ல, நடக்க முடியலை’னு நிறைய பேர் சொல்லுவாங்க. இந்தப் பிரச்னைகளுக்கு விடை தேடினபோதுதான், வெளிநாடுகள்ல ஷேப் வியர்களை உள்பாவாடைகளுக்கு பதிலா பயன் படுத்துறது தெரியவந்துச்சு. இந்தியாவில் அப்போ ஷேப்வியர் பெரிய அளவில் கிடைக்க்லை. அதனால் அதை நானே ரெடி பண்ற ஐடியா வந்தது.

வெவ்வேறு அளவுகள்ல ஷேப் வியர்கள் தைச்சு, மணப்பெண்களுக்குக் கொடுத்துப் பார்த்தேன். பாசிட்டிவ் கமென்ட்ஸ் கிடைச்சதும் 50,000 ரூபாய் முதலீட்டுல ஷேப்வியர் பிசினஸை தொடங்கினேன். என்னால நிறைய செலவு பண்ணி விளம்பரம் செய்ய முடியல. அதனால் நானே சமூக வலை தளங்கள் மூலம் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சேன். இன்ஸ்டாகிராம்ல ஸ்டோரீஸ், ரீல்ஸ் போட ஆரம்பிச்சேன். அது எனக்கு ஃபாலோயர்களும் வாடிக்கையாளர்களும் அதிகரிக்க கைகொடுத்துச்சு. இப்போ ரெடிமேடு பிளவுஸ் களும் விற்க ஆரம்பிச்சிருக் கேன். வருஷத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை வருமானம் வருது. தனித்துவமான ஐடியா இருந்தா ஆன்லைன் பிசினஸ்ல வெற்றி நிச்சயம்.’’

இன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்!

அஃப்ரிதா

``எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர். கல்யாணத் துக்குப் பிறகு, மார்த்தாண்டத் தில் செட்டில் ஆகிட்டேன். என் கணவர் ஷூக்கள் தயாரிக்கும் நிறுவனம் வெச் சிருக்கார். கணவர் நிறுவனத் தில் இருந்து காலணிகள் வாங்கி, அதில் கஸ்டமர்கள் நினைக்கும் நிறம், டிசைன் களை உருவாக்கித் தரும் பிசினஸை கையில் எடுத்தேன். ‘காலணி’ங்கிற பெயரில் இன்ஸ்டாவில் அக்கவுன்ட் தொடங்கி காலணிகளின் புகைப்படங் களை அப்டேட் பண்ண ஆரம்பிச்சேன். ஆர்டர்கள் குவியத் தொடங்குச்சு. ஆரம்பத்துல கணவர் பிசினஸ்ல ஒரு பகுதியாக இயங்கிட்டிருந்த நான், இப்போ எனக்குன்னு தனி பிசினஸ் மாடலை உருவாக்கியிருக்கேன். த்ரிஷா, யாஷிகா, சாய் பல்லவி, விஜே அர்ச்சனா உட்பட நிறைய பிரபலங்களுக்கு காலணிகள் தயார் செய்து கொடுத்துருக்கேன். இப்போ மாசம் ரெண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் வருது.’’

இன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்!

சீரின்

“படிச்சது எம்.பி.ஏ. கல்யாணத்துக்குப் பிறகு என் கணவருடைய ரெஸ்டாரன்ட் பிசினஸை பார்த்துக்கிட்டு இருந்தேன். கொரோனா ஊரடங்குல ஹோட்டலை மூட வேண்டி வந்ததால பிசினஸ் இல்லாமல் வீட்டுல இருந்தோம். அந்த நேரத்துல புதுசா ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. ஊரடங்கு நேரத்துல கறி, மீன் வாங்க மக்கள் கூட்டம் குவிஞ்சதைப் பார்த்தோம். அதனால ஆன் லைன்ல மீன் வியாபாரம் பண்ணலாம்னு பிளான் பண்ணேன். சென்னை காசிமேடு, கோவிலம்பாக்கத்தில் இருக்குற மீனவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.

முதல்நாள் ஆர்டர் கொடுக்குறவங்களுக்கு மறுநாள் காலையில் ஃப்ரெஷ்ஷான மீன்களை டெலிவரி பண்றதுதான் பிசினஸ் பிளான். ஆரம்பத்துல தெரிஞ்சவங்ககிட்ட இருந்து ஒரு கிலோ, ரெண்டு கிலோனு ஆர்டர் வர ஆரம்பிச்சது. மீனை டெலிவரி பண்ண பிறகு தான் அதுக்கான பணத்தை வாங்குவேன். இப்போ ஒரு நாளைக்கு 75 கிலோ வரை ஆர்டர்கள் வருது. தினமும் காலையில் மூணு மணிக்கே போயி ஃப்ரெஷ் மீன்களை மீனவர்கள்கிட்டருந்து ஏலம் எடுத்து வாங்கு வோம். பிறகு, மீன்களை சுத்தம் செய்து, பேக்கிங் செய்து ஆர்டர் கொடுத்தவங்க வீட்டுக்கு டெலிவரி பண்ணிடுவோம். ரகத்தைப் பொறுத்து ஒரு கிலோ மீன் 300 ரூபாயிலிருந்து 1,400 ரூபாய் வரை இருக்கு. இப்போதைக்கு சென்னைக்குள்ள மட்டும் பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். 30,000 ரூபாய் முதலீட்டுல தொடங்கினது, இன்னிக்கு மாசம் ஏழு லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் பண்ணக்கூடிய பிசினஸா மாறியிருக்கு.”

இன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்!

சங்கீதா

“எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம். எம்.எஸ்ஸி படிச்சிருக்கேன். கிராஃப்ட் வேலைப் பாடுகள் பண்றது ரொம்ப பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸுக்கு ஹேண்ட் மேடு கிஃப்ட் செய்துகொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுவேன். கொரோனா ஊரடங்கு காலத்துல வீட்டை விட்டு வெளிய போக முடியல. நிறைய நேரம் இருந்துச்சு. அதனால் விதவிதமான கிஃப்ட்ஸ் டிசைன் பண்ணேன். என்னோட போன்லயே போட்டோ எடுத்தேன். ‘ஓ மை கிப்ஃட்ஸ்’னு இன்ஸ்டா பக்கத்துல பிசினஸா ஆரம்பிச்சேன். சில பிரபலங்களுக்கு ஸ்பான்சர் பண்ணேன். அப்புறம் நிறைய ஆர்டர் வர ஆரம்பிச்சுது. பொருள்கள் தரமாகவும் க்ரியேட்டிவ்வாகவும் இருந்தா அடுத்தடுத்து ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும். என்னுடைய முதலீடு வெறும் 1,000 ரூபாய்தான், பெரிய அலைச்சல் இல்லாம மாசம் பத்தாயிரத்துக்கும் அதிகமா சம்பாதிக் கிறேன்.’’