“பெண்களே நடத்தும் டெலிவரி சென்டர்... இந்த சவாலைக் கையில் எடுத்தப்போ பயமாதான் இருந்தது. ஆனா, இப்போ சந்தோஷம்தான்!” - உற்சாகமாக நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ஜமுனா ராணி.

14 பெண்களுடன் சென்னை மணப்பாக்கத்தில் பார்ட்னர்ஷிப்பில் அமேசான் நிறுவனத்தோடு டெலிவரி சென்டர் நடத்திவரும் ஜமுனா ராணியைச் சந்தித்தோம்.

“நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர். படிச்சு முடிச்சிட்டு பத்து வருஷமா ஐ.டி ஃபீல்டுல வேலைபார்த்துட்டிருந்தேன். கல்யாணமாகி குழந்தை பிறந்த பிறகு, ஒருகட்டத்துக்கு மேல குடும்பத்துக்குன்னு தனியா நேரம் செலவழிக்க முடியாம போச்சு. தினமும் 12 மணி நேர ஷிப்ட். அதனால வேலையை விட்டுட்டேன். புதுசா ஏதாவது பண்ணணும்னு யோசிச்சிட்டு இருந்தப்போ, 2016-ல் அமேசான்லேருந்து பெண்கள் மட்டுமே நிர்வகிக்கிற டெலிவரி சென்டர் என்கிற ஒரு திட்டம் கொண்டுவந்தாங்க. எனக்கு பிசினஸ் பண்றதுல ஆர்வம் இருந்ததால இந்த டெலிவரி சென்டரைத் தொடங்க முயற்சி செய்தேன். உடனே ஓகே ஆகிடுச்சு. இந்த சென்டரைத் தொடங்குறப்போ நாலு பேர்தான் இருந்தோம். இப்போ 14 பேர் இருக்கோம்” என்று வெற்றிக் குரலில் பேசுகிறார் ஜமுனா ராணி.

மணப்பாக்கத்தை சுற்றி ஏழு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வரும் இடங்களில் தினமும் 500-ல் இருந்து 650 பார்சல்கள் வரை டெலிவரி செய்கிறார்கள் இந்தப் பெண்கள்.

“இப்போ நிறைய பெண்கள் டெலிவரி சர்வீஸ் துறையில இருக்காங்க. நாங்க தொடங்கினப்போ இதில் பெண்களே கிடையாது. முதல்ல, எப்படி இதைச் செய்யப் போறோம்னு பயந்தோம். இப்போ நிறைய நம்பிக்கை வந்திருக்கு” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் கோமதி, இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்தே பணியாற்றுகிறார்.

“நான் கடந்த ஒரு வருஷமா இங்கே வேலை பார்க்கிறேன். இந்த வேலை எனக்கு நிறைய சந்தோஷத்தைக் கொடுக்குது. வழக்கமா ஏதாவது டெலிவரி பண்ண ஆண்கள் தான் இருப்பாங்க. பல அடுக்குமாடிக் குடியிருப்புகள்ல பகல் நேரத்துல பெண்கள்தான் வீட்டுல இருப்பாங்க. அப்போ டெலிவரிக்கு நாங்க போகும் போது அங்கிருக்கும் பெண்கள் ரொம்ப நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் உணர்றதா சொல்றாங்க” என டெலிவரி வுமனாகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் கீர்த்திகா.

“இங்க வேலை பார்க்கிறவங்களுக்கு முழுமையான சுதந்திரம் இருக்கும். காலையில டெலிவரி முடிச்சிட்டு வந்து, வீட்டுல போய் அவங்க சொந்த வேலைகளைப் பார்த்துட்டு. திரும்ப மதியம் டெலிவரிக்கு வருவாங்க. இதனால வீட்டுல ரொம்ப நேரம் செலவழிக்க முடியலையேங்கிற கவலையும் இல்லை” என்கிற ஜமுனா ராணிக்கு தம்ஸ் அப் காட்டுகிறார்கள் டெலிவரி பணியாளர்கள்!